பிரத்தியங்கிரா தேவி வழிபாடும் பலன்களும்

 பிரத்தியங்கிரா தேவி வழிபாடும் பலன்களும்

வெள்ளிக்கிழமையில், பிரத்தியங்கிரா தேவியை வழிபட்டு, ஆத்மார்த்த மாக வேண்டிக்கொண்டால், நம் பிரச்சினைகளையெல்லாம் தீர்த்தருள் வாள் தேவி.

மயிலை கற்பகாம்பாள், திருவேற்காடு கருமாரி, திருமீயச்சூர் லலிதாம்பாள், சங்கரன்கோவில் கோமதி அன்னை, திருநெல்வேலி காந்திமதி அன்னை, புன்னைநல்லூர் மாரியம்மன், உறையூர் வெக்காளி அம்மன், இருக்கன்குடி மாரியம்மன், மேல்மலையனூர் அங்காளம்மன், மாங்காடு காமாட்சி அன்னை எல்லாவற்றுக்கும் மேலாக உலகச் சக்தி பீடங்களுக்கெல்லாம் தலைவியாகத் திகழும் காஞ்சி காமாட்சி என மகாசக்தி ஒவ்வொரு வடிவ மாக, ரூபமாக, ஒவ்வொரு குணத்துடன் நமக்கு அருள்பாலித்து வருகின்ற னர். அதேபோல், காளி, காளீஸ்வரி, முண்டகக்கண்ணி, செல்லியம்மன், தீப்பாய்ச்சி அம்மன், சமயபுரம் மாரியம்மன், வல்லம் ஏகெளரியம்மன், கொல்லங்குடி மாரியம்மன், அய்யாவாடி பிரத்தியங்கிரா தேவி என இன்னும் பல தெய்வங்கள், உக்கிரமாகவும் கடும் ஆயுதங்களுடன் தரிசனம் தருகின்றனர்.

இதில் பிரத்தியங்கிரா தேவி மிகவும் விசேஷமானவள். சிங்கமுக நாயகி. கடும் உக்கிரத்துடன் இருப்பாள். ஆனால் பக்தர்களிடம் ஒருபோதும் தன் கோபத்தைக் காட்டமாட்டாள். தன் பக்தர்களைச் சோதிப்பவர்களைப் பொறுத்துக்கொண்டு பார்த்திருக்கமாட்டாள்.

சக்தி வழிபாட்டில், வராஹியும் காளியும் பிரத்தியங்கிராவும் ஒருவகை. பொதுவாக, காளி உக்கிர தெய்வம்தான். ஆனால், சென்னை பாரிமுனை யில் உள்ள காளிகாம்பாள், சாந்த சொரூபினி. அந்தக் கோயிலிலேயே பிரத்தியங்கிராவும் கோயில் கொண்டிருக்கிறாள்.

சோழிங்கர் கோயில் பிரத்தியங்கிரா தேவி

கும்பகோணம் அருகில் உள்ள பட்டீஸ்வரம் துர்க்கை போல், அம்மன் குடி துர்க்கை போல், கும்பகோணம் அய்யாவாடியில் உள்ள பிரத்தியங்கிரா தேவியும் மகோன்னதம் மிக்கவள். உக்கிரம் நிறைந்தவள். அவளை மனதார வழிபடுவது ரொம்பவே சக்தி வாய்ந்தது. பிரத்தியங்கிரா தேவியை வெள்ளிக்கிழமையில் விளக்கேற்றி வேண்டிக்கொண் டால், நாம் கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வருவாள் பிரத்தியங்கிரா தேவி.

செவ்வாய்க்கிழமை, வெள்ளிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை முதலான நாட்களிலும் அமாவாசை, பெளர்ணமி முதலான நாட்களிலும் பிரத்தியங் கிரா தேவியை மனதார வழிபடுங்கள்.

தேவி பயத்தை போக்குபவள். எந்த காரணத்தினால் பயம் ஏற்பட்டாலும் இவள் நாமத்தை சொன்னாலே நிவாரணம் கிடைத்துவிடும் தேவி நான்கு சிங்கங்கள் பூட்டிய ரதத்தில் சிம்ம முகத்தோடும், எட்டு கைகளோடும், மிகக் கோபமான பார்வையோடும், உக்கிரமான வேகத் தோடும் காணப்படுகிறாள். இந்து தொன்மவியலின் படி தேவி விஷ்ணு, காளி, துர்க்கை ஆகியோரின் வடிவமாகவும் கருதப்படுகிறார். தேவியை மனதார வேண்டி, தரிசித்து வந்தாலே நம் எதிர்ப்புகள் அனைத்தும் துரத்தியருள்வாள். எதிரிகளை பலமிழக்கச் செய்வாள் என்பது ஐதீகம்.

பேய், பில்லி, சூன்யம் பறந்தோட, பயம் நீங்கச் செய்வாள். ஞாயிற்றுக் கிழமையன்று ராகு காலம் மாலை 4.30 முதல் 6.00 மணிவரை வீட்டில் விளக்கேற்றுங்கள். செந்நிற மலர்கள் சூட்டி அலங்கரியுங்கள். தேவியின் காயத்ரி மந்திரத்தைச் பாராயாணம் செய்து, ஆத்மார்த்தமாக வேண்டிக் கொள்ளுங்கள். துஷ்ட சக்திகளையெல்லாம் அண்டவிடாமல் நம்மைக் காத்தருள்வாள் தேவி..

தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு கருணையே உருவாகி அருள்பாலிப் பவள். தொடர்ந்து தேவியை வழிபடுங்கள். தடைகள் அனைத்தும் தகர்த்து, முன்னேற்றப் பாதையில் வாழ்க்கையை அமைத்துக் கொடுத்து அருளு வாள் பிரத்யங்கிரா தேவி.

தேவியின் வரலாறு

இரண்யகசிபுவை சம்ஹாரம் செய்த நரசிம்மர் அவனுடைய ரத்தத்தை பருகியதால் கடுமையான உக்கிரம் கொண்டார். நரசிம்மரின் உக்கிரத் தைக் குறைத்து சாந்தமடையச் செய்ய சிவபெருமானின் அம்சமான சரபரிடம் இருந்து தோன்றியவர்தான் பிரத்யங்கிரா தேவி என்று புராண கதைகள் கூறுகின்றனர்.

பிரத்யங்கிரா தேவி பற்றிய குறிப்பு

நரசிம்ம அவதாரம் எடுத்து ஹிரண்யகசிபுவை வதம் செய்த பின்பும் தனது உக்கிரம் அடங்காமல் இருந்தார் நரசிம்மராக இருந்த மகாவிஷ்ணு. இத னால் பயந்த தேவர்கள் சிவபெருமானிடம் சென்று முறை யிட, அவர் சரபேஸ்வரர் என்ற மிகப்பெரும் பறவை வடிவெடுத்து, நரசிம்மரின் கோபக்கனல் இந்த உலகை அழிக்காமல் பாதுகாத்தார். அப்போது நரசிம்ம ரிடமிருந்து தோன்றிய ‘கண்டபேருண்ட’ என்ற இரு தலை பறவைக்கும், சரபேஸ்வரருக்கும் பயங்கர சண்டை மூண்டது. இதனால் உலகமே அழியும் நிலை ஏற்பட்டது. அப்போது இந்த உலகை அழிவிலிருந்து காக்க சிவபெருமானின் மனைவியாகிய ஆதிபராசக்தி, தனது அம்சமாக ஆண் சிங்கத்தின் தலையும், பெண் மனித உடலும் கொண்ட பிரத்யங்கரா தேவி என்ற சக்தி வாய்ந்த பெண் தெய்வத்தை உருவாக்கி அனுப்பினாள். சரபேஸ் வரர், கண்டபேருண்டம் இடையே யான சண்டையை நிறுத்த பிரத்யங்கரா தேவி எழுப்பிய கர்ஜனை அண்ட சராசரங்களையும் அதிர வைத்து, அந்தச் சண்டையையும் நிறுத்தியது. இத்தகைய சக்தி வாய்ந்த பிரத்யங்கரா தேவியை நாம் வணங்குவதால், நமக்குத் தீமை செய்யும் சக்திகளிட மிருந்து அந்த தேவி காப்பாள்.

பல சிறப்புக்கள் உடைய பிரத்யங்கிரா தேவியை எவர் ஒருவர் வழிபட்டு கீழே உள்ள மந்திரத்தை ஜெபிக்கிறார்களோ அவருக்கு நவ சக்திகளின் அருள் கிடைக்கும். அதோடு எதிரிகள் அழிவர், நோயற்ற வாழ்வு கிடைக்கும்.

பிரத்யங்கிரா தேவி மந்திரம்:

ஓம் ஹ்ரீம் யாம் கல்பயந்தீ நோரயா:

க்ரூராம் க்ரித்யாம் வதூமிவா தாம் ப்ரம்மணா அபநிர்ன்னுதமா:

ப்ரத்யக் கர்த்தாரம் ருச்சது ஹ்ரீம் ஓம்.

இந்த மந்திரத்தின் ரிஷி: நாரதர்;

சந்தஸ்: அனுஷ்டுப்;

தேவதை:மஹா பிரத்யங்கிரா தேவி.

நவசக்திகள் என்று சொல்லக்கூடிய பூமி சக்தி, ஜல சக்தி, அக்னி சக்தி, காற்று அல்லது உயிர் சக்தி, பிரபஞ்ச சக்தி, அமிர்த சக்தி, சூரிய சக்தி, பாவ புண்ணியங்களை தீர்மானிக்கும் சக்தி, மோட்சம் அருளும் சக்தி ஆகிய சக்திகளின் ரூபமாக விளங்குகிறார் பிரத்யங்கிரா தேவி.

உடல், மன தூய்மையோடு தினமும் பிரத்யங்கிரா தேவியை வணங்கி மேலே உள்ள மந்திரத்தை 9 முறை கூறிவர நவசக்திகளின் பரிபூரண அருளைப் பெற்று பெருவாழ்வு வாழலாம்.

மூலவன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...