தேவதாசி வரலாறு கூறும் உண்மை என்ன?

 தேவதாசி வரலாறு கூறும் உண்மை என்ன?

20-ம் நூற்றாண்டு தொடக்கம்வரை தேவதாசிகள் இல்லாத கோவில்களே தென்னிந்தியாவில் இல்லை. கோவிலுக்கு தேவதாசியாகப் பணி செய்யும் பெண்கள், வழிபாடு நேரங்களைத் தவிர பார்ப்பனர்களுக்கு விபச்சாரி களாகச் செயல்பட வேண்டும். 45 வயதுக்கு மேலான பெண்களை கோவில் நிர்வாகமே ஏலத்தில் விற்கும் வழக்கமும் இருந்தது.

டாக்டர் முத்துலட்சுமி அம்மையார் தேவதாசி ஒழிப்பு பற்றிய தீர்மானத்தை சட்டசபையில் கொண்டுவந்தார். அப்போது இராஜாஜி இதில் அக்கறையில்லா மல் நடந்து கொண்டார். சத்தியமூர்த்தி அய்யர், சீனிவாச அய்யங்கார், கோவிந்த ராகவய்யர், ஷேசகிரி அய்யர், மு.வ.ராமநாத அய்யர் எனும் பார்ப் பன அணி இதை எதிர்த்தனர். பெண் விடுதலைச் சட்டம் அனைத்தையும் எதிர்த்தவர்கள் இவர்களே.

இதற்குப் பார்ப்பனரகள் சொன்ன காரணம் என்னவென்றால்… “இது சாஸ்திர விரோதம், மத விரோதம், இந்தச் சட்டத்தை எதிர்த்து நான் ஜெயிலுக்குப் போனா லும் போவோமே தவிர, சாஸ்திரத்தை எதிர்த்து நாங்கள் நரகத்திற்குப் போகச் சம்மதிக்க மாட்டோம்” என்று கூறி தேவதாசி பெண்களை வைத்தே இந்தத் தீர்மானத்தை எதிர்த்துப் போராட வைத்தனர்.

இந்த இக்கட்டான சூழலில் “இந்த மாதிரி சட்டமன்றத்தில் பேசினார்கள். இதற்கு என்ன பதில் சொல்லுவது? நாளைக்கு இந்த மசோதா மீது பேசியாக வேண்டும் என்ன செய்வது?” என்று தந்தை பெரியாரிடம் முத்துலெட்சுமி ரெட்டி அம்மையார் ஆலோசனை கேட்டார்.

அதற்கு பெரியார் “நான் சொல்லுகிறபடி நீங்கள் சட்டமன்றத்தில் பேசுங்கள்” என்று சொல்லி அனுப்பினார். பெரியார் சொன்னதை உள்வாங்கிக் கொண்டு அடுத்த நாள் இந்த அம்மையார் சட்டமன்றத்தில் விளக்கம் கொடுக்கத் தயாராக இருந்தார்.

அப்போது சத்தியமூர்த்தி அய்யர் பேசினார். “தேவர்களுக்கு அடியாள் என்றால் அது கடவுள் தொண்டு என்று அர்த்தம். அவர்கள் தங்களை அர்ப்பணித்து தொண்டு செய்வதால் புண்ணியம் பல சேர்த்து புண்ணியவதியாகிறார்கள்.” என்றார்.

ராஜாஜி

அதற்கு முத்துலட்சுமி அம்மையார், எதிர்க்கட்சிப் பார்ப்பானர்களைப் பார்த்து “தேவதாசி ஒழிப்பு தீர்மானத்திற்கு எதிராகப் பேசும் உங்களிடம் ஒன்றே ஒன்று கேட்டுக் கொள்கிறேன். இதுவரையில் எங்க ஜாதியிலேயே கடவு ளுக்கு இந்தத் தொண்டை எல்லாம் செய்தார்கள். எக்கச்சக்க புண்ணியத்தை சேர்த்து வைத்துள் ளார்கள்.

இனிமேல் அந்தத் தொண்டை உங்கள் பிராமணப் பெண்களே செய்யட்டும். நீங்களும் புண்ணியம்  சேர்த்துக் கொள்ளுங்கள், அதற்கு யாரும் எதிர்ப்புக் கூற மாட்டார்கள், உங்கள் சாத்திர சம்பிரதாயங்களும் கெட்டுப்போகாது” என்றார். இவ்வளவு பிரச்சினைகளை மீறித்தான் தேவதாசி ஒழிப்பு தீர்மானம் நிறை வேற்றப்பட்டது.

தேவதாசி என்பவர்கள் பெரும் கோயில்களில் திருப்பணிக்காகவும் சேவைக் காகவும் சிறுவயதில் நேர்ந்து விடப்பட்ட பெண்கள் ஆவர். இவர்கள் இறை வனுக்கு சேவை செய்யப் பிறந்தவர்கள் என்று கடவுளுக்குத் திருமணம் செய் விக்கப்பட்டனர். இவர்கள் கடவுளைத் திருமணம் செய்தவர்களாதலால் நித்தியசுமங்கலியாகக் கருதப்பட்டனர். இவர்கள் கோயில் பணியாளர்களாக இருந்தனர். இந்தப் பெண்கள் ஆடல், பாடல் கலைகளில் நல்ல தேர்ச்சி பெற்றி ருந்தனர். இக் கலையில் தேர்ச்சி பெறாதவர்கள், ஆடல், பாடல்களில் விருப்ப மில்லாதவர்கள் கோயிலைச் சுத்தம் செய்தல், இறைவனுக்குப் பூ மாலைகள் கட்டுதல், மடப்பள்ளியில் உதவுதல், நீர் இறைத்தல் போன்ற பணிகளில் ஈடுபட்டனர்.

இராஜராஜ சோழன் காலத்தில் தளிச்சேரி பெண்டிர் என்று இவர்கள் அழைக்கப் பட்டனர். . இராசராச சோழன் காலத்தில் தஞ்சை பெரிய கோவிலில் மட்டும் 400 தேவதாசிகள் (தேவரடியார்கள்) இருந்ததாகத் தெரிய வருகின்றது.

அவர்களுக்கு குடியிருப்புகளை அமைத்தான் என்று கல்வெட்டுகள் குறிக்கின்றன. சோழர் காலத்தில் தளிச்சேரி பெண்டிர் சமூக மதிப்பு கொண்டவர்களாகவும், தான் விரும்பியவரை மணம் புரிந்துகொள்ள உரிமை கொண்டவர்களாக இருந்தனர். பல தளிச்சேரி பெண்டிர் கோயிலுக்கு தானங் களை அளித்தவர்களாக இருந் துள்ளனர்.

தேவதாசிகள் சமூகத்திலே நான்குவகைப் பிரிவுகள் இருந்தன. ஒன்று, தாங்க ளாகவே விரும்பி கோயிலுக்குத் தங்களை அர்ப்பணித்துக் கொண்ட வர்கள். இரண்டாவது பெற்றோரால் கோயிலுக்கு அர்ப்பணிக்கப்பட்டவர்கள். மூன்றாவது தீட்சைப் பெற்றவர்கள். நான்காவது கோயிலில் நடனம் ஆடும் அலங்காரதாசிகள். தமிழகத்தில் தமிழ் மன்னர்களின் ஆட்சி ஒழிந்த பிறகு தேவதாசி முறை சீரழிவுக்கு ஆளானது.

பெரியார்

ஒரு காலத்தில் மதிப்பு மிக்கவர்களாக இருந்த இவர்கள் காலமாற்றத்தால் வசதி படைத்தவர்களின் இச்சையைத் தீர்ப்பவர்களாக மாறிப்போயினர்.

தேவதாசி முறையை ஒழிக்க நீதிக்கட்சி சார்பில் பெரியார், டாக்டர் முத்து லட்சுமி ரெட்டி ஆகியோர் போராட்டங்கள் நடத்தி, இம்முறையை ஒழிக்கப் பாடுபட்டனர். அப்போது சட்டசபை முதல் பெண் உறுப்பினராயிருந்த டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி, பெரியாரின் ஆலோசனையின் பேரில், தேவதாசி முறையை எதிர்த்தார்.

 1947ஆம் ஆண்டு தேவதாசி முறை ஒழிப்புச் சட்டம் அமுலுக்கு வந்தது.

மூலவன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...