பள்ளி நண்பர்களை சந்தித்து மகிழ்ந்த நடிகர் தனுஷ்!
நடிகர் தனுஷ் அடுத்தடுத்த சிறப்பான படங்களில் நடித்து வருகிறார். தற்போது தன்னடைய டி50 படத்தை இயக்கி வருகிறார். அடுத்ததாக அவரது நடிப்பில் அருண் மாதேஸ்வரன் இயக்கியுள்ள கேப்டன் மில்லர் படம் டிசம்பர் மாதத்தில் ரிலீசாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ், தெலுங்கு, இந்தி, ஹாலிவுட் என அடுத்தடுத்த மொழிகளில் தனுஷ், சிறப்பான பல படங்களை கொடுத்து வருகிறார். கமர்ஷியல் படங்களில் மட்டுமில்லாமல் அழுத்தமான கதைக்களங்களிலும் தனுஷ் நடித்து வருகிறார்.
நடிகர் தனுஷ், கோலிவுட், டோலிவுட், பாலிவுட் மற்றும் ஹாலிவுட் படங்களில் அடுத்தடுத்து கமிட்டாகி சிறப்பான படங்களை கொடுத்து வருகிறார். சமீபத்தில் அவரது நடிப்பில் தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியான வாத்தி படம் சிறப்பான வசூலையும் வரவேற்பையும் பெற்றது. இந்தப் படத்தின்மூலம் டோலிவுட்டிலும் தன்னை சிறப்பான ஹீரோவாக நிலைநிறுத்தியுள்ளார். தற்போது அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லர் படத்தில் நடித்து முடித்துள்ளார். தீபாவளி ரிலீசாக வெளியாகவுள்ளதாக கேப்டன் மில்லர் முன்னதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் சூட்டிங்கில் ஏற்பட்ட தாமதம் காரணமாக தற்போது கிறிஸ்துமஸ் விடுமுறையை முன்னிட்டு படம் வெளியாகவுள்ளது. பீரியட் படமாக உருவாகியுள்ள கேப்டன் மில்லர் படத்தின் போஸ்டர் மற்றும் டீசர் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. மிரட்டலான இந்த அப்டேட்களை அடுத்து இந்தப் படத்திற்கான அதிகமான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே ஏற்பட்டுள்ளது.
கேப்டன் மில்லர் படத்தின் சூட்டிங் நிறைவடைந்து தற்போது படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. படத்தின் போஸ்ட் புரொடக்ஷன்ஸ் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இதனிடையே, தன்னுடைய அடுத்தப்படத்தின் சூட்டிங்கில் இணைந்துள்ளார் தனுஷ். டி50 படத்தை இயக்கி நடிக்கவும் செய்து வருகிறார் தனுஷ். இந்தப் படத்தில் எஸ்கே சூர்யா, அபர்ணா முரளி, செல்வராகவன் உள்ளிட்ட நட்சத்திரங்கள் இணைந்துள்ளனர். எப்போதும் தன்னுடைய அண்ணன் இயக்கத்தில் தனுஷ் தொடர்ந்து நடித்துவந்த நிலையில், தற்போது செல்வராகவனை தனுஷ் இந்தப் படத்தின்மூலம் இயக்கவுள்ளார். இந்நிலையில் இந்தப் படத்தின் முழு ஸ்கிரிப்டும் தனக்கு தெரியும் என்றும் மிகவும் நல்ல படம் என்றும் தன்னுடைய சமீபத்திய பேட்டியில் செல்வராகவன் தெரிவித்திருந்தார். சன் பிக்சர்ஸ் இயக்கத்தில் உருவாகிவரும் இந்தப் படம் 100 கோடி ரூபாய் பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக எடுக்கப்பட உள்ளது.
தன்னுடைய பள்ளிப் படிப்பின்போதே, நடிக்க வந்துவிட்டார் நடிகர் தனுஷ். சினிமாவில் வெறித்தனமான உழைப்பை முதலீடாக்கி, தன்னை சர்வதேச அளவில் நிரூபித்துள்ள தனுஷ், தற்போது தன்னுடைய பள்ளி நண்பர்களை மீண்டும் சந்தித்துள்ளார். சமீபத்தில் நடைபெற்ற பள்ளியின் ரீயூனியன் நிகழ்ச்சியில் பங்கேற்ற தனுஷ், பல ஆண்டுகளுக்கு பிறகு அவர்களுடன் உற்சாகமாக கலந்துக் கொண்டு புகைப்படங்களையும் எடுத்துள்ளார்.
மிகவும் சிறிய வயதிலேயே நடிக்க வந்துவிட்டதால், தன்னுடைய பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை தான் மிஸ் செய்தததாக தனுஷ் பல பேட்டிகளில் தெரிவித்துள்ளார். என்னதான் தனியாக, நம்முடைய திறமைகளை வளர்த்துக் கொண்டு, சர்வதேச அளவில் பிரபலமாக இருந்தாலும், அந்த வயதுக்குரிய மாணவர் பருவத்தை அதற்குரிய குறும்புகளை இழப்பது மிகப்பெரிய வேதனைதான். அதை தன்னுடைய பேட்டிகளில் குறிப்பிட்டுள்ளார் தனுஷ். இந்நிலையில் தன்னுடைய பள்ளிகால நண்பர்களை சந்தித்து மகிழ்ந்துள்ளார்.