இந்திய சினிமாவுக்கு ஹேப்பி பர்த் டே

 இந்திய சினிமாவுக்கு ஹேப்பி பர்த் டே
🎬

இந்திய சினிமா🎬வுக்கு ஹேப்பி பர்த் டே டுடே🐾

🇮🇳இந்தியாவில் 1896-ம் ஆண்டு இதே ஜூலை 7-ம் தேதிதான் திரைப்படம் முதன் முதலாக அறிமுகப்படுத்தப்பட்டது. 👀

லுமியர் பிரதர்ஸ் சினிமட்டோகிரபி என்ற நிறுவனம்தான் மும்பையில் (அப்போது பம்பாய்) இருந்த வாட்சன் விடுதியில் ஆறு சிறிய ஊமைப் படங்களைத் திரையிட்டது. உலகின் முதல் சினிமாவைத் தயாரித்து வெளியிட்டவர்கள் லூமியர் சகோதரர்கள். முதல் சினிமா 1895 , டிசம்பர் மாதம் பாரீசில் உள்ள ‘ஈடன் சினிமாஸ்’ என்ற திரையரங்கில் திரையிடப்பட்டது. இப்படம் வெளியான, ஆறு மாதத்திற்குள்ளாகவே, லூமியர் சகோதரர்கள் இந்தியாவில் உள்ள பம்பாய் வாட்சன் ஹோட்டலில் திரையிட்டுக் காட்டினர்.

அன்றைய ஆங்கில பத்திரிகை ஒன்றில் இது பற்றிய விரிவான தகவல்கள் வெளியிடப்பட்டன. அதே ஆண்டில் மதராஸ் நிழற்பட நிலையம் அசையும் நிழற்படங்கள் பற்றி விளம்பரப்படுத்தியது.

1897-ம் ஆண்டளவில் பம்பாயில் கிளிப்டன் அண்ட் கோ நிறுவனம் தனது மீடோஸ் தெரு திரைப்பட கலையகத்தில் தினமும் திரைப்படங்களைத் திரையிடத் தொடங்கியது.👑

uma kanthan

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...