68 ஆண்டுகளாக மின்சாரம் தந்த நிலம் கதறிக்கொண்டிருக்கின்றது
இந்த நிலம் என் நிலம்! இவர்கள் என் மக்கள்!*
என்.எல்.சி. நிறுவனத்தால் எவை எவற்றையெல்லாம் இழந்தோம் என்பதெல்லாம் இதை ஒரு செய்தியாகப் பார்த்துவிட்டுக் கடந்து செல்பவர்களுக்குத் தெரியாது!
தமிழகத்துக்கும் பிற மாநிலங்களுக்கும் 68 ஆண்டுகளாக மின்சாரம் தந்து இன்று கதறிக்கொண்டிருக்கின்ற என் மக்கள் தான் தமிழகத்திலேயே அதிகப்படியான நிலத்தை இழந்து, வாழ்வாதாரத்தை இழந்து நிற்கின்றனர்!
உண்மையிலேயே எங்களின் கதறல் உங்களின் காதுகளுக்கு எட்டவில்லையா? எதற்காகப் போராடுகிறோம் என்பது இன்னும் விளங்கவில்லையா? இது பா.ம.க. சிக்கலோ, வன்னியர் சமுதாய மக்களின் சிக்கலோ அல்ல. ஐந்து மாவட்டங்களின் வாழ்வாதார சிக்கல்.
ஜல்லிக்கட்டு மாடுகளை காப்பாற்றுவதற்காகப் போராடிய இளைஞர் சமுதாயம் இன்று இந்த மண்ணையும் மக்களையும் காப்பாற்றாமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறதே! நியாயம்தானா?
கல்வி கற்று எத்தனைப் பட்டங்கள் பெற்றாலும் அரசியல் விழிப்புணர்ச்சி பெறாத போராடத் தெரியாத சமூகம் இறுதி வரை அரசியல் கள்ளர்களின் காலடியில் அடிமைகளாகவே கிடந்து வாக்குகளை மட்டும் செலுத்தி விட்டு புலம்பியே செத்துப்போகும்.
– தங்கர் பச்சான் முகநூல் பக்கத்திலிருந்து