தேசிய கைத்தறி தினம்
தேசிய கைத்தறி தினம்
சுதேசி இயக்கம் 1905 ம் ஆண்டு ஆகஸ்ட் 7 ம் தேதி தொடங்கப்பட்டதைக் கொண்டாடிடும் வகையில் இந்த ஆண்டு முதல் ஆகஸ்ட் 7ம் நாள் தேசிய கைத்தறி தினமாகக் கொண்டாடப் படும் என அறிவித்தது மத்திய அரசு.
கைத்தறி நெசவாளர்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் முதல் தேசிய கைத்தறி விழா கொண்டாடப்படுமென அறிவித்த அரசு அதனை 2015ல் தமிழகத்தின் சென்னையில் சிறப்பாகக் கொண்டாடியது. தமிழகத்தில் 1 லட்சத்து 89 ஆயிரம் குடும்பங்கள் நெசவுத்தொழிலை வாழ்வாதாரமாக கொண்டுள்ளனர். கைத்தறி தொழில் 3 லட்சத்து 20 ஆயிரம் நெசவாளர்கள் மற்றும் நெசவு சார்ந்த உபதொழில் புரிவோருக்கு வேலைவாய்ப்பை வழங்கி வருகிறது. நெசவாளர்களால் தயாரிக்கப்படும் மதுரை சுங்குடி சேலைகள், காரைக்கடி கண்டாங்கி சேலைகள், சின்னாளப்பட்டி சேலை ரகங்கள் போன்றவை தமிழர்களின் பாரம்பரியத்தை வெளிப்படுத்துகின்றன.
எளிய மனிதர்களால் உருவாகும் பட்டு ஆடைகள், சிறிய பட்டுப்பூச்சிகளில் இருந்து தோன்றுகின்றன. மேலும் “ஆள்பாதி, ஆடை பாதி” என்ற வாக்கியத்திற்கு ஏற்ப, மனிதர்களை உயர்ந்த நிலைக்கு கூட்டிச் செல்லும் கைத்தறி ஆடைகள் என்றும் மகத்துவமானது. இன்னொரு விஷயம் தெரியுமா?நம்ம தமிழ் நாட்டுலே விவசாயத்திற்கு அடுத்தாப்லே நெசவுத் தொழில்தான் முதன்மையா இருக்குது. 2,000 ஆண்டுகளுக்கு முன் ரோமானியர்களுக்கே ஆடைகளை அறிமுகம் செய்த பெருமை தமிழர்களுக்கு உண்டு. ஆனாக்க நவீன தொழில் நுட்ப வளர்ச்சி, மேலை நாட்டு நாகரீகத்தால் தமிழக பாரம்பரிய ஆடைகளை உற்பத்தி செய்யும் நெசவாளர்கள் எண்ணிக்கை குறைஞ்சுக்கிட்டே வருது.
இருந்தாலும் கைத்தறி துணிகள் வாங்கும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது மகிழ்ச்சியை அளிக்கிறது.