மு.க.ஸ்டாலினுக்கு கலைஞர் பாராட்டு
மு.க.ஸ்டாலின் நடித்த ‘முரசே முழங்கு’ என்கிற நாடகத்தின் 40வது நாடக விழா சென்னையில் நடந்தது. 1971ஆம் ஆண்டு நடந்த இந்த விழாவுக்குத் தலைமை தாங்கி அன்றைய முதல்வர் கலைஞர் கருணாநிதி பாராட்டிப் பேசினார்.
“என் மகன் ஸ்டாலின் நடித்த இந்த நாடகம் 40 ஊர்களில் நடிக்கப்பட்டு இருக் கிறது. இடையில் திடீர் என்று ‘முதல்வரின் மூத்த செல்வன் மு.க.முத்து நடிக்கும் நாடகம்’ என்ற செய்தி வெளியூரில் இருந்தபொழுது பத்திரிகைகளில் பார்த்தேன். இந்த அளவிற்கு ஒரு குடும்பமே ஈடுபடுகின்ற அளவிற்கு நிலைமை ஏற்பட் டிருப்பதை எண்ணுகிற நேரத்தில் ஒரு பக்கத்தில் மகிழ்ச்சி அடைகிறேன். அதே நேரத்தில் எப்படி நான் என்னுடைய தாய், தந்தையருக்கு அடங்காத பிள்ளையாக இருந்தேனோ- இந்த இயக்கத்தில் ஈடுபட்டேனோ -அதைப் போல என்னுடைய பிள்ளைகளும் இருக்கிறார்கள் என்பதை எண்ணும்போது, நான் செய்த குற்றத் திற்கு ஏற்ற தண்டனைதான் எனக்குக் கிடைக்கிறது என்று கருதுகிறேன்.
அந்தத் தண்டனை தமிழ்நாட்டை வாழ வைக்கிற காரியத்திற்கு உறுதுணையாக இருப்பதால் இப்படிப்பட்ட தண்டனைகள் அடிக்கடி கிடைக்கவேண்டும் என்று எண்ணினாலும்கூட, ஸ்டாலின் போன்றவர்கள் கொஞ்சம் ஒழுங்காக முறை யாகப் படித்து எனக்கிருக்கிற ஒரேயொரு குறை அவர்களுக்கு இல்லாத அளவில் அவர்கள் கல்லூரி மட்டத்தில் படிக்கவேண்டும் என்ற என்னுடைய ஆசையை என்னுடைய பிள்ளைகள் நிறைவேற்ற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.”
பெண் வேடம் போட்ட எம்.ஜி.ஆர்.
கலைஞர் கருணாநிதி 1961ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர். கலந்துகொண்ட கூட்டத் தில் பேசினார். அதில் எம்.ஜி.ஆர். நாடகங்களில் பெண் வேடமிட்டு நடித்த தையும் அவர் பெண்களைப் பற்றிக் கூறியதையும் ஒப்பிட்டு1961ஆம் ஆண்டு பேசினார் கலைஞர் கருணாநிதி.
இராசாமணி மகளிர் மன்றம்-அஞ்சுகம் கைத்தொழில் இல்லம் ஆகியவற்றின் ஆண்டு விழா 1961ஆம் ஆண்டு சென்னையின் நடந்தது. தாய்மார்களின் சார்பில் கழகத்தைப் பாராட்டி எம்.ஜி.ஆர். பேசினார். பிறகு பேசிய முதலமைச்சர் கருணா நிதி இது பற்றி குறிப்பிட்டார்.
“இந்த விழாவில் தாய்மார்கள் சார்பில் கழகத்தின் பொருளாளர், புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர். பாராட்டியதை நாவலர் வேடிக்கையாகக் குறிப்பிட்டார்.
நான் அப்போது எம்.ஜி.ஆர். இடம் ‘நீங்கள் பழைய கால நாடகங்களில் பெண் வேடம் போட்டதுண்டா?’ என்று கேட்டேன். அதற்கு அவர், ‘போட்டதுண்டு. ஆனால் அழுது புலம்பும் வேடம் போட்டதில்லை. தளுக்கி, மினுக்கி நடிக்கும் பெண் வேடம்தான் போட்டியிருக்கிறேன்’ என்று குறிப்பிட்டார்.
அவர் சொல்வதற்கு முன்பே அப்படிப்பட்ட வேடத்தில்தான் அவர் நடித்திருப்பார் என்பது நமக்குத் தெரியும். மறைந்த தமிழ்த்தென்றல் திரு.வி.க. ஆண்மை என்பது பெண்மை இணைந்தால்தான் முழுமை பெறுகிறது என்றும், பெண்மையில்லாத வெறும் ஆண்மை மாத்திரம் இருந்தால் அங்கே அன்பு இருக்காது. அந்த இதயத் தில் ஈரம் இருக்காது. இருக்கிற வீரமும் ரோசம் போகாத வீரமாக இருக்காது என்று அழகாகக் குறிப்பிட்டிருக்கிறார்.
ஆண்மை கொண்டவன் உள்ளத்தில் ஈவு இரக்கம், தயவு தாட்சணியம் எல்லாம் இருந்தால்தான் ஆண்மை முழுமை பெறுகிறது. அதனால்தான் புராணீர்கள்கூட சக்தி, சிவன் என்றெல்லாம் எடுத்துக் காட்டி ஒப்பிட்டுப் பேசியிருக்கிறார்கள்.
சக்தியில்லாமல் சிவன் இல்லை. சிவன் இல்லாமல் சக்தியில்லை என்பதை இது போன்ற சொற்பொழிவுகளில் சொல்வதற்குப் பதில் போராட்டத்தை மூட்டிவிட்டு பிறகு இரண்டும் ஒன்றுதான் என்று முடிப்பார்கள். நாம் போராட்டத்தை மூட்டி மறுபடியும் முடிப்பதற்குப் பதில் தொடக்கத்திலேயே ஆண்மை என்பதே பெண்மையால்தான் என்பதைச் சொல்லி விடுகிறோம்.
தாய்மார்கள் தாங்கள் இல்லாமல் ஆண்களுக்குச் சிறப்புக் கிடையாது என்று உரிமை கொண்டாடினால் அந்தப் பெருமையை அவர்களுக்கு நாங்கள் தாராள மாக வழங்குகிறோம்.
புரட்சி நடிகர் ‘பெண்கள் பேசித்தான் ஆண்கள் கேட்கவேண்டும் ஆண்கள் பேசிப் பெண்கள் எங்கே கேட்கப் போகிறார்கள்’ என்றார்.
நாங்கள் பேசுதை அவர்களும் அவர்கள் பேசுவதை நாங்களும் கேட்கிறோம். ஆனால் இன்று புரட்சி நடிகர் பெண்களோடு சேர்ந்து பாராட்டுவதால் அப்படிச் சொன்னார் என்று கருதுகிறோன்” என்றார் கருணாநிதி.