அடூர் கோபாலகிருஷ்ணன் (Adoor Gopalakrishnan)

 அடூர் கோபாலகிருஷ்ணன் (Adoor Gopalakrishnan)
❤

பிறந்தநாள் இன்று (

!🔥

உலகப் புகழ்பெற்ற கேரள திரைப்பட இயக்குநர் எழுத்தாளர் ✍அடூர் கோபாலகிருஷ்ணன் (Adoor Gopalakrishnan) ❤பிறந்தநாள் இன்று (ஜூலை 3). ♻

. திண்டுக்கல் காந்தி கிராம பல்கலைக்கழகத்தில் பொருளாதாரம், அரசியல் அறிவியல், பொது நிர்வாகத்தில் பட்டம் பெற்று. அரசு அதிகாரியாக சிறிதுகாலம் பணியாற்றினார்.

* திருவனந்தபுரம் சித்திரலேகா ஃபிலிம் சொசைட்டி, சித்திரலேகா ஃபிலிம் கோ-ஆபரேட்டிவ் ஆகிய அமைப்புகளை நிறுவினார். இவை கேரள திரைப்படக் கலாச்சாரத்தை மேம்படுத்துவதில் முக்கிய பங்கு வகித்தன. இவரது முதல் திரைப்படமான ‘ஸ்வயம்வரம்’ 1972-ல் வெளிவந்தது. முதல் படத்திலேயே அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். குறிப்பாக சினிமாவில் அதிரடி மாற்றங்களைக் கொண்டு வந்தார். ‘சினிமா வெறும் கேளிக்கைக்கானது மட்டும் அல்ல; கலை, கலாச்சாரத்தை வளர்ப்பதிலும் முக்கிய பங்காற்ற முடியும்’ என்பதை தனது திரைப்படங்கள் மூலம் நிரூபித்தார்.

* நிழல்குத்து, கதாபுருஷன், விதேயன் உள்ளிட்ட 11 முழு நீளப்படங்கள், கலாமண்டலம் கோபி, சோழப் பாரம்பரியம், யட்சதானம் உள்ளிட்ட ஏறக்குறைய 30 குறும்படங்கள் மற்றும் ஆவணப் படங்களையும் இயக்கியுள்ளார்.

* ‘கொடியெட்டம்’, ‘எலிப்பத்தாயம்’, ‘முகாமுகம்’, ‘மதிலுகள்’ போன்ற சிறந்த படைப்புகள் மூலம் நாட்டின் தலைசிறந்த இயக்குநர்களில் ஒருவராக உயர்ந்தார். இவரது கதை சொல்லும் பாணி தனித்துவம் வாய்ந்தது. ‘சினிமாயுடே லோகம்’, ‘நிர்மால்யம்’, ‘எலிபத்தாயம்’ உட்பட பல நூல்களையும் எழுதியுள்ளார்.

* பத்மஸ்ரீ, பத்மவிபூஷண், தாதாசாஹிப் பால்கே, ‘ஸ்வயம்வரம்’ படத்துக்காக தேசிய விருது, சிறந்த இயக்குநருக்கான தேசிய விருது 4 முறை, சிறந்த திரைக்கதை எழுத்தாளருக்கான தேசிய விருது 3 முறை, கேரள மாநில திரைப்பட விருதுகள், பிரிட்டிஷ் திரைப்பட இன்ஸ்டிடியூட் விருது, யுனிசெஃப் திரைப்பட பரிசு, ஓசிஐசி திரைப்பட பரிசு, இன்டர்ஃபிலிம் பரிசு என நீள்கிறது இவரது பரிசுப் பட்டியல்

From The Desk of கட்டிங் கண்ணையா

uma kanthan

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...