வார ராசிபலன்கள் (18-07-2022 முதல் 24-07-202) ஜோதிடர் அ.மோகன்ராஜ்

 வார ராசிபலன்கள் (18-07-2022 முதல் 24-07-202) ஜோதிடர் அ.மோகன்ராஜ்

மேஷம்
மேஷ ராசி அன்பர்களே..!! இந்த வாரம் குடும்ப வாழ்க்கையில் மாற்றமான சூழ்நிலைகள் ஏற்படும். நெருக்கமானவர்களுடன் நேரத்தை செலவு செய்து மனம் மகிழ்வீர்கள். எதிர்பாராத சில திடீர் மாற்றம் உண்டாகும். ஆரோக்கியம் தொடர்பான பிரச்சனைகள் குறையும். செயல்பாடுகளில் துரிதம் உண்டாகும். புதிய நபர்களிடம் தேவையற்ற விவாதங்களை தவிர்ப்பது நல்லது. கலை சார்ந்த துறைகளில் இருப்பவர்கள் விவேகத்துடன் செயல்படவும். கமிஷன் சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு மேன்மை ஏற்படும். மனதில் நினைத்த எண்ணங்களை செய்து முடிப்பதற்கான வாய்ப்புகள் உண்டாகும்.
வழிபாடு :
முருகப்பெருமானை வழிபட மேன்மை உண்டாகும்.

ரிஷபம்
ரிஷப ராசி அன்பர்களே..!! இந்த வாரம் பேச்சுகளில் இனிமைகள் வெளிப்படும். தோற்றப்பொலிவில் சில மாற்றம் ஏற்படும். விட்டுக்கொடுத்து செல்வதன் மூலம் எண்ணிய இலக்கை அடைய இயலும். வியாபார பணிகளில் தகுந்த ஆலோசனை பெற்று முடிவெடுக்கவும். வாழ்க்கை துணையின் விருப்பங்களை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். செலவுகளின் தன்மையை அறிந்து செயல்படவும். குடும்பத்தினருடன் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். புதிய ஆர்டர்கள் தொடர்பான முயற்சிகள் கைகூடும். சவாலான பணிகளை சாதுர்யமாக செய்து முடிப்பீர்கள்.
வழிபாடு :
மகாலட்சுமியை வழிபட சுபிட்சம் உண்டாகும்.

மிதுனம்
மிதுன ராசி அன்பர்களே..!! இந்த வாரம் உயர்கல்வி தொடர்பான தேடல் மேம்படும். பயனற்ற செலவுகளின் மூலம் சேமிப்பு குறையும். உத்தியோகம் நிமிர்த்தமான முயற்சிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். வெளி உணவுகளை தவிர்ப்பது ஆரோக்கியத்திற்கு நல்லது. சுபகாரியம் தொடர்பான செயல்பாடுகளில் விவேகம் வேண்டும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். கலை சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு இழுபறியாக இருந்துவந்த சில வாய்ப்புகள் சாதகமாக அமையும். இடமாற்றம் தொடர்பான சிந்தனைகளும், முயற்சிகளும் அதிகரிக்கும்.

வழிபாடு :
பெருமாளை வழிபட சகல சௌபாக்கியங்களும் உண்டாகும்.

கடகம்
கடக ராசி அன்பர்களே..!! இந்த வாரம் வாழ்க்கை துணைவருடன் சிறு சிறு விவாதங்கள் ஏற்பட்டு நீங்கும். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகளில் மாற்றம் ஏற்படும். மற்றவர்களுக்கு அறிவுரை கூறுவதை குறைத்து கொள்வது நல்லது. மாணவர்களின் சிந்தனையின் போக்கில் மாற்றம் உண்டாகும். வியாபார பணிகளில் லாபகரமான சூழ்நிலைகள் ஏற்படும். தந்தைவழி ஆதரவு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். உத்தியோக பணிகளில் உழைப்புக்கு உண்டான பாராட்டுகள் கிடைக்கும்.
வழிபாடு :
வராஹி அம்மனை வழிபட காரியசித்தி உண்டாகும்.

சிம்மம்
சிம்ம ராசி அன்பர்களே..!! இந்த வாரம் குடும்ப உறுப்பினர்களுடன் சிறு தூரப் பயணங்கள் சென்று வருவீர்கள். இணையம் சார்ந்த துறைகளில் சாதகமான பலன்கள் ஏற்படும். எதிர் பாலின மக்களின் மூலம் அனுகூலமான சூழ்நிலைகள் உண்டாகும். விவசாய பணிகளில் மேன்மையான சூழ்நிலைகள் ஏற்படும். மனதில் புதுவிதமான சிந்தனைகள் உண்டாகும். வாழ்க்கை துணைவர் வழியில் மகிழ்ச்சியான தருணங்கள் உண்டாகும். புதிய சொத்துக்கள் மற்றும் வாகனம் வாங்குவது தொடர்பான முயற்சிகள் கைகூடும். உடன்பிறந்தவர்களின் எண்ணங்களைப் புரிந்து கொள்வதற்கான தருணங்கள் உண்டாகும். பணிபுரியும் இடத்தில் ஒத்துழைப்பு மேம்படும்.
வழிபாடு :
சிவபெருமானை வழிபட நேர்மறை எண்ணங்கள் அதிகரிக்கும்.

கன்னி
கன்னி ராசி அன்பர்களே..!! இந்த வாரம் புதிய வியாபாரம் நிமிர்த்தமான முயற்சிகள் கைகூடும். குடும்ப உறுப்பினர்களின் மூலம் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் ஏற்படும். மனதில் நினைத்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உழைப்புக்கான ஊதியம் கிடைக்கப் பெறுவீர்கள். பொழுதுபோக்கு தொடர்பான விஷயங்களில் விரயங்கள் உண்டாகும். தாழ்வு மனப்பான்மையின்றி புத்துணர்ச்சியுடன் செயல்படுவீர்கள். காரசாரமான உணவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. அக்கம், பக்கம் இருப்பவர்களிடம் பயனற்ற விவாதங்களை தவிர்க்கவும்.
வழிபாடு :
ராமரை வழிபட எண்ணங்களில் தெளிவு உண்டாகும்.

துலாம்
துலாம் ராசி அன்பர்களே..!! இந்த வாரம் எந்தவொரு செயலையும் செய்து முடிக்க முடியும் என்ற தன்னம்பிக்கையும், துணிச்சலும் அதிகரிக்கும். கூட்டாளிகளின் ஒத்துழைப்பால் நினைத்த காரியங்களை செய்து முடிப்பீர்கள். ஆரோக்கியம் தொடர்பான இன்னல்கள் குறையும். குடும்ப உறுப்பினர்களிடம் பொறுமையை கையாளவும். வெளி வட்டாரங்களில் புதிய அனுபவமும், அறிமுகமும் உண்டாகும். மாணவர்களுக்கு கல்வியில் ஈடுபாடு அதிகரிக்கும். பகுத்தறிந்த உணரும் செயல்பாடுகள் மேம்படும். நெருக்கமானவர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள்.
வழிபாடு :
லட்சுமி ஹயக்ரீவரை வழிபட ஞாபகசக்தி மேம்படும்.

விருச்சிகம்
விருச்சிக ராசி அன்பர்களே..!! இந்த வாரம் மனம் விட்டு பேசுவதன் மூலம் தெளிவு பிறக்கும். ஆடம்பர செலவுகளின் மூலம் சேமிப்பு குறையும். வாழ்க்கை துணைவரிடம் விட்டுக்கொடுத்து செல்லவும். மனதளவில் புரிதலும், தெளிவும் ஏற்படும். உடல் உழைப்பைக் காட்டிலும் புத்திசாலித்தனமாக செயல்படுவதன் மூலம் மேன்மை உண்டாகும். போட்டித் தேர்வுகளில் வித்தியாசமான அணுகுமுறைகளின் மூலம் சாதகமான சூழ்நிலைகளை உருவாக்குவீர்கள். விளையாட்டு சார்ந்த துறைகளில் முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும்.
வழிபாடு :
தட்சிணாமூர்த்தியை வழிபட நினைத்த காரியம் நிறைவேறும்.

தனுசு
தனுசு ராசி அன்பர்களே..!! இந்த வாரம் நட்பு வட்டம் அதிகரிக்கும். வாழ்க்கை துணைவரின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். ஆரோக்கியம் சார்ந்த விஷயங்களில் கவனம் வேண்டும். தனவரவுகளின் மூலம் சேமிப்பு மேம்படும். உறவினர்களின் தன்மைகளை அறிந்து கருத்துக்களை பரிமாற்றம் செய்வது மேன்மையை ஏற்படுத்தும். சிந்தனைப் போக்கில் கவனம் செலுத்துவது முக்கியமாகும். எதிர்பாராத சில அலைச்சல்களின் மூலம் உடல் சோர்வுகள் அவ்வப்போது ஏற்பட்டு நீங்கும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த வெளியூர் தொடர்பான கல்வி வாய்ப்புகள் சாதகமாக அமையும்.
வழிபாடு :
குருமார்களை வழிபட உடல் ஆரோக்கியம் மேம்படும்.

மகரம்
மகர ராசி அன்பர்களே..!! இந்த வாரம் அமைதியான செயல்பாடுகளின் மூலம் உங்கள் மீதான நம்பிக்கை அதிகரிக்கும். நெருக்கமானவர்களிடம் பயனற்ற விவாதங்களை தவிர்க்கவும். வியாபார பணிகளில் புதிய முதலீடு மற்றும் மற்றவர்களின் கருத்துக்களை தீர விசாரித்து முடிவுகளை எடுப்பது நல்லது. சமூகப் பணிகளில் இருப்பவர்களுக்கு செல்வாக்கு அதிகரிக்கும். இணையம் சார்ந்த துறைகளில் திறமைகளை வெளிப்படுத்தி பாராட்டுகளைப் பெறுவீர்கள். உயர் பொறுப்பு தொடர்பான விஷயங்களில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். சொத்துக்கள் விற்பது தொடர்பான முயற்சிகள் கைகூடும்.
வழிபாடு :
ஆஞ்சநேயரை வழிபட நினைத்தது நினைத்த நேரத்தில் நடைபெறும்.

கும்பம்
கும்ப ராசி அன்பர்களே..!! இந்த வாரம் எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். சொத்துக்கள் வாங்குவது தொடர்பாக எண்ணங்கள் கைகூடும். பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கான ஆலோசனைகள் கிடைக்கும். விருப்பங்களை நிறைவேற்றிக் கொள்வதற்கான சூழ்நிலைகள் உண்டாகும். தகவல் தொடர்புத் துறைகளில் இருப்பவர்கள் புதுமையான செயல்பாடுகளில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். பத்திரம் சார்ந்த துறைகளில் ஆதாயம் உண்டாகும். கிடைக்கின்ற சிறு வாய்ப்புகளை பயன்படுத்தி முன்னேற்றத்தை ஏற்படுத்துவீர்கள்.
வழிபாடு :
அய்யனாரை வழிபட எதிரிகள் பயம் நீங்கும்.

மீனம்
மீன ராசி அன்பர்களே..!! இந்த வாரம் உத்தியோக பணிகளில் சில மாற்றமான சூழ்நிலைகள் ஏற்படும். வேகத்தை விட விவேகமான செயல்பாடுகள் முன்னேற்றத்தை உருவாக்கும். தாயாரின் ஆரோக்கியம் சார்ந்த விஷயங்களில் கவனம் வேண்டும். குடும்ப உறுப்பினர்களின் எண்ணங்களைப் புரிந்து கொண்டு அதற்குத் தகுந்தாற்போல செயல்படுவீர்கள். வருமானத்தை அதிகரிப்பது தொடர்பான சிந்தனைகள் மேம்படும். சீருடை சார்ந்த பணிகளில் பொறுப்பும், வரவும் அதிகரிக்கும். பேராசையின்றி செயல்படுவது உங்கள் மீதான நம்பிக்கையை மேம்படுத்தும்.
வழிபாடு :
ராகவேந்திரரை வழிபட நன்மைகள் உண்டாகும்.

கமலகண்ணன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...