சைபர் குற்றங்கள் தினந்தோறும் ஏமாறும் மக்கள்…ஏமாற்றும் தந்திரங்கள்… உஷார்!!!

 சைபர் குற்றங்கள் தினந்தோறும் ஏமாறும் மக்கள்…ஏமாற்றும் தந்திரங்கள்… உஷார்!!!

சைபர் குற்றவாளிகள் நாளுக்கு நாள் பெருகி வருவது கண்கூடாக காணமுடிகிறது. தினந்தோறும் ஏமாற்றுபவர்களின் ஏமாறுபவர்களின் எண்ணிக்கைகள் உயர்ந்து வருவதே இதற்கு சாட்சி. சைபர் குற்றவாளிகள் அதற்கு கையாளும் தந்திரங்கள் ஏராளம்.. மக்கள் தான் விழிப்புடன் இருக்க வேண்டியது அவசியமாகின்றது .

எப்படியெல்லாம் ஏமாற்றுகிறார்கள்?

வங்கிகள் வாடிக்கையாளர்களை, ஒரு போதும் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு வங்கிகள் விபரங்களை கேட்பதில்லை. அதனை புரிந்து அழைப்பை தவிர்ப்பது சிறந்தது. குறிப்பாக otp குறித்த தகவல்களை யாருக்கும் பகிர தேவையில்லை. ஆகவே மேற்கண்ட விபரங்களை கேட்டு போன் செய்தால், எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

மேலும் வங்கியில் இருந்து பேசுவதாக சொல்லி
A/c நம்பர்
ATM DEBIT CARD நம்பர்
PIN நம்பர்
CVV நம்பர்
OTP நம்பர்
நெட் பேங்கிங் PASS WORD
CREDIT CARD நம்பர்…
கேட்டால் அது குறித்த தகவல்களை யாருக்கும் தெரிவிக்க வேண்டாம்.

அப்படி தெரிவித்தால் உங்கள் வங்கி கணக்கு உடனே HACK செய்யப்படலாம் கவனம் தேவை.

அரசு சுகாதாரதுறையில் இருந்து பேசுவதாகவும், தடுப்பு ஊசி போடப்பட்டவர்களுக்கு அரசு உதவி வழங்க விபரங்களை UPDATE செய்ய வேண்டும் என கேட்பது போல் விபரங்களை கேட்டு, உங்களது வங்கி கணக்கை குறிவைத்து…
Bank A/c NUMBER
Aadhar Card NUMBER
PAN Card NUMBER தகவலை பெற்றுக்கொண்டு உங்கள் மொபைலுக்கு வந்த OTP விபரம் கேட்டு பணத்தை பறிக்க முயற்சி
செய்யக்கூடும்.விபரம் தெரிவித்தால்
உங்கள்
வங்கி கணக்கு HACK செய்யப்படலாம் ஜாக்கிரதை.

அக்கவுண்டில் இருந்து பணம் பிடித்தம் செய்யப்பட்டதாகவோ / லோன் தொகை பிடிக்கப்பட்டதாகவோ SMS அனுப்பி, செய்யவில்லை எனில், அந்த SMS வுடன் உள்ள LINK ஐ CLICK செய்ய வலியுறுத்துவார்கள்…
CLICK செய்யாமல் அதை தவிர்க்கவும். தேவைபட்டால் வங்கிக்கு நேரில் சென்று விளக்கம் பெறவும். CLICK செய்தால் உங்கள் a/c ல் இருந்து பணத்தை கொள்ளை அடிக்க முயற்சிப்பார்கள்.

KYC/PAN/AADHAR NUMBER விபரங்கள் குறித்து கேட்டாலோ, SMS/ LINK அனுப்பினாலோ UPDATE செய்யவேண்டாம். வங்கிக்கு நேரில் சென்று தேவைப்பட்டால் ஆவணங்களை கொடுக்கவும்.
BANK Account-ற்கான செல்போன் / ATM Card தொலைந்து போனாலோ / திருட்டு போனாலோ உடனடியாக வங்கிக்கு நேரில் தெரியபடுத்தி விரைந்து BLOCK செய்யவும்

வளைதளத்தில் தேடப்படும் வங்கி கஸ்டமர் கேர் எண்கள் போலியாக இருக்க வாய்ப்பு உள்ளது. CUSTOMER CARE CALLS செய்பவர், உங்களுக்கு
உதவுவது போல் LINK அனுப்பியோ / SCREEN SHARE செய்ய வலியுறுத்தியோ OTP விபரங்கள் பெற்றும் உங்கள் A/C-ஐ HACK செய்யலாம் எச்சரிக்கையாக செயல்படவும்.

SOCIAL MEDIA-வில் வரும் LINK- ஐ, CLICK செய்தால், Bank a/c HACK ஆக வாய்ப்புள்ளது.

பொது இடங்களில் வைக்கப்பட்ட USB சார்ஜர்களில் சார்ஜ் போடுவதை தவிர்க்கவும், உங்களது தகவல்கள் முறையில் திருட்டு போக வாய்ப்புள்ளது.

APP-களின் விபரங்களை முழுவதும் அறியாமல் Download செய்யவேண்டாம். உங்களது தகவல் / வங்கி கணக்கு திருட்டு போக வாய்ப்புள்ளது.

தற்போது சைபர் கிரைம் வகையில் இது போன்ற ஆயிரக்கணக்கான புகார்கள் பதிவாகி வருகிறது. பொதுமக்கள் விழிப்புடன் இருந்து பணம் பறிபோகாமல் தங்களை தற்காத்து கொள்ளலாம்.

தனுஜா ஜெயராமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...