ராமேஸ்வரம் கடற்கரையில் மிதக்கும் கல் பற்றித் தெரியுமா உங்களுக்கு?

ராமாயணத்தில் சீதையை மீட்க இலங்கைக்கு சேது பாலத்தை மிதக்கும் கல்லால் கடலில் பாலம் அமைத்து ராமரும், வானரப் படைகளும் சென்ற கதை அனைவரும் அறிந்ததே. வானரப் படைகள் கடலைக் கடக்க பாலத்தை அமைக்க வேண்டிய கட்டயத்தில், அனுமனுக்குத் தோன்றிய யோசனைதான் இந்த மிதக் கும் பாலம். இதற்காக ஆயிரக்கணக்கான வானரப் படைகளுடன் கடலில் சென்று பவளப் பாறைகளைப் பெயர்த்தெடுத்து வரிசையாகக் கடலில் போட்டனர்.
சாதாரண பவளப் பாறைகளை கடலில் போட்டால் அது தண்ணீரில் மூழ்குவது வழக்கம், இதனால் ராம் என்று எழுதி அனுமான் கடலில் போட்டதால் அது கடலில் மிதந்தது. அதில்தான் இலங்கைக்கு ராமன்பிரான் வானரப் படைகளுடன் கடலைக் கடந்ததாகப் புராணம் கூறுகிறது.
ராமேஸ்வரம் பேருந்து நிலையத்திலிருந்து, ராமேஸ்வரம் கோயிலுக்குச் செல்லும் வழியில் உள்ள ஒரு சிறிய கோயிலில் இந்த மிதக்கும் கற்களை ஒரு தொட்டியில் தண்ணீரில் நிரப்பி வைத்து அதில் போட்டு வைத்துள்ளனர்.
அந்தக் கல் மற்ற மிதக்கும் பொருட்களைப் போல தண்ணீரில் தத்தளிக்காமல், நிதானமாக, மெதுவாக மட்டும் ஆடுகிறது. சாதாரணக் கற்களைப் போல இல்லா மல், கல்லில் முழுவதும் சிறிய துவாரம் போன்று உள்ளன. மற்ற கற்களைப் போல எடை இருந்தாலும், மிதப்பது அதிசயமாகப் பார்க்கப்படுகிறது.
ஒரு வித்தியாசமான பவளப்பாறை கற்களை பைப் கோரல் என்கின்றனர். இவற் றில் காற்றுத் துளைகள் அதிகமாக உள்ளதால் கடல் நீரில் மிதக்கும் தன்மை கொண்டவை. இலங்கைக் கடல் பகுதியில் ஏற்படும் புயல்களிலிருந்து ராமேஸ் வரம் பாதிக்கப்படாமல் இருக்க இப்பாறைகள் பேருதவி புரிகின்றன.
பாதுகாக்கப்பட வேண்டிய இத்தகைய சிறப்பு வாய்ந்த பவளப்பாறைகளைப் பாது காக்க சட்டம் இயற்றப்பட்டுள்ளது.இவற்றை எடுப்பதோ விற்பதோ குற்றமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ராமேஸ்வரத்தில் ஒரு கோவிலில் இந்தப் பாறை பார்வைக்கு வைக்கப்பட்டுள் ளது. கள்ளத்தனமாக இப்பாறைகளை எடுத்து சில ஆன்மிகவாதிகளின் தலையில் கட்டும் ஒரு கூட்டமும் அங்கே அலைவதில் வியப்பில்லை. எல்லாம் வியாபாரம் தான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!