நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்… எட்டு முனை போட்டி… பணப்பட்டுவாடா ஜோர்…

 நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்… எட்டு முனை போட்டி… பணப்பட்டுவாடா ஜோர்…

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வருகிற 19ஆம் தேதி நடைபெற உள்ளது. கடந்த 10 நாட்களாக நடந்துவந்த தீவிர தேர்தல் பிரசாரம் 17ஆம் தேதி மாலையுடன் நிறைவு பெற உள்ளது.

தேர்தல் பிரசாரத்துக்கு இன்னும் இரண்டு நாட்களே அவகாசம் இருப்பதால் கட்சி வேட்பாளர்களும் சுயேட்சை வேட்பாளர்களும் பிரசாரத்தை  தீவிரப் படுத்தி உள்ளனர். இந்தத் தடவை நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் இதுவரை இல்லாத அளவுக்கு எட்டு முனை போட்டி நிலவுகிறது.

தி.மு.க. கூட்டணி, அ.தி.மு.க. கூட்டணி, பாரதிய ஜனதா, பா.ம.க., தே.மு.தி.க. மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் கட்சி, அ.ம.மு.க. ஆகிய எட்டு கட்சிகள் போட்டி காரணமாக ஒவ்வொரு வார்டிலும் கணிசமான அளவுக்கு வாக்கு கள் சிதறும் நிலை உள்ளது. இதற்கிடையே சில வார்டுகளில் விஜய் மக்கள் இயக்க வேட்பாளர்களும் வாக்குகளைப் பிரிக்க உள்ளனர்.

இந்த நிலையில் தமிழகம் முழுவதும் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி களில் தி.மு.க., அ.தி.மு.க. கூட்டணிகளில் வாய்ப்பு கிடைக்காதவர்கள் அதிருப்தி வேட்பாளர்களாகக் களம் இறங்கி உள்ளனர். இவர்களின் போட்டி காரணமாக கட்சி வேட்பாளர்களின் வெற்றி வாய்ப்பில் இழுபறி ஏற்பட் டுள்ளது.

மேலும் பல இடங்களில் சுயேட்சை வேட்பாளர்கள் சக்தி வாய்ந்தவர்களாக உள்ளனர். அவர்களும் கணிசமாக வாக்குகளைப் பிரிக்க வாய்ப்புள்ளது. இதனால் பல வார்டுகளில் யாருக்கு வெற்றி கிடைக்கும் என்று கணிக்க முடியாதபடி உள்ளது.

இதையடுத்து வெற்றிக்கனியைப் பறிப்பதற்காக கட்சி வேட்பாளர்களும், சில இடங்களில் சுயேட்சைகளும் வாக்காளர்களைக் கவரும் கடைசிக் கட்ட முயற்சியை கையில் எடுத்துள்ளனர். வழக்கமாகத் தேர்தலுக்குத் தேர்தல் வழங்கப்படும் பணப்பட்டுவாடா இந்தத் தடவை (14-2-2022) நேற்று முதல் விஸ்வரூபம் எடுக்கத் தொடங்கியுள்ளது. ஒவ்வொரு வீட்டிலும் எத்தனை வாக்காளர்கள் உள்ளனர் என்பதைக் கணக்கிட்டு பணம் கொடுக்கத் தொடங்கியுள்ளனர்.

சுயேட்சை வேட்பாளர்கள் தங்களால் முடிந்த அளவுக்குப் பணத்தைக் கொடுக் கிறார்கள். சில சுயேட்சைகள் ரூ.1000, ரூ.2 ஆயிரம் என வழங்கு கிறார்கள். குடிசைப் பகுதி மக்களுக்கு அதிக அளவில் பணப்பட்டுவாடா நடப்பது தெரிய வந்துள்ளது.

சுயேட்சைகளின் இந்த நடவடிக்கையை மிஞ்சுவதற்காக அரசியல் கட்சி வேட் பாளர்கள் பணத்தைத் தண்ணீராக வாரி இறைக்கத் தொடங்கிவிட்ட னர். ரூ.2 ஆயிரம் முதல் ரூ. 6 ஆயிரம் வரை கட்சி வேட்பாளர்கள் கொடுத்து வருகிறார்கள். சில இடங்களில் முதல் தவணை என்று கொஞ்சம் பணம் கொடுக்கும் வேலையும் நடக்கிறது.

டிஜிட்டல் பணப்பரிமாற்றமும் இந்தத் தேர்தலில் முக்கிய பங்கு வகிக்கிறது. வாக்காளர்களின் செல்போன் நம்பர்களைக் கேட்டுப் பெற்று அதன்மூலம் வங்கிக் கணக்குகளுக்குப் பணம் அனுப்பி வைக்கப்படுகிறது. கடந்த 10 நாட்களாக சென்னையில் பல்வேறு பகுதிகளிலும் இந்த டிஜிட்டல் பணப் பரிமாற்றம் ஓசையின்றி நடைபெற்று வருகிறது.

தேர்தலுக்குப் பிறகு பணப்பட்டுவாடா செய்யப்படும் என்று சில வார்டு களில் வேட்பாளர்கள் உறுதி கொடுத்திருக்கிறார்கள். உடனடியாகக் குறிப் பிட்ட வடிவமைப்புடன் கூடிய துண்டு டோக்கன்களைக் காண்பித்து மளிகைப் பொருட்களைப் பெற்றுக்கொள்ளலாம் என்றும் ஆசை காட்டு கிறார்கள்.

சென்னை உள்பட அனைத்து மாநகராட்சி பகுதிகளிலும் பணப்பட்டுவாடா வினியோகம் நாளையும் நாளை மறுநாளும் மேலும் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.

ஜனநாயக நாட்டில் இதெல்லாம் சகஜமப்பா?

மூலவன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...