கிண்டி பாம்புப் பண்ணை ஐம்பது ஆண்டுகளை நிறைவு செய்தது

 கிண்டி பாம்புப் பண்ணை  ஐம்பது ஆண்டுகளை நிறைவு செய்தது

சென்னையில் பாம்புப் பண்ணை என்றாலே நினைவுக்கு வருவது கிண்டி பாம்புப் பண்ணை. சுற்றுலா பயணிகளில் குறிப்பாக குழந்தைகளை ஈர்க்கும் விதமாக இந்தப் பாம்புப் பண்ணை அமைந்திருக்கிறது. குறிப்பாக பள்ளி மாணவர்களிடையே இது பிரபலமாகி உள்ள நிலையில், அவர்கள் இந்தப் பூங்காவிற்கு வருகை தந்து பாம்பு வகைகளை கண்டுகளித்து செல்வார்கள்.

இந்தியாவில் முதல் ஊர்வன பூங்கா கிண்டியில் உள்ள பாம்பு பூங்காதான் என்று சிறப்பு பெற்றது. 34 பாம்பு இனங்களைச் சேர்ந்த 300 விலங்குகள் பராமரிக்கப்படுகிறது. இங்கு 50 ஆண்டுகளை நிறைவு செய்தது.

சென்னை கிண்டியில் உள்ள பாம்புப் பண்ணை புகழ்பெற்ற ரோமுலஸ் விட்டேக்கர் என்பவரால் 1972 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. பாம்புகளைப் பராமரிக்கவேண்டும், காட்சிப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்துடன் இந்தப் பாம்புப் பண்ணை தொடங்கப்பட்டது. இது லாப நோக்கமற்று செயல்பட்டு வருகிறது. இதன் மூலம் பாம்புகள் மற்றும் பிற ஊர்வன விலங்குள் மீது பொது மக்களின் ஆர்வத்தை வெளிப்படுத்த தூண்டுகிறது. இது இந்தியாவின் முதல் ஊர்வன பூங்காவாகும்.

சென்னையின் புறநகரில் உள்ள சேலையூரில் முதலில் நிறுவப்பட்டது. பின்னர் ஒரு குழுவின் உதவியுடன் சென்னையைச் சேர்ந்த இயற்கை ஆர்வலர்கள், 1972-ம் ஆண்டு கிண்டியில் பாம்பு பூங்கா அமைக்கப்பட்டது. தமிழக அரசின் வனத் துறையிடமிருந்து குத்தகைக்குப் பெறப்பட்ட நிலத்தில் பாம்புப் பண்ணை அமைந்துள்ளது. இதனை நிர்வகிக்க ஒரு அறக்கட்டளை உருவாக்கப்பட்டு உள்ளது.

இந்தியாவில் ஊர்வனவற்றைப் பாதுகாப்பதில் மட்டுமல்லாமல், ஊக்குவிப்பதிலும், நாட்டின் பிற இடங்களில் இதே போன்ற முயற்சிகள் அமையவும் கிண்டி பாம்புப் பண்ணை ஒரு முன்மாதிரியாக திகழ்கிறது.

கிண்டி பாம்புப் பண்ணையில் தற்போதைய நிலவரப்படி 20 இந்திய பாம்புகளின் இனங்கள், இந்திய முதலைகளின் 3 இனங்கள், இரண்டு வகையான கவர்ச்சியான பாம்புகள், முதலைகள், மூன்று வகையான இந்திய ஆமைகள் மற்றும் ஆமைகள், 4 வகையான இந்திய பல்லிகள், பச்சை ஓணான்கள், ஸ்லைடர் ஆமை போன்ற சில வெளிநாட்டு ஊர்வனம் என மொத்தம், 34 இனங்களைச் சேர்ந்த 300 விலங்குகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன.

மிகவும் சிறப்பு மிக்க கிண்டி பாம்புப் பண்ணை அதன் வெற்றிகரமான 50 ஆண்டுகளை நிறைவு செய்து, பொன்விழா விழாவைக் கொண்டாடத் தயாராகி வருகிறது. இந்த விழா நிகழ்ச்சி கிண்டியில் உள்ள ஹோட்டல் ரமடா பிளாசாவில் நாளை (21-6-2022) நடைபெறவிருக்கிறது. இதில் கூடுதல் தலைமைச் செயலாளர் சுப்ரியா சாகு, வனத்துறை அதிகாரி சையத் முஸம்மில் அப்பாஸ் உள்ளிட்ட பலர் பங்கேற்கிறார்கள்.

பெரிய வனவிலங்கு சுற்றுலா தலமான வண்டலூர் உயிரியியல் பூங்கா, புலிகள் மற்றும் யானைகள் சரணாலயம் போன்று இதனை கவனித்துக்கொள்ள அரசு சரியான நிதியும் ஒதுக்கவில்லை. இத்தனை ஆண்டுகளாக இங்கு வரும் சுற்றுலா பயணிகள் மூலம் வசூலிக்கப்பட்ட நிதியின் மூலம் இந்தப் பண்ணையை நடத்தி வந்தார்கள்.  கொரோனா தொற்று பாதிப்பு எதிரொலி காரணமாக ஐம்பது வருட பாம்புப் பண்ணை மூடப்படலாம் என இதனை நடத்தி வரும் அறக்கட்டளை செய்தி அறிக்கையை ஒன்றை வெளியிட்டது. இந்தச் செய்தி வனத்துறை அலுவலர்களைப் பெரும் அதிர்ச்சியடையச் செய்தது. அறக்கட்டளை நிர்வாகிகளுடன் தொடர்பு கொண்டு பேச்சுவார்த்தை நடத்தி பாம்புப் பண்ணையை எக்காரணமும் கொண்டு மூடக்கூடாது. அதற்கான உதவிகளை வனத்துறை செய்யும் எனவும் உறுதி அளித்ததாக தகவல் வெளியானது.

மூலவன்

Leave a Reply

Your email address will not be published.