தாயாக வந்த தாயுமானவன் -பாரதி பாஸ்கர்
வாழ்க்கையில என்ன கஷ்டம் வந்தாலும் துன்பம் வந்தாலும் நாம கும்பிடுற கடவுள் நம்மைக் காப் பாத்துவார்’னு என் அம்மா, அப்பா இருவரும் அவர்கள் உயிரோடிருந்தவரை அடிக்கடிச் சொல் வார்கள். அந்த வார்த்தைகள் மந்திரச்சொல் மாதிரி என் மனத்தில் தங்கிவிட்டன.
ஒரு நெருக்கடியான நேரம்… எனக்கு இரண்டா வது குழந்தை பிரசவத்தின் போது வலி பொறுக்க முடியவில்லை. மருத்துவமனையில் அனுமதிக் கப்பட்டிருந்தேன். டாக்டர் என்னைப் பரிசோ தித்துவிட்டு, “இன்னும் 24 மணி நேரம் ஆகும்” என்றார் எனக்கோ மிகுந்த வலி. எனது தாயார் வெளியில்தான் இருந்தார். அந்த வேளையில், திருச்சி தாயுமானவர் சுவாமியை நினைத்துக் கொண்டேன்.
அந்தக் காலத்தில் காவிரிப்பூம்பட்டினத்திலி ருந்து திருச்சிக்கு மணம் முடித்துப் புகுந்த வீட் டுக்கு வந்த ரத்னாவதி என்ற பெண் கர்ப்ப மடைகிறாள். பிரசவத்துக்கு தாய் வீட்டுக்குச் செல்லலாம் எனப் புறப்பட்டுவிட்டாள். மகளுக் குப் பிரசவத்துக்குத் துணையாயிருக்க தாயும் கிளம்பிவருகிறாள். ஆனால், காவிரியிலோ வெள் ளம் கரைபுரண்டோடுகிறது.
மகள் இக்கரையிலும் தாய் அக்கரையிலும் இருக் கவேண்டிய நிலை. மகளுக்கோ பிரசவ வலி வந்துவிட்டது. எவரும் உதவிக்கு அருகில் இல்லை. தாளாத வலியில் சிவபெருமானை எண்ணி வணங்குகிறாள். சிவபெருமானே அவளது தாயின் வடிவில் வந்து மருத்துவம் பார்க்கிறார். சுகப்பிரசவம் ஆகிறது. அதனால்தான் மலைக் கோட்டையிலிருக்கும் சிவனுக்கு தாயுமானவ சுவாமி என்று பெயர்.
இதேபோல் என்ன நடந்ததோ தெரியவில்லை, என்னுடைய படுக்கைக்கு அருகில் இருந்த பெண் ணைப் பரிசோதிக்க வந்த மற்றொரு டாக்டர் உடனடியாக என்னை லேபர் வார்டில் அனுமதிக் கச் சொன்னார். சில நிமிடங்களில் குழந்தை பிறந்தது.
தாயுமானவனின் கருணையை எண்ணி, எனது கண்கள் பனித்தன. இப்படிப் பல சம்பவங்கள். எந்தச் சூழ்நிலையிலும் கடவுள்நம்மைக் கைவிட மாட்டார் எனும் ஆழ்ந்த நம்பிக்கையே எனது ஆன்மிகம்.