இந்த நாள் இனிய நாள்இன்றைய ராசி பலன் புதன்கிழமை 06 செப்டம்பர் 2023)
சோபகிருது வருடம் ஆவணி மாதம் 20 ஆம் தேதி புதன்கிழமை 6.9.2023,சந்திர பகவான் இன்று ரிஷப ராசியில் பயணம் செய்கிறார். இன்று இரவு 09.13 வரை சப்தமி. பிறகு அஷ்டமி . இன்று மாலை 03.24 வரை கிருத்திகை. பிறகு ரோகிணி. சித்திரை சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சந்திராஷ்டமம். சற்று கவனமுடனும் எச்சரிக்கையுடனும் நடந்துகொள்வது அவசியம்.
மேஷம் : முக்கியமான முடிவுகள் எடுப்பதை தவிர்க்கவும். மகிழ்ச்சியற்ற மற்றும் பாதுகாப்பற்றதுமான உணர்வு சிறிதளவு காணப்படும். தளர்வாகவும் அமைதியாகவும் இருப்பது நல்லது. பயனுள்ள வகையில் பணத்தை உங்களால் செலவழிக்க இயலாது. பலன்கள் உங்களுக்கு சாதகமாக அமைய கடின உழைப்பு வேண்டும். பணியிடத்தில் சில தவறுகள் செய்ய நேரலாம்.
ரிஷபம் : உங்கள் செயல்களை பொறுமையான முறையில் கையாள வேண்டும். எதிர்மறை விளைவுகளை தவிர்க்க இசை கேட்டல், திரைப்படங்கள் பாரத்தல்; போன்ற கேளிக்கை நிகழ்ச்சிகளில் உங்களை ஈடுபடுத்திக் கொள்ளுங்கள். உங்கள் பணியில் நல்ல தரத்தை நீங்கள் பராமரிக்க இயலாது. அதிக செலவினங்கள் காணப்படும். தடைகள் காரணமாக ஸ்திரத்தன்மை குறைந்து காணப்படும்.
மிதுனம் : உங்கள் சுய வளர்ச்சியில் தடைகள் காணப்படும். அமைதியான அணுகுமுறை மிகவும் அவசியம். தியானம் மேற்கொள்வது உங்களுக்கு மிகவும் நல்லது. உங்கள் பணி உற்சாகப்படுத்தும் வகையில்அமையாது. பணம் குறைந்த அளவில் காணப்படும். பணஇழப்புகள் நேர வாய்ப்பு உள்ளது. பணத்தை கையாளும் பொழுது கவனம் தேவை.
கடகம் : உங்கள் சுய முயற்சியின் மூலம் வெற்றி காண்பீர்கள். அதே சமயத்தில் நீங்கள் சில சமயங்களில் திருப்திகரமற்ற நிலையை உணர்வீர்கள். எனவே உயர்ந்த தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்வது நல்லது. பணியில் பிரகாசிப்பீர்கள். குறித்த நேரத்தில் பணியை முடிப்பீர்கள். பணவரவு அதிகமாகக் காணப்படும். ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.
சிம்மம் : உங்களிடத்தில் நிறைந்திருக்கும் ஆர்வம் காரணமாக செயல்களை விரைவாக செய்து முடிப்பீர்கள்.உங்கள் நலனுக்கான பயனுள்ள முடிவுகளை எடுப்பதற்கான போதுமான மன ஆற்றல் உங்களிடம் காணப்படும். உங்களிடத்தில் காணப்படும் சிறப்புத் தகுதிகள் காரணமாக உங்கள் பணியை சிறந்த முறையில் ஆற்றுவீர்கள். நீங்கள் அதிக பணத்தை சேமிக்க முடியும். மகிழ்ச்சியின் காரணமாக உங்களிடம் காணப்படும் உற்சாகம் உங்களை துடிப்பாக வைத்திருக்கும்.
கன்னி : உங்கள் கவலை மற்றும் பாதுகாப்பற்ற உணர்வுகளை நீங்கள் கட்டுப்படுத்த வேண்டும். எதிர்மறை எண்ணங்கள் கூடாது. இன்றைய நாள் சாதகமான நாளாக இருக்கும், அதிசயங்களை சாதிப்பேன் என்று நினையுங்கள். உங்கள் பணிகளை ஆற்றுவதற்கான தைரியமும் நேர்மறை ஆற்றலும் உங்களிடம் காணப்படும். குறைந்த அளவு பணமே காணப்படும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்காது.
துலாம் : உங்கள் பொறுமை சோதிக்கப்படும். எனவே இன்றைய நாளை திட்டமிடுங்கள். பிரார்த்தனையில் ஈடுபடுத்திக்கொள்வதும் மந்திரங்களை கேட்பதும் உங்களுக்கு நல்வழிகாட்டிகளாக அமையும். உங்களுக்கு சாதகமான முறையில் நேர்மறையான பலன்கைளப் பெறுவதற்கு நீங்கள் ஒழுங்கான முறையிலே வேலை செய்ய வேண்டும். தேவையற்ற செலவினங்களை சந்திக்க வேண்டிய கட்டாயமிருக்கும். சாந்தமாக இருங்கள்.
விருச்சிகம் : இன்று சுதந்திரமான மனநிலையில் இருப்பீர்கள். உங்கள் விருப்பங்கள் நிறைவேறும். நீங்கள் எடுக்கும் முடிவுகள் உங்களுக்கு சாதகமாக அமையும். உங்கள் பணியில் சாதகமான பலன்கள் கிடைக்கும். பணத்தை பொறுத்த வரை இன்பகரமான நிலை இருக்கும் முக்கியமான முதலீடுகளுக்கான முடிவுகளுக்கு இன்றைய நாளை பயன்படுத்திக்கொள்ளலாம். ஆரோக்கியம் சிறப்புடன் காணப்படும்.
தனுசு : இன்று மறக்க முடியாத நாளாக இருக்கக் காண்பீர்கள். உங்கள் இலக்குகளை அமைத்துக் கொண்டு அதில் வெற்றி காணும் நிலை உருவாகும். பணியிடத்தில் சாதகமான சூழலே காணப்படும். நீங்கள் ஆற்றிய பணிக்காக ஊக்கத்தொகை மற்றும் சலுகைகளைப் பெறுவீர்கள். பணவரவு அதிகமாக இருக்கும். நிதியைப் பொறுத்த அளவில் சுதந்திரமாக இருப்பதற்கான திறனை உங்களால் வளர்த்துக் கொள்ள முடியும். நல்ல ஆரோக்கியத்தை பராமரிப்பீர்கள்.
மகரம் : இன்று தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்ள வேண்டும். மன எழுச்சிக்கு இடம் அளிக்காதீர்கள். உங்கள் அணுகுமுறையில் தளர்வாக இருங்கள். தியானம் மேற்கொள்வது நல்லது. பணிகள் கடுமையாகவும்; அதிகமாகவும் காணப்படும். செலவினங்கள் அதிகமாகக் காணப்படும். வீட்டுப் புணரமைப்பிற்காக அவசியம் செலவு செய்ய வேண்டியிருக்கும்.
கும்பம் : இன்று உங்கள் விருப்பங்கள் நிறைவேறும் வகையில் நீங்கள் செயல்களை செய்யலாம். முக்கியமான முடிவுகள் எடுப்பது இன்று நற்பலன்களைத் தரும். குறித்த நேரத்தில் பணிகளை முடிக்க இயலாது. குறைந்த அளவில் பணம் காணப்படும். தேவையற்ற செலவினங்களை எதிர்கொள்ள நேரும். திறமையாக பணத்தைக் கையாள வேண்டியது அவசியம்.
மீனம் : விஷயங்கள் உங்களுக்கு சாதகமாக அமைய நல்ல திட்டமிடலும் உறுதியும் கொண்டு செயல்பட வேண்டும். முக்கியமான முடிவுகள் எடுப்பதை தவிர்க்கவும். பணியிடத்தில் சாதகமான சூழலே காணப்படும். குறைந்த நேரத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். உங்களிடம் அதிக அளவில் பணம் இருக்கும். பயனுள்ள நோக்கங்களுக்காக பணத்தை செலவு செய்வீர்கள். மகிழ்ச்சியான மனநிலை காரணமாக முழு ஆரோக்கியத்துடன் இருப்பீர்கள்.