கோட்டை கொத்தளத்தில் கொடி ஏற்றிய முதல்வர்!
[10:59, 15/08/2023] +91 98844 91545: நாடு முழுவதும் சுதந்திர தின விழா இன்று வெகுவாக கோலாகலமாக கொண்டாடப்பட்டது. தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் தேசிய கொடியினை ஏற்றி மரியாதை செய்தார்.
சென்னை கோட்டை கொத்தளத்தில் சுதந்திர தினவிழா இன்று காலை வெகு விமரிசையாக நடந்தது. சுதந்திர தின கொடி ஏற்றுவதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காலை 8.45 மணிக்கு போலீசாரின் மோட்டார்சைக்கிள் புடைசூழ கோட்டை கொத்தளத்திற்கு வந்தார். அவரை தமிழக தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா வரவேற்று முப்படை தளபதிகளை அறிமுகம் செய்து வைத்தார்.
அதன் பிறகு போலீஸ் டி.ஜி.பி. சங்கர்ஜிவால், சென்னை போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர், கூடுதல் டி.ஜி.பி. அருண் ஆகியோரையும் அறிமுகப்படுத்தி வைத்தார்.
தொடர்ந்து போலீசாரின் சம்பிரதாய அணிவகுப்பு மரியாதையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்றுக் கொண்டார். பின்னர் திறந்த ஜீப்பில் ஏறி போலீசாரின் அணி வகுப்பை பார்வையிட்டார்.
சரியாக 9 மணிக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தேசிய கொடியை ஏற்றி வைத்து வணக்கம் செலுத்தினார். அப்போது வண்ண பலூன்கள் வானில் பறக்க விடப்பட்டன. ஹெலிகாப்டர் மூலம் மலர்கள் தூவப்பட்டது. காவல் துறையினரின் கூட்டு குழல் இசைக்கப்பட்டது. அப்போது சுதந்திர தின விழாவை காண வந்த அனைவரும் எழுந்து நின்று தேசிய கொடிக்கு மரியாதை வணக்கம் செலுத்தினர்.
[11:01, 15/08/2023] +91 98844 91545: இந்த விழாவில் அமைச்சர்கள், ஐகோர்ட்டு நீதிபதிகள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், வெளிநாட்டு தூதர்கள், அரசு துறை அதிகாரிகள், பொதுமக்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.