ஓக்’ பறவை” கடைசி ஜோடி கொல்லப்பட்ட நாளின்று
ஓக்’ பறவை” கடைசி ஜோடி கொல்லப்பட்ட நாளின்று.
அல்கா இம்பென்னிஸ் , பிங்குயினஸ் இம்பென்னிஸ் என்ற ழைக்கப்படும் அறிய வகை அழிந்த பறவையினமே “பெரிய ஓக்’ . பறக்க முடியாத இவை, மற்ற ஓக் பறவைகளை விட பெரிதாகும். கனடா மற்றும் அதன் அருகிலுள்ள தீவுகள், கிரீன்லாந்து, ஐஸ்லாந்து, நார்வே, அயர்லாந்து, பிரிட்டன் பகுதிகளில் அதிக எண்ணிக்கையில் இவை காணப்பட்டன. எட்டாம் நூற்றாண்டிலிருந்து இவற்றை உணவுக்காகவும், ரோமத்தை மெத்தைகள் தயாரிக்கவும் மனிதர்கள் வேட்டையாடினர். அழிவை சந்திக்கும் வரை வேட்டையாடப்பட்டதே இவற்றின் துரதிஷ்டம். கடைசியாக 1844 ஜூலை மூன்றில் ஐஸ்லாந்து அருகே தீவில் இப்பறவையின் கடைசி ஜோடிகள் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவை பறவை என்றாலும், நன்கு நீந்தும் தன்மை கொண்டதால், இவை நீருக்குள் மூழ்கி செல்லும் வல்லமை படைத்தது. இவற்றின் தலையிலுள்ள வெள்ளை நிறத்தை வைத்து “பென் கிவின்'(வெண் தலை) என அழைத்தனர். இவற்றின் தோற்றம் கொண்டதால் தான் “பென்குயினுக்கு நாளடைவில் இப்பெயர் சூட்டப்பட்டது. ஒரு வடத்திற்கு ஒரு முட்டை மட்டுமே இடும்
இவற்றின் இனப்பெருக்கம் மற்ற பறவைகளை விட குறைவானதாகும். மனிதனின் வேட்டைக்கு ஏற்றவாறு உற்பத்தி இல்லாமல் போனதும், இவற்றின் அழிவை எளிதாக்கியது. இன்று ஆய்வாளர்களுக்கும் எட்டாத தூரத்தில் ரகசியமாக அடங்கி போனது இவற்றின் அழிவு. இருப்பினும் இவை வாழ்ந்த, இடம் பெயர்ந்த தீவுகளில் “பெரிய ஓக்’ குறித்த ஆய்வுகள் தொடர்ந்து நடந்து வருகின்றன