எம்.ஜி.வல்லபன்
தெரிந்த பாடல்கள்- தெரியாத பாடலாசிரியர்..!
எம்.ஜி.வல்லபன் என்ற சிறந்த பாடலாசிரியரை நிறைய பேர்
அறிந்திருக்க மாட்டார்கள்..! மறைந்த மூத்த பத்திரிக்கையாளரான எம்.ஜி.வல்லபன் அவர்கள் இசைஞானியில் இசையில் மிக மிக இனிமையான இன்றும் நம் தினசரி ரசிக்கும் பல பாடல்களை எழுதியுள்ளார்…!
அவற்றை சற்றே நினைவு கூர்வோம்..!
1. மீன் கொடித் தேரில் மன்மத ராஜன் ஊர்வலம் போகின்றான்- படம் கரும்பு வில்
2. ஆகாயகங்கை பூந்தேன் மலர் சூடி
– படம் தர்மயுத்தம்
3.மலர்களே நாதஸ்வரங்கள்- படம் கிழக்கே போகும் ரயில்
4.தீர்த்தக்கரைதனிலே -படம் தைப்பொங்கல்
5.என்னோடு பாட்டு பாடுங்கள்- படம் உதயகீதம்
6. மெல்ல மெல்ல என்னைத் தொட்டு
– படம் வாழ்க்கை
7. பூ மேல வீசும் பூங்காற்றே
– எச்சில் இரவுகள்
8.கண் மலர்களின் அழைப்பிதழ்
படம் – தைப்பொங்கல்
9. சோலைக்குயிலே காலைக்கதிரே
– படம் பொண்ணு ஊருக்கு புதுசு
இந்த பாடல்களை கேட்கும் போது ,நமக்கு இசைஞானி ஞாபகம் வந்தாலும், இந்த பாடல்களுக்கு பின்னால் முகம் தெரியாத பாடலாசிரியர் எம்.ஜி வல்லபன் அவர்களும் உள்ளார் என்பதை மறுக்கமுடியாது..!
பாடலாசிரியர் எம்.ஜி.வல்லபன் அவர்கள் கேரள மாநிலம் திருச்சூரில் பகுதியில் பிறந்தவர்..! தமிழை தாய்மொழியாக கொண்டிராதவர், குடிப்பெயர்ந்து தமிழ்நாட்டிற்கு வந்தவர், இந்த அளவுக்கு காலத்தால் அழியா தமிழ்ப்பாடல்களை அதுவும் இசைஞானியின் இசையில் எழுதியுள்ளது உண்மையிலேயே மிகுந்த பாராட்டுக்குரியது..!
– ஈசன் டி.எழில் விழியன்