டென்னிஸ் உலகின் மன்னன் பெடரர் கண்ணீர் புனிதமானது

 டென்னிஸ் உலகின் மன்னன் பெடரர் கண்ணீர் புனிதமானது

தனது எட்டு வயதில் டென்னிஸ் ஆடுகளத்தில் பந்துகளைச் சேகரித்துத் தரும் சிறுவனாகத் தனது பயணத்தைத் தொடங்கிய ரோஜர் ஃபெடரர் , 25 ஆண்டுகளுக்கும் மேலாக டென்னிஸ் விளையாட்டு உலகில் உச்ச சாதனையாளர். உலகின் நெம்பர் ஒன் டென்னிஸ் வீரர்.

ஆற்றலும் அழகும் மிளிரும் இவரது விளையாட்டுக்காக இவரை டென் னிஸ் உலகின் மேதை என வர்ணிக்கிறார்கள்.

சமீபத்தில் சர்வதேச டென்னிஸ் போட்டிகளில் இருந்து ரோஜர் பெடரர் ஓய்வு பெற்றது அவரது ரசிகர்களுக்கு மட்டுமின்றி சக வீரர்களுக்கும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

அண்மையில் இவர் தனது ஓய்வை அறிவித்தார். அதுவும் 2022 லேவர் கோப்பை தொடருக்குப் பின் டென்னிஸ் போட்டிகளில் இருந்த ஓய்வு பெறுவதாக அறிவித்து கண்ணீருடன் விலகினார்.

ஐரோப்பிய அணியின் இரட்டையர் பிரிவு ஆட்டத்தில் நடாலும் பெடரரும் அமெரிக்காவின் பிரான்சிஸ்டியாபோ, ஜாக் சாக் இணையுடன் மோதினார் கள். இந்தப் போட்டியில் ரோஜர் பெடரர் – ரபேல் நடால் இணை தோல்வி யைத் தழுவியது. டென்னிஸ் வாழ்க்கையின் கடைசிப் போட்டியில் தோல்வியடைந்த ரோஜர் பெடரர் கண்ணீருடன் விடைபெற்றது கவலை அளிக்கிறது. ஆனால் அவர் கவலையோடு இல்லை.

ரோஜர் பெடரர் பேசும்போது, “என் வாழ்க்கையில் இது ஓர் அற்புதமான நாள். நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன். வருத்தமாக இல்லை. இங்கே இருப்பது மிகவும் நன்றாக இருக்கிறது. கடைசியாக எல்லாவற்றையும் செய்து மகிழ்ந்தேன்” என்றார்.

சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த டென்னிஸ் வீரரான இவர் 20 கிராண்ட் சிலாம் எனப்படும் பெருவெற்றித் தொடர்களை வென்றுள்ளார். மேலும், மொத்தம் 302 வாரங்கள் தரவரிசைப் பட்டியலில் முதல் இடம் பிடித்தவராகவும், தொடர்ச்சியாக 237 வாரங்கள் தரவரிசைப் பட்டியலில் முதலிடம் பெற் றிருந்தமையும் இவரது முக்கிய சாதனைகளுள் ஒன்றாகும்.

இவர் இதுவரை ஒற்றையர் ஆண்கள் பிரிவில் 20 கிராண்ட் சிலாம் (6 ஆஸ்தி ரேலிய ஓப்பன், ஒரு பிரெஞ்சு ஓப்பன், 5 அமெரிக்க ஓப்பன், 8 விம்பிள்டன்) பட்டங்களை வென்றுள்ளார். தவிர நான்கு (ஆஸ்திரேலியா, பிரெஞ்சு, விம்பிள்டன், அமெரிக்கா) இடங்களிலும் கிராண்ட் சிலாம் பட்டங்களை வென்ற எட்டு ஆண் வீரர்களுள் ஒருவராவார்.

29 முறை கிராண்ட்சிலாம் இறுதிப் போட்டிகளில் ரோஜர் பெடரர் விளை யாடியுள்ளது இதுவரை யாரும் நிகழ்த்தாத சாதனையாகும். மேலும் தொடர்ச்சியாக 23 முறை கிராண்ட்சிலாம் போட்டிகளின் அரையிறுதியில் விளையாடியதும் இவரது முக்கியச் சாதனைகளுள் ஒன்றாகும்.

2004ஆம் ஆண்டு விம்பிள்டன் போட்டியின் அரையிறுதி முதல் 2010ஆம் ஆண்டின் ஆஸ்திரேலிய ஓப்பன் போட்டி வரை தொடர்ச்சியாக 23 கிராண்ட் சிலாம் அரையிறுதிகளில் அவர் விளையாடியுள்ளார்.

அதேபோல் தொடர்ச்சியாக 10 முறை கிராண்ட்சிலாம் இறுதிப்போட்டி களில் விளையாடியுள்ளார். 2005ஆம் ஆண்டு விம்பிள்டன் போட்டி முதல் 2008ஆம் ஆண்டின் ஆஸ்திரேலிய ஓப்பன் வரை நடந்த 19 கிராண்ட்சிலாம் போட்டிகளில் 18 போட்டிகளின் இறுதியாட்டத்தில் பெடரர் விளையாடி யுள்ளார்.

இவ்வரிய செயல்களால் அவரை டென்னிஸ் உலகின் முடிசூடா மன்ன னாக விளங்கச் செய்தது.

பெடரர், முன்னாள் பெண்கள் டென்னிஸ் கூட்டமைப்பின் ஆட்டக்காரரான மிர்கா வாவ்ரிநெக்கை மணம் புரிந்தார். 2000-ஆம் ஆண்டு சிட்னி ஒலிம்பிக் கில் சுவிட்சர்லாந்து நாட்டுக்காக விளையாடச் சென்றபோது சந்தித்துக் கொண்டனர். வாவ்ரிநேக் 2002-ஆம் ஆண்டு காலில் ஏற்பட்ட காயம் காரண மாக ஓய்வு பெற்றார். அப்போதிலிருந்து பெடரரின் மேலாளராக இருந்து வந்தார். இவர்களுக்கு மைலா ரோஸ், சார்லின் ரிவா எனும் இரட்டைப் பெண்கள் உள்ளனர்.

பெடரர் பல்வேறு  சமூகநலப் பணிகளைச் செய்து வருகிறார். 2003-ஆம் ஆண்டு ரோஜர் பெடரர் அறக்கட்டளையை அமைத்து பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்களுக்கும் விளையாட்டை ஊக்குவிக்கும் விதமாகவும் செயல்பட்டு வருகிறார். 2005-ஆம் வருடம் காத்ரீனா புயலால் பாதிப் படைந்தவர்களுக்கு உதவும் விதமாக அவ்வாண்டு யு.எஸ். ஓபன் போட்டி யில் பயன்படுத்திய மட்டைகளை ஏலம் விட்டார். 2004—ஆம் வருடம் யூனிசெப் நிறுவனத்தின் நல்லெண்ணத் தூதுவராக நியமிக்கப்பட்டார். அதன் பின், அவர் இந்தியப் பெருங்கடலை ஒட்டிய பகுதிகளில் ஏற்பட்ட சுனாமி பாதித்த தமிழ்நாட்டின் பகுதிகளைப் பார்வையிட்டார்.

ரோஜர் பெடரர் போட்டி களத்தில் இருக்கும் உதவியாளர்களிடமும் பந்து சேகரிக்கும் சிறுவர்களிடம் எப்போதுமே கனிவாக நடந்துகொள்வார்.

இதுவரை பின் தங்கிய நாடுகளின் 20 லட்சத்துக்கும் மேற்பட்ட குழந்தை களின் கல்வி, உடல்நலத்துக்காகவும், 2003ல் தொடங்கிய தனது ‘ரோஜர் ஃபெடரர் பவுண்டேஷன் ‘ மூலம் பெரிதும் உதவியுள்ளார்.

தனது 41வது வயதில் கடைசிப் போட்டிக்குப் பின் கண்ணீருடன் டென்னிஸ் உலகிலிருந்து விடை பெற்றார்.

ஃபெடருக்கு பிரிவு உபசார விழா நடைபெற்றது. அப்போது தனது உணர்வு களை கட்டுப்படுத்த முடியாமல் கண்ணீர் சிந்தினார் பெடரர். இதைக் கண்ட சோகம் தாங்கமுடியாமல் அருகிலிருந்த நடாலும் கண்ணீர்விட்டார். இரண்டு துருவங்களாக டென்னிஸ் விளையாட்டில் இருந்த வந்த நட்சத் திர வீரர்களில் ஒருவர் விடைபெறும்போது இன்னொருவர் அழுத இந்த நிகழ்வு உணர்ச்சிகரமாக அமைந்தது. பெடரரின் கண்ணீர் புனிதமானது.

மூலவன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...