பூ உஉஉ – தமிழ் திரைவிமர்சனம்

 பூ உஉஉ – தமிழ் திரைவிமர்சனம்

ஒரு தரமான திரில்லான ஹாரர் படம் அதுவும் தமிழில் பாக்கணும்னு ஆசையிருக்கா? அப்ப கட்டாயம் ஜியோ ஸ்டுடியோ தயாரித்த படத்தை நீங்க பார்க்கலாம்.

பூஉஉஉ – இந்த ஹாரர் திரில்லர் படத்தை ஜியோ சினிமாவில் பாருங்க உங்களுக்கு ரொம்ப பிடிக்கும்.

ரகுல் பிரீத் சிங் முதன்மை கதாப்பாத்திரத்தில் அருமையா நடித்திருக்காங்க.

கூடவே ரெபா மோனிகா ஜான், நிவேதா பெத்துராஜ், மேகா ஆகாஷ் , மஞ்சிமா மோகன், வித்யூலேகா ராமன்னு நிறைய நட்சத்திரங்கள் பட்டைய கிளம்பியிருக்காங்க…

பெண்கள் அதிகம் கோலோச்சும் படத்தில் ஒரே ஒரு நாயகனா விஷ்வக் சென் வருகிறார்.

தனியாக ஒரு அப்பார்ட்மெண்டில் வசிக்கும் ரகுல் ப்ரீத் சிங் தனது தோழிகளோட ஹாலோவீன் கொண்டாட நினைக்கறாங்க.

அதற்காக தனது ப்ளாட்டில் ஹாரர் எலும்புக்கூடு பொம்மைகள் என பலவித செட்டப்களோடு வித்யூலேகா மற்றும் தோழிகள் நால்வரோடும் ஹாலோவின் விளையாட்டை விளையாடுகிறார் ரகுல் ப்ரீத் சிங்.

அதற்காக தோழிகளோடு பல்வேறு விளையாட்டை விளையாடுகிறார். அதில் ஒன்றாக படு மாஸான பேய்கள் சம்பந்தமான புத்தகத்தை வார்னிங்கோடு படிக்க துவங்குகிறார்கள்.

கதைகளை படிக்க படிக்க ஒவ்வொன்றாக விஷூவலாக நம் கண் முன் விரிகிறது.

கதைகளில் சம்பவத்தின் மிச்சங்களை வீட்டிலும் உணருவது சுவராஸ்யமான திருப்பம்.

அதற்காக விடைகளை தேடி தொடர்ந்து நான்காவது அத்யாயத்தினை படிக்கிறார்கள்.

கதையின் முடிச்சுக்கள் சில அங்கே அவிழ கதை அவர்களை போலவே நமக்கும் சுவராஸ்யத்தினை உண்டாக்குகிறது…

அதன் பின் ரகுல் ப்ரீத் சிங் மற்றும் தோழிகளுக்கு என்ன ஆகிறது?

கதைகளின் நாயகிகளான நிவேதா , மேகா, மஞ்சிமாவுக்கு என்ன ஆகிறார்கள்? என்பதை திகிலுடன் காட்சிகளாக்கி நம்மை பயமுறுத்துகிறார்கள்.

கதை புத்தகத்திற்கும் கதை நாயகிகளுக்கும் ரகுல் ப்ரீத் சிங் மற்றும் தோழிகளுக்கும் நடுவில் கொடுக்கப்படும் இணைப்புகள் படு சுவராஸ்யம்.

படத்தில் வரும் டுவிஸ்ட்கள் , யூகிக்க இயலாத கதை சம்பவங்கள் , முடிவுகள் படத்திற்கு பெரும் பலம்.

சமீபத்தில் வந்த ஹாரர் திரில்லர் படங்களில் தனித்து சிறப்பாக தெரிகிறது. கேமிரா கோணங்கள் சவுண்ட் எபைக்ட்ஸ் படத்திற்கு கூடுதல் பலம்.

பூஉஉஉ சுவராஸ்யமான பயமுறுத்தும் ஹாரர் டிவிஸ்ட்.

தனுஜா ஜெயராமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...