“தோனி எனும் தோணி”

 “தோனி எனும் தோணி”

மகேந்திர சிங் தோனி (Mahendra Singh Dhoni), சுருக்கமாக எம் எஸ் தோனி என்றும் தல தோனி என்றும் அன்பாக (பிறப்பு: 7 சூலை, 1981) அறியப்படும் இவர் இந்தியத் துடுப்பாட்ட அணியின் முன்னாள் சர்வதேசத் துடுப்பாட்ட வீரரும் முன்னாள் தலைவரும் ஆவார். இவர் 2007 முதல் 2016 ஆம் ஆண்டு வரை வரையிட்ட நிறைவுப் போட்டிகளுக்கும் , 2008 முதல் 2014ஆம் ஆண்டு வரை தேர்வுப் போட்டிகளிலும் இந்திய அணியின் தலைவராக இருந்தார். இவரின் தலைமையில் 2007 ஐசிசி உலக இருபது20 2007-08 பொதுநலவய போட்டித் தொடர், 2010மற்றும் 2016 ஆசியக் கோப்பை, 2011 துடுப்பாட்ட உலகக்கிண்ணம் மற்றும் 2013 ஐசிசி வாகையாளர் ஆகிய கோப்பைகளை இந்திய அணி வென்றுள்ளது. நடுவரிசை மட்டையாளரும் இலக்குக் கவனிப்பாளரான இவர் ஒநாப போட்டிகளில் 10,000க்கும் மேற்பட்ட ஓட்டங்களை எடுத்துள்ளார். இவர் ஒரு நாள் பன்னாட்டுப் போட்டிகளில் சிறப்பாக ஆட்டத்தினை முடித்துவைக்கும் திறன் கொண்டவர்களில் ஒருவராக அறியப்படுகிறார்.மேலும் அவர் காலத்திலான ஒரு நாள் பன்னாட்டு துடுப்பாட்டத்தின் சிறந்த இலக்குக் கவனிப்பாளர்களில் ஒருவராகவும் சிறந்த அணித்தலைவராகவும் கருதப்படுகிறார்.

2004ஆம் ஆண்டில் வங்காளதேசத் துடுப்பாட்ட அணிக்கு எதிராக ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் அடுத்த ஆண்டு இலங்கைத் துடுப்பாட்ட அணிக்கு எதிராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் அறிமுகமானார். 2008 மற்றும் 2009ஆம் ஆண்டுகளில் பன்னாட்டுத் துடுப்பாட்ட அவையின் சிறந்த ஒரு நாள் வீரருக்கான விருதைப் பெற்றார். இவர் இந்த விருதை இருமுறை வென்ற முதல் வீரர் ஆவார்.மேலும் ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது மற்றும் 2009ஆம் ஆண்டில் இந்திய குடிமக்களுக்கான நான்காவது மிக உயரிய மரியாதையாகக் கருதப்படும் பத்மஸ்ரீ விருது, 2018 ஆம் ஆண்டில், இந்திய அரசால் குடிமக்களுக்கு வழங்கப்படும் மூன்றாவது மிக உயரிய விருதான பத்ம பூசன் உள்ளிட்ட பல்வேறு விருதுகளையும் தோனி பெற்றிருக்கிறார்  2009, 2010 மற்றும் 2013 ஆம் ஆண்டிற்கான உலகப் பதினொருவர் அணியின் தலைவராக இவர் தேர்வானார். மேலும் இந்த அணியில் எட்டு முறை இடம் பிடித்தார். அதில் ஐந்து முறை தலைவராக இருந்தார். நவம்பர் 2011இல் இந்திய ரானுவம் தோனிக்கு கௌரவ துணைநிலை கர்னல் பதவி அளித்தது. இவர் கபில்தேவிற்குப் பிறகு இந்த மரியாதையைப் பெறும் இரண்டாவது வீரர் ஆவார்.

2012 ஆம் ஆண்டில் ஸ்போர்ட்ஸ் புரோ ஊடகத்தின் அதிக வியாபாரமாகக்கூடிய தடகள வீரர்கள் வரிசையில் இவருக்கு பதினாறாவது இடம் கிடைத்தது.  இந்தியன் சூப்பர் லீக்கின் சென்னையின் எப் சி அணியின் உரிமையாளர்களில் ஒருவர் ஆவார். 2015 ஆம் ஆண்டில் போர்ப்ஸ் இதழ் வெளியிட்ட அதிகம் சம்பாதிக்கும் விளையாட்டு வீரர்களில் இவருக்கு 23 ஆம் இடம்கிடைத்தது (31 மில்லியன் அமெரிக்க டாலர்)   எம். எஸ். தோனி (திரைப்படம்) இவரின் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டது.

2008 மற்றும் 2009ஆம் ஆண்டிற்கான ஐசிசி ஒருநாள் சர்வதேச போட்டிகள் விளையாட்டு வீரர் விருது (இந்த விருதை இரண்டு முறை பெற்ற முதலாவது இந்திய விளையாட்டு வீரர்), ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது மற்றும் 2009ஆம் ஆண்டில் இந்திய குடிமகனுக்கான மிக உயரிய நான்காவது கவுரமாக கருதப்படும் பத்மஸ்ரீ விருது, 2018 ஆம் ஆண்டில், இந்திய அரசால் குடிமக்களுக்கு வழங்கப்படும் மிக உயரிய மூன்றாவது விருதான பத்ம பூசண்  உள்ளிட்ட பல விருதுகளையும் தோனி பெற்றிருக்கிறார். 2009ஆம் ஆண்டு நவம்பர் வரை ஐசிசி தரவரிசைப் பட்டியலில் தோனி அதிக மதிப்பெண் பெற்ற மட்டையாளராக இருக்கிறார். 2009ஆம் ஆண்டில் விசுடனின் முதலாவது கனவு தேர்வு XI அணிக்கான தலைவராகவும் இடம்பெற்றிருக்கிறார். ஃபோர்ப்ஸ் பத்திரிக்கையால் தொகுக்கப்பட்ட உலகின் முதல் 10 அதிக வருமானம் ஈட்டும் துடுப்பாட்ட வீரர்களில் மகேந்திர சிங் தோனி முதலாவதாக இருந்தார். தோனி தலைமையிலான இந்திய அணி 2011 துடுப்பாட்ட உலகக்கோப்பையை வென்றது.அதன் பின்னர் இதுவரை இந்திய அணி உலக கோப்பையை வெல்லவில்லை.

இலங்கைக்கு எதிரான ஒரு நாள் போட்டியினைத் தொடர்ந்து, 2005 திசம்பரில் தினேஷ் கார்த்திக்கிற்கு பதிலாக அணியில் சேர்க்கப்பட்டார். தோனி தனது முதல் போட்டியில் 30 ஓட்டங்கள் எடுத்தார், அந்தப் போட்டி மழையால் பாதிக்கப்பட்டது. இரண்டாவது போட்டியில் தனது முதல் ஐம்பது ஓட்டத்தினைப் பதிவு செய்தார்
12 பிப்ரவரி 2012 அன்று, அடிலெய்டில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் போட்டியில் இந்தியாவை இறுதிவரை ஆட்டமிழக்காமல் 44 ஓட்டங்கள் எடுத்தார். கடைசி நிறைவில், அவர் கிளின்ட் மெக்கேயின் பந்துவீச்சில் 112 மீட்டர் தூர பெரிய ஆறினை அடித்தார். போட்டிக்குப் பின்னர் 2011ஆம் ஆண்டு ஐசிசி உலகக் கோப்பை இறுதிப் போட்டியின் போது அடித்த ஆறினை விட இது மிகவும் முக்கியமானது என்று கூறினார்.

தோனியை சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) 1.5 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு ஒப்பந்தம் செய்தது. இதன் மூலம் ஐபிஎல் முதல் பருவ ஏலத்தில் அதிக விலைக்கு வாங்கப்பட்ட வீரர் என்ற பெருமையைப் பெற்றார். இவரது தலைமையின் கீழ், 201020112018 மற்றும் 2021 இந்தியன் பிரீமியர் லீக் பட்டங்களையும், 2010 மற்றும் 2014 சாம்பியன்ஸ் லீக் இ20 பட்டங்களையும் வென்றது மற்றும் 2008201220132019 பருவத்தில் இரண்டாம் இடத்தைப் பிடித்தது.

தோனி பீகார்ராஞ்சியில், (இப்போது ஜார்க்கண்ட்) பிறந்தார். இவர் பான் சிங் மற்றும் தேவகி தேவி ஆகியோரின் மூன்று குழந்தைகளில் இளையவர் ஆவார். இவரது பெற்றோர் உத்தரகாண்டிலிருந்து ராஞ்சிக்கு குடிபெயர்ந்தனர். இவரது தந்தை சார்க்கண்டிலுள்ள மெகன் காலணி நிறுவனத்தில் குழாய் செய்குநராக பணியாற்றினார் உத்தரகண்ட்மாநிலத்தின் அல்மோராமாவட்டத்தில் உள்ள ஜைதி தாலுகாவில் உள்ள லவாலி இவரது பூர்வீக கிராமமாகும். இக்கிராமத்தில் 20 முதல் 30 குடும்பங்கள் வசிக்கின்றன. இவரது தந்தை பான் சிங் தோனி 1970ல் வேலைக்காக கிராமத்தை விட்டு வெளியேறி ராஞ்சியில் குடியேறினார். தோனியின் மாமா தன்பத் சிங் தௌனி மற்றும் அவரது உறவினர் ஹயாத் சிங் தௌனி லவாலியில் வசிக்கின்றனர்.

தோனியின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட படத்தில், சிறுவயதில் பெற்றோரிடம் சச்சின் போஸ்டரை கேட்டு அடம் பிடிப்பது போல ஒரு காட்சி இடம்பெற்றிருக்கும். ஆனால், காலம் அந்த ஜாம்பவானுக்கு அடுத்தபடியாக இந்தியாவில் ரசிகர்களால் கொண்டாடப்படும் வீரராக தோனியை உயர்த்தியுள்ளது. வெறும் அதிர்ஷ்டம் மட்டுமே தோனியை இந்த உயரத்துக்கு அழைத்து வந்துவிடவில்லை, அதற்காக அவர் கொடுத்த உழைப்பும், முயற்சியும் அபாரமானது. சர்வதேச கிரிக்கெட்டில் சாதனை என்ற அளவில் இந்திய அணியை 331 சர்வதேச போட்டிகளில் தோனி வழிநடத்தியுள்ளார்.

மகேந்திரசிங் தோனி, 60 டெஸ்ட் போட்டிகள், 199 சர்வதேச ஒருநாள் போட்டிகள் மற்றும் 72 சர்வதேச டி20 போட்டிகளின் இந்திய அணிக்கு தலைமை பொறுப்பினை வகித்துள்ளார். இளம் இந்திய அணிக்கு கடந்த 2007ம் ஆண்டு கேப்டனாகப் பொறுப்பேற்ற தோனி, ஐசிசியின் முதல் டி20 உலககக் கோப்பையை வென்று சாதனை படைத்தார். கோபமான கேப்டன்களையே பார்த்து வந்த கிரிக்கெட் உலகம் தோனியின் அணுகுமுறையைக் கண்டு வியந்தது. எந்தவொரு உணர்ச்சியையும் வெளிப்படுத்தாத அமைதியான கேப்டன் கூலாக அறியப்பட்ட தோனியின் பேட், அவரைப் போல அமைதியானதல்ல. உலகின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர்கள் முதல் சுழற்பந்து வீச்சாளர்கள் வரை தோனியின் மட்டை சுழலும் வேகத்தை அறிவர். சிறந்த பினிஷர் என்று புகழப்படும் தோனி, கடைசி சில ஓவர்களின் ஆட்டத்தின் போக்கையே மாற்றக்கூடியவர். அபாயகரமான பேட்ஸ்மேனாகவும், அமைதியான கேப்டனாகவும் அறியப்பட்ட தோனியின் சாதனைகள்.

மகேந்திரசிங் தோனி, 60 டெஸ்ட் போட்டிகள், 199 சர்வதேச ஒருநாள் போட்டிகள் மற்றும் 72 சர்வதேச டி20 போட்டிகளின் இந்திய அணிக்கு தலைமை பொறுப்பினை வகித்துள்ளார். இளம் இந்திய அணிக்கு கடந்த 2007ம் ஆண்டு கேப்டனாகப் பொறுப்பேற்ற தோனி, ஐசிசியின் முதல் டி20 உலககக் கோப்பையை வென்று சாதனை படைத்தார். கோபமான கேப்டன்களையே பார்த்து வந்த கிரிக்கெட் உலகம் தோனியின் அணுகுமுறையைக் கண்டு வியந்தது. எந்தவொரு உணர்ச்சியையும் வெளிப்படுத்தாத அமைதியான கேப்டன் கூலாக அறியப்பட்ட தோனியின் பேட், அவரைப் போல அமைதியானதல்ல. உலகின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர்கள் முதல் சுழற்பந்து வீச்சாளர்கள் வரை தோனியின் மட்டை சுழலும் வேகத்தை அறிவர். சிறந்த பினிஷர் என்று புகழப்படும் தோனி, கடைசி சில ஓவர்களின் ஆட்டத்தின் போக்கையே மாற்றக்கூடியவர். அபாயகரமான பேட்ஸ்மேனாகவும், அமைதியான கேப்டனாகவும் அறியப்பட்ட தோனியின் சாதனைகள்.

சர்வதேச கிரிக்கெட்டைப் பொறுத்தவரை டி20 உலகக்கோப்பை, ஒருநாள் உலகக்கோப்பை, டெஸ்ட் தரவரிசையில் முதலிடம் மற்றும் சாம்பியன்ஸ் கோப்பையில் பட்டம் என அனைத்து சாதனைகளையும் தனது கேப்டன்ஷிப்பில் பெற்ற ஒரே கேப்டன் என்று தோனியை கிரிக்கெட் உலகம் தலையில் வைத்து கொண்டாடுகிறது. சர்வதேச ஒருநாள் போட்டிகளைப் பொறுத்தவரை ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் (230) மற்றும் நியூசிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் ஸ்டீபன் பிளமிங் (218) ஆகியோருக்கு அடுத்தபடியாக அதிக போட்டிகளில் (199) கேப்டனாக இருந்தவர் என்ற பெருமையைப் பெற்றவர் தோனி. சர்வதேச கிரிக்கெட்டில் ஏழாவது பேட்ஸ்மேனாக களமிறங்கி அதிக சதங்கள் கண்ட பேட்ஸ்மேன் என்ற சாதனையும் தோனி வசமே இருக்கிறது. மொத்தம் 9 சதங்கள் கண்டுள்ள தோனி, அதில் ஏழாவது வீரராகக் களமிறங்கி 2 சதங்களை விளாசியுள்ளார்.

அதிக ஸ்டம்பிங் செய்தவர்கள் வரிசையில் தோனியே முன்னிலை வகிக்கிறார். 439 போட்டிகளில் பங்கேற்றுள்ள அவர், இதுவரை 152 பேரை ஸ்டம்பிங் மூலம் வெளியேற்றியுள்ளார். ஒரு அரைசதம் கூட அடிக்காமல் சர்வதேச டி20 போட்டிகளில் அதிக ரன்கள் குவித்த வீரர் தோனிதான். 73 சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ள தோனி 1112 ரன்களை குவித்துள்ளார். ஆனால், ஆட்டமிழக்காமல் 48 ரன்கள் குவித்ததே அவரது அதிகபட்ச ஸ்கோராகும்.

சர்வதேச கிரிக்கெட்டில் கேப்டனாக அதிக சிக்ஸர்கள் விளாசிய வீரர் பட்டியலில் தோனியே முந்தி நிற்கிறார். 324 போட்டிகளின் முடிவில் தோனி 204 சிக்ஸர்களை விளாசியிருந்தார். சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் மூன்றுவிதமான சாம்பியன்ஷிப் போட்டிகளிலும் தோனி தலைமையிலான இந்திய அணி வாகை சூடியிருக்கிறது. 2007-ல் டி20 உலகக்கோப்பை, 2011-ல் ஒருநாள் போட்டிகளுக்கான உலகக்கோப்பை, 2013-ல் சாம்பியன்ஸ் கோப்பை. இதுமட்டுமல்லாமல் தோனி தலைமையிலான இந்திய அணி சர்வதேச டெஸ்ர் கிரிக்கெட் தரவரிசையில் கடந்த 2009ல் முதலிடம் பிடித்து வரலாற்று சாதனை படைத்தது.அபாயகரமான பேட்ஸ்மேனாகவும், அமைதியான கேப்டனாகவும் அறியப்பட்ட தோனி தக்க நேரத்தில் தடுமாற்றத்தில் இருந்த இந்திய கிரிகெட் கிடைத்த தோணி என்பது யாராலும் மறுக்க முடியாத வரலாற்று உண்மை… 

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...