மூன்று பாகங்களாக – கேப்டன் மில்லர் First Look…!  

 மூன்று பாகங்களாக – கேப்டன் மில்லர் First Look…!  

தனுஷ் நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் ‘கேப்டன் மில்லர்’. நீண்ட நாட்களாக இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. அருண் மாதேஸ்வரன் இயக்கி வரும் இந்தப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பினை கிளப்பியுள்ளது. இந்நிலையில் ‘கேப்டன் மில்லர்’ படம் குறித்து பிரபல தயாரிப்பாளர் பகிர்ந்துள்ள தகவல் சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

தமிழ் மட்டுமில்லாமல் பிற மொழி படங்களிலும் பிசியாக நடித்து வருகிறார் தனுஷ். இவரது நடிப்பில் கடைசியாக ‘வாத்தி’ படம் வெளியானது. தமிழ், தெலுங்கு மொழியில் ரிலீசான இந்தப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து தற்போது ‘கேப்டன் மில்லர்’ படத்தில் நடித்து வருகிறார் தனுஷ். ராக்கி, சாணிக்காயிதம் போன்ற ரத்தம் தெறிக்கும் படங்களை இயக்கி கவனம் ஈர்த்த அருண் மாதேஸ்வரனுடன் முதன்முறையாக கை கோர்த்துள்ளார் தனுஷ். தனது அண்ணன் செல்வராகவனை வைத்து சாணிக்காயிதம் படத்தை இயக்கிய அருண் இயக்கத்தில் தனுஷ் நடித்து வருவது ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது.

1930 – 40 காலக்கட்டங்களில் நடக்கும் சம்பவங்களாக பீரியட் பிலிமாக ‘கேப்டன் மில்லர்’ படத்தை இயக்கி வருகிறார் அருண் மாதேஸ்வரன். கடந்த சில மாதங்களாகவே இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இந்தப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகவுள்ளதாக தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதனால் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர். இந்நிலையில் ‘கேப்டன் மில்லர்’ படம் மூன்று பாகங்களாக உருவாகவுள்ளதாக பிரபர தயாரிப்பாளர் தனஞ்செயன் தனது சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார். அடுத்தடுத்த கதைக்களங்கள் மிகப்பெரிய அளவில் உருவாகியுள்ளதால், இந்தப்படத்தை மூன்று பாகங்களாக உருவாக வாய்ப்பிருப்பதாக கூறியுள்ளார். 1990 காலங்கட்டங்களில் நடப்பதை போல் இரண்டாம் பாகமும், தற்போதைய காலத்தில் நடத்தை போல் மூன்றாவது பாகமும் உருவாகவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

மேலும், இந்தப்படத்திற்காக தனுஷ் மிகப்பெரியளவில் கஷ்டப்பட்டுள்ளதாகவும் இலங்கையை சார்ந்த போராளியாக அவர் நடித்துள்ளதாகவும் தனது பேட்டியில் தெரிவித்துள்ளார் தனஞ்செயன். அத்துடன் இந்தப்படம் மிகப்பெரிய ஆக்ஷன் படமாக, ரசிகர்களுக்கு மிகச்சிறந்த அனுபவத்தை தரும் எனவும் குறிப்பிட்டுள்ளார். ‘கேப்டன் மில்லர்’ படம் மூன்று பாகங்களாக உருவாகவுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...