முன்னே இந்தி திணித்தார்கள், இப்ப இந்திக்காரர்களைத் திணிக்கிறார்கள் -இயக்குநர் பேரரசு கண்டனம்!

 முன்னே இந்தி திணித்தார்கள், இப்ப இந்திக்காரர்களைத் திணிக்கிறார்கள் -இயக்குநர் பேரரசு கண்டனம்!

தமிழ்நாடு இன்று தமிழர்கள் நாடாக இருக்கிறதா என்பது சந்தேகமாக இருக் கிறது என்கிறார் இயக்குநர் பேரரசு!

நாம் தமிழ்நாட்டில் வாழ்கிறோமா இல்லை வெளிநாட்டில் வாழ்கிறோமா என்ப தும் கேள்விக்குறியாக இருக்கிறது!

மக்கள் அன்றாடம் செல்லும் இடங்களான உணவகம், துணிக்கடை, விமான நிலையம், ரயில்வே நிலையம் போன்ற இடங்களில் பெரும்பாலும் தமிழர்கள் பணியில் இல்லை என்பது வேதனையான விஷயம். வட இந்தியர்களே அதிக மாக வேலை செய்கிறார்கள் என்பதும் மிக மிக வேதனையான விஷயம்.

ஓரளவு படித்தவர்கள் அவர்களுக்குப் புரியவைப்பதும் அவர்களின் கேள்விக்குப் பதில் சொல்வதும் மிகவும் சிரமமான நிலையில் படிக்காத, பாமர மக்களின் நிலையை எண்ணிப் பார்க்கும்போது மிகவும் கஷ்டமாக இருக்கிறது.

ஒரு கடைக்குச் சென்றால் வாடிக்கையாளர்களை அங்குள்ள பணியாளர்கள் அன்போடு வரவேற்று பணிவோடு எண்ணவேண்டும் என்று விசாரிப்பது முக்கிய மாக நம் தமிழர்களின் பண்பாடாக இருந்துவந்தது. ஆனால் இப் பொழுது அந்தப் பண்பாடு புண்பட்டிருக்கிறது.

ஒரு உணவகத்திற்குச் சென்றால் நம் அருகே வடஇந்தியர்கள் ரோபோ போல் வந்து நம் அருகில் நிற்க்கிறார்கள். என்ன இருக்கிறது என்று கேட்கும் பொழுது அவர்கள் எங்கேயோ பார்த்தபடி ஒரு லிஸ்டை சொல்லுகிறார்கள். நாம் அதில் என்ன வேண்டும் என்று சொல்லும்பொழுது அதற்கு எந்த ரியாக்சனும் இல்லா மல் குறிப்பு எடுத்துவிட்டு நம்மைக் கடந்து செல்கிறார்கள். இது நமக்கு ஒருவித அவமானமாக தோன்றுகிறது.

அதேபோல் சில தங்கும் விடுதிகளுக்குச் சென்று அறையை புக் செய்யும் பொழுது அவர்கள் நம்மை ஒரு விசாரணைக் கைதி போல் விசாரிக்கிறார்கள். அது நமக்கு மிகவும் அவமானமாகவும் தோன்றுகிறது.

நாம் வீடு கட்டுகிறோம். அங்கே கட்டடத் தொழிலாளர்களாக இருப்பது பெரும் பாலும் வடஇந்தியர்கள். நம் கட்டட வேலையை நாம் பார்க்கச் செல்லும் பொழுது நம்மிடம் சம்பளம் வாங்கும் அவர்கள் நமக்குச் சரியான மரியாதை கொடுப்ப தில்லை.

அதேபோல் விமான நிலையம். இது தமிழ்நாட்டில் உள்ள விமான நிலை யமா? இல்லை மும்பையில் உள்ள விமான நிலையமா? என்ற சந்தேகமும் வருகிறது விமான நிலையம் எல்லா மொழியினருக்கும் பொதுவானதுதான். ஆனால் இங்கே தமிழர்கள் இருக்க வேண்டாமா? முக்கியமாக நுழைவாயில், அதிகமாகத் தமிழர்கள் செல்லும் நுழைவு வாயிலில் தமிழ் தெரிந்த ஒருவர் இருக்க வேண்டாமா? வடஇந்தியரும் இருக்கட்டும். கூடவே ஒரு தமிழரும் இருக்க வேண்டாமா? தமிழ்நாட்டில் எத்தனை தமிழர்கள் அந்த இடத்தில் திணறுகிறார் கள், பயப்படுகிறார்கள் அவர்கள் என்ன கேட்கிறார்கள் என்று புரியாமல் தவிக்கிறார்கள்.

விமான நிலையத்தில் மட்டுமல்ல, பல பொது இடங்களிலும் இன்று தமிழ் நாட் டில் இந்த நிலைமைதான்.

‘இந்தித் திணிப்பு வேண்டாம்! இந்தித் திணிப்பு வேண்டாம்!’ என்று நாம் தமிழ் நாட்டில் இந்திக்காரர்களைத் திணித்துக்கொண்டிருக்கிறோம். தமிழ்நாட்டில் தமிழில் பேசமுடியாத நிலையை உருவாக்கிக் கொண்டிருக்கிறோம்.

தமிழை வளர்க்கிறோமோ இல்லையோ தமிழை அழிந்துவிடாமல் காக்கும் நிலையில்தான் நாம் இருக்கிறோம் என்பது மிகப்பெரிய உண்மை. நம் மொழி யில் நமக்கு விழிப்புணர்வு வேண்டும்.

குறைந்த சம்பளத்திற்கு வடஇந்தியர்கள் வேலைக்கு வருகிறார்கள் என்பதற்காக நாம் நம் தமிழ்நாட்டை அவர்களுக்கு அடகு வைத்துவிடக் கூடாது!

தமிழ்நாட்டில் பொது இடங்களில் ஸ்தாபனங்களில் மக்களைத் தொடர்புகொள் ளக் கூடியவர்களாகத் தமிழர்களாகத்தான் இருக்கவேண்டும்!

இந்த விஷயத்தில் நம் தமிழக அரசு தகுந்த நடவடிக்கை எடுக்கவேண்டும். தமிழக அரசு தமிழ் காக்கும் அரசாக உஷாராக வேண்டும்.

வாழ்க தமிழ்! வெல்க தமிழ்!

மூலவன்

1 Comment

  • தமிழன் யாரும் வேலை செய்வதை விரும்பவில்லை. அரசு தரும் இலவசம் போதும் என்று உழைப்பை கை விட்டு விட்டார்கள்.

Leave a Reply to Giriraj Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...