44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி தமிழகத்தின் சாதனை

 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி தமிழகத்தின் சாதனை

மாமல்லபுரத்தில் வரும் 28ஆம் தேதி தொடங்க இருக்கும் செஸ் ஒலிம்பியாட் போட்டியின் டீசர் வீடியோ வெளியான நிலையில் அது சில விமர்சனங்களுக்கு உள்ளானது.

சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் வரும் ஜூலை 28 ஆம் தேதி, ரூபாய் 100 கோடி செலவில் உலக செஸ் ஒலிம்பியாட் போட்டித் தொடர் நடக்க உள்ளது. போட்டிகள் மாமல்லபுரத்தில் நடைபெற்றாலும், இதன் தொடக்கப் போட்டிகள் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ளது. இதன் தொடக்க விழாவை பிரமாண்டமாக நடத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ள நிலையில் அதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அனைத்து கட்டுமானங் களையும் புதுப்பிக்கும் பணிகளில் விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் ஈடு பட்டு வருகிறது.

44வது செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான டீசர் வீடியோவை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இரவு 7:30 மணிக்கு வெளியிட்டார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில், ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பில் இந்த வீடியோ உருவாகியுள்ளது.

மேலும் வீடியோவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஏ.ஆர்.ரஹ்மான், இயக்கு நர்  ஷங்கரின் மகளான அதிதி ஷங்கர் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர். ஆனால் தமிழகத்தின் செஸ் சாம்பியன்களான விஸ்வநாதன் ஆனந்த், பிரக்ஞானந்தா ஆகியோர் இடம் பெறாதது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி  (Indian Squad for 44th Chess Olympiad) சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில், வருகிற 28-ம் தேதி முதல் அடுத்த மாதம் 10-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்தப் போட்டியில் 188 நாடுகளைச் சேர்ந்த இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட சதுரங்க வீரர்கள் பங்கேற்க உள்ளனர். இந்த விழாவில் பங்கேற்க பிரதமர் மோடி சென்னை வருவதாக ஏற்கனவே தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவில் பங்கேற்று, போட்டி களை முறைப்படி தொடங்கி வைக்க, பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுப்பதற்காக, முதல்வர் மு.க.ஸ்டாலின் வரும் 19-ம் தேதி டெல்லி செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஏழாம் நூற்றாண்டில் இந்தியாவில்தான் முதன்முதலில் சதுரங்க போட்டியானது கண்டுபிடிக்கப்பட்டது. உலகத்தில் இதுவரை 43 செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் தான் நடைபெற்றுள்ளன. இந்தியாவில் தமிழ்நாட்டில் நடைபெற உள்ள 44 வது செஸ் ஒலிம்பியாட் போட்டியில்தான் அதிகமான நாடுகள் பதிவு செய்துள்ளார் கள். தற்போது 188 நாடுகள் பங்கு பெறுவதற்காகப் பதிவு செய்துள்ளார்கள். அதில் 140 நாடுகளுக்கு மேல் விசா பெற்றுள்ளார்கள்.  செஸ் ஒலிம்பியாட் போட்டியில் கலந்து கொள்ளும் வீரர்களுக்கு கலை நிகழ்ச்சிகள் சுற்றுலாத்துறை மூலமாக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மேலும் அவர்கள் வெளியே சென்று சுற்றிப் பார்ப்பதற்கு சூழ்நிலை கிடையாது.

பெருமைக்குரிய இந்தப் போட்டி 1927ஆம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வரும் சதுரங்க ஒலிம்பியாட் போட்டி பன்னாட்டு சதுரங்கக் கூட்டமைப்பினால் தொடங் கப்பட்டு, இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்பட்டு வருகிறது, இந்தியா வில் முதன்முறையாகவும் 30 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போதுதான் நடத்தப்படு கிறது. 188 நாடுகள் பங்கேற்க இருப்பதன் மூலம், இந்தப் போட்டியே, செஸ் ஒலிம்பியாட் போட்டிகளிலேயே அதிக வீரர்கள் பங்கேற்கும் போட்டியாக இருக்கும்.

இப்போட்டி தமிழ்நாட்டில் நடத்தப்படுவதன் வாயிலாக, மாநிலத்தின் பண்பாடு, பாரம்பரியம், விருந்தோம்பல், சுற்றுலா மற்றும் பல சிறப்பம்சங்கள் உலக அள வில் பேசுபொருளாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக கொரோனா காரணமாக 2021-ஆம் ஆண்டு இணைய வழியில் நடந்த 43 ஆவது சதுரங்க ஒலிம்பியாட் போட்டியில் இந்தியாவும் ரசியாவும் கோப்பையைப் பகிர்ந்து கொண்டன.

இந்த ஆண்டு முதன்முறையாக, சர்வதேச ஒலிம்பிக் சங்கமான ஃபிடே (FIDE), ஒலிம்பிக் பாரம்பரியத்தின் ஒரு பகுதியாக, செஸ் ஒலிம்பியாட் ஜோதி தொடர் ஓட்டத்தை தொடங்கியுள்ளது. இதற்கு முன்பு நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட் களில் இதுபோன்று நடத்தப்பட்டதில்லை.  செஸ் ஒலிம்பியாட் ஜோதி தொடர் ஓட்டத்தை நடத்தும் முதலாவது நாடு இந்தியா. குறிப்பாக செஸ் விளையாட்டில் இந்தியாவிற்கு உள்ள தொடர்பை மேலும் உச்சத்திற்கு எடுத்துச் செல்லும் விதமாக, செஸ் ஒலிம்பியாட்டுக்கான ஜோதி தொடர் ஓட்டம், இனி எப்போதும் இந்தியாவிலிருந்தே தொடங்கி, போட்டி நடைபெறும் நாட்டை அடைவதற்கு முன்பாக அனைத்து கண்டங்களுக்கும் எடுத்துச் செல்லப்படும்.

ஃபிடே தலைவர் அர்கடி துவார்கோவிச், ஜோதியை பிரதமரிடம் வழங்க, அவர் அதனை கிராண்ட் மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்திடம் ஒப்படைப்பார். அதன் பிறகு இந்த ஜோதி, 40 நாட்களுக்குள் 75 நகரங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டு, சென்னை அருகே உள்ள மாமல்லபுரத்தில் ஏற்றிவைக்கப்படும். அனைத்து இடங் களிலும் அந்தந்த மாநிலத்தைச் சேர்ந்த செஸ் கிராண்ட் மாஸ்டர்கள் இந்த ஜோதியைப் பெற்றுக் கொள்வார்கள்.

இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க ஜோதி தொடர் ஓட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி, டெல்லி இந்திரா காந்தி விளையாட்டரங்கில் ஜூன் 19 மாலை 5 மணியளவில் தொடங்கி வைக்கிறார். இந்த நிகழ்ச்சியில் பிரதமர் உரையாற்றவுள்ளார்.

28-ம் தேதி சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெறவுள்ள 44வது செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழா, ஏற்பாடுகள் பற்றி விளையாட்டுத் துறை அமைச்சர் மெய்யநாதன் ஆய்வு மேற்கொண்டார். அப்பொழுது செய்தியாளர் களிடம் பேசினார்.

“வரும் 20-ம் தேதிக்குள் இந்தப் பணிகள் முடிப்பதற்கு, நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது. நேரு உள் விளையாட்டு அரங்கில் உள்ள இருக்கைகள் அனைத்தும் மறு சீரமைப்பு செய்யப்பட்டு வருகிறது, மேலும் இந்த அரங்கத்திற்குள் கூடுதலாக 125 டன் ஏ.சி. அமைக்கும் பணியும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. 188 நாடு களிலிருந்து 2000 வீரர்கள் வர இருக்கிறார்கள். அவர்களை சென்னை விமான நிலையத்திலிருந்து நேரடியாக  அழைத்து மகாபலிபுரத்தில் உள்ள ஐந்து நட்சத் திர விடுதியில்  தங்க வைக்கப்பட உள்ளது. வருகிற 23-ம் தேதியிலிருந்து வீரர்கள் வர உள்ளார்கள். வெளிநாடுகளில் இருந்து வரக்கூடிய அனைத்து வீரர்களுக்கும், ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்படும். அதற்காக ஏழு மருத்துவக் குழுவினர்கள் அமைக்கப்பட்டிருக்கிறது.

அதுமட்டுமில்லாமல் போட்டி நடைபெறுகின்ற இடத்தில் பணியாற்றுகின்ற அனைத்து ஊழியர்களுக்கும், அவர்களைத் தங்க வைத்திருக்கின்ற நட்சத்திர விடுதி ஊழியர்களுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும். மேலும் எதிர்பார்க்கின்ற சூழ்நிலைக்கு ஏற்ப தொடக்க விழா நடைபெற உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கிற்கு ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனை செய்த பின்பு அரங்கத் தில் அனுமதிக்கப்படுவார்கள். செஸ் போட்டிகள் நடைபெறவுள்ள மகாபலிபுரம் பல்வேறு பகுதிகளில் பொது மக்களுக்கு எல்.இ.டி திரை அமைக்கப்பட்டு பார்ப் பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்.  நடைபெற உள்ள அனைத்து போட்டி களையும் இணைய வழி மூலமாகப் பார்ப்பதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது தொலைக்காட்சி மூலமாக அனைத்துப் போட்டிகளையும் மக்களி டையே கொண்டு செல்வதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது” என்று தெரிவித் துள்ளார்.

இந்தியா முதன்முறையாகத் திறந்த பிரிவு மற்றும் பெண்கள் பிரிவு என இரண்டு பிரிவுகளிலும் தலா இரண்டு அணிகளைக் களமிறக்குவதற்குத் தகுதி பெற் றுள்ளது.

முதல் அணி : 2020 சதுரங்க ஒலிம்பியாட் போட்டியில் இந்தியாவைத் தங்கப் பதக்கத்திற்கு அழைத்துச் சென்ற விதித் சந்தோஷ் குஜ்ராத்தி, பலமுறை சதுரங்கப் போட்டியில் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்திய பெண்டலா அரி கிருட்டிணன், சென்னையைச் சேர்ந்த கிருட்டிணன் சசிகிரண் 19 வயதான அர்ச்சூன் எரிகாய்சி மற்றும் எஸ்.எல்.நாராயணன் ஆகியோருடன் இணைந்து திறந்த பிரிவில் இந்தியாவின் முதல் அணியில் இடம் பெற்றுள்ளனர்.

இரண்டாவது அணியில் ர. பிரக்ஞானந்தா, நிகால் சரின், டி குகேஸ் மற்றும் இரவுனக் சத்வானி, பி. அதிபன் உள்ளிட்ட இளம் சதுரங்க வீரர்கள் இடம் பெற் றுள்ளனர்.

முதல் அணி

பெண்கள் அணி : இந்திய மகளிர் அணியில் கோனேரு அம்பி, உலகின் 10 ஆவது இடத்தில் உள்ள அரிகா துரோணவள்ளி, தானியா சாச்தேவு, வைசாலி ரமேஷ் பாபு மற்றும் பக்தி குல்கர்ணி ஆகியோர் முதல் அணியில் இடம்பெற்றுள்ளனர்.

பெண்கள் பிரிவின் இரண்டாவது அணியில் சௌமியா சுவாமிநாதன், மேரி ஆன் கோமஸ் மற்றும் பத்மினி ரௌட் வந்திகா அகர்வால் மற்றும் திவ்யா தேஷ்முக் ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர்.

இந்திய அணி இளைஞர்கள் மற்றும் அனுபவத்தின் கலவையாக உள்ளது. ஒலிம்பியாட்டில் இரண்டு அணிகளைக் களமிறக்கும் வாய்ப்பு பல இளம் இந் தியத் திறமையாளர்களுக்குத் தங்கள் ஆட்டத்தை மிகப்பெரிய தளத்தில் வெளிப்படுத்துவதற்கான கதவைத் திறக்கிறது. அணிகள் வலுவாகவும், அனுப வம் மற்றும் இளம் திறமையாளர்களின் நல்ல கலவையாகவும் இருக்கின்றன என்று அனைத்திந்திய சதுரங்கக் கூட்டமைப்பின் செயலர் பாரத் சிங் சவுகான் கூறியுள்ளார்.

சதுரங்க விளையாட்டைப் பொறுத்தமட்டில் இந்தியாவின் புகழை உலகமெங்கும் கொண்டுசேர்த்த பெருமை விஸ்வநாதன் ஆனந்துக்கு உண்டு. இதேபோல் இளம் கிராண்ட் மாஸ்டரான பிரக்ஞானந்தா கடந்த மாதம் நடைபெற்ற நார்வே செஸ் குரூப் ஏ ஓபன் செஸ் தொடரின் சாம்பியன் பட்டம் வென்றார். ஆன்லைன் வழியாக நடந்த மாஸ்டர்ஸ் செஸ் போட்டியில் உலகின் நம்பர் ஒன் வீரரான உலக சாம்பியனுமான நார்வேயின் மேக்னஸ் கார்ல்சனைத் தோற்கடித்தார். இதன்மூலம் மூன்று மாதங்களுக்குள் இரண்டு முறை உலகின் நம்பர் ஒன் வீரரை வீழ்த்தி அனைவரையும் மிரள வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மூலவன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...