ஓ.டி.டி.யில் நுழைகிறது பிரபல ஏ.வி.எம். நிறுவனம்

 ஓ.டி.டி.யில் நுழைகிறது பிரபல  ஏ.வி.எம். நிறுவனம்

உலகளவில் சட்டவிரோதமானது செய்தித் திருட்டு. இது கலை உலகில் மிகப் பெரிய கவலைக்குரிய பிரச்சினையாகப் பார்க்கப்படுகிறது. இத்தகைய பெரும் செய்தித் திருட்டு செய்யும்  இணையதள கும்பல் மீது ஒரு முடி வில்லா போர் ஒன்றே கலை உலகத்தினர் நடத்தி வருகின்றனர். இந்தப் பிரச்சினையை முதல் முறையாக மிகப் பெரிய ஆராய்ச்சி நடத்தி ரசிர்கள் எளிதாகப் புரிந்து கொள்ளும் விதமாக தமிழ் ராக்கர்ஸ் எனும் தொடரைத் தயாரிக்கிறது புகழ்பெற்ற ஏ.வி.எம். நிறுவனம். இந்தத் தொடரின் புரமோ ஷன் விழா சென்னையில் நடைபெற்றது.

ஈரம், வல்லினம், ஆறாது சினம், குற்றம் 23 போன்ற வெற்றிப் படங்களின் இயக்குநர் அறிவழகன் இயக்குகிறார், தமிழ் ராக்கர்ஸ் ஆகஸ்ட் 19 முதல் சோனி லிவ்வில் ஒளிப்பரப்பாக உள்ளது.

நிஜ வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்களை மையமாகக்கொண்ட  இந்தத் தொடர், ருத்ரா எனும் ஒரு காவல் அதிகாரியின்   மூலமாக விவரிக்கிறது. இந்தக் கதாபாத்திரத்தில் நடிகர் அருண் விஜய் நடிக்கிறார்.

ஏ.வி.எம். நிறுவனம் தனது ஓ.டி.டி. உலகின் நுழைவு வாயிலாக இந்தத் தொடரைத் தயாரிக்கிறது. மனோஜ்குமார் கலைவாணன் மற்றும் ராஜேஷ் மஞ்சுநாத்தின் எழுத்தில் உருவான இந்தத் தொடரில் அருண் விஜய், அழகம் பெருமாள், எம்.எஸ்.பாஸ்கர், ஐஸ்வர்யா மேனன், வாணி போஜன், வினோதினி வைத்தியநாதன் மற்றும் தருண்குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

ஏ.வி.எம். நிறுவனத் தயாரிப்பாளர், அருணா குகன் பேசும்போது, “தமிழ் ராக்கர்ஸ் ஒரு நல்ல ஆழமான கதைக் களத்தைக் கொண்டது. நாங்கள் மிகத் தீவிரமான ஆராய்ச்சியை மேற்கொண்டுள்ளோம். இதன் மூலம், கலைத்துறையினர் படும் இன்னல்களைப் பல்வேறு கோணங்களிலிருந்து ஆழமாகக் காட்டியுள்ளனர். சோனி லிவ் நிறுவனத்தினை தனது ஒளிபரப்பு பங்குதாரராகக் கொண்டது எங்களுக்குப் பலத்தினை மேலும் கூட்டியுள்ளது. தொலைநோக்குச் சிந்தையுள்ள இயக்குநர் அறிவழகன் மற்றும் நடிகர் அருண்விஜய் எங்களுடன் இணைந்தது மேலும் ஒரு கூடுதல் பலத்தினை தந்ததுடன் மட்டும் இல்லாமல், மக்களுக்கு ஒரு உணர்வுபூர்வமான ஒரு பந்தத்தினை ஏற்படுத்தும் எனும் நம்பிக்கையினை ஏற்படுத்தி உள்ளது.

இயக்குநர் அறிவழகன் பேசும்போது “பைரசி, ஹால் காபி, டோரன்ட் டவுன்லோட் போன்ற வார்த்தைகள் என்னதான் கேள்விப்பட்டதாக இருந் தாலும், அதனால் கலை உலகில் ஏற்படும் வலிகள் மற்றும் வேதனைகள் உலகிற்குத் தெரியாது. தமிழ் ராக்கர்ஸ் ஒரு சுவாரஸ்மான திரில்லர் மூலம் அருண் விஜய் தனது ருத்ரா எனும் கதாபாத்திரம் மூலம் மக்களை பைரசி உலகத்தின் சவால்களுக்கு அழைத்துச் செல்கிறார்.

நடிகர் அருண் விஜய் பேசும்போது, “இந்தத் தொடரின் பகுதியாக இருப்பது ஒரு மிகப் பெரிய அனுபவமாக இருந்தது. சமுதாயத்திற்கு தேவைப்படும்  தொடராக இதனைப் பார்க்கிறேன். செய்தித் திருட்டு என்பது காலம் காலமாக கலை உலகில் தொடர்ந்து கொண்டிருக்கின்றதும். இந்தத் தொடர் திரை உலகில் பைரசி எந்த அளவுக்கு ஊடுருவி உள்ளது என்பதையும் வெளிக்காட்டும். மற்றும் எனது கதாபாத்திரமான ருத்ரா எப்படி இதனை முடிவிற்குக் கொண்டுவருகின்றன என்பதே கதை. எனவே நான் மிகவும் ஆவலுடன் இந்தத் தொடரை சோனி லிவ்வில் காண்பதற்குக் காத்திருக் கின்றேன். திரைத்துறையில்  அனுபவம் வாய்ந்த படைப்பாளர்களுடன் இணைந்து பணியாற்றியதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்” என்றார்.

மூலவன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...