கொல்லிமலை சுற்றுலா

 கொல்லிமலை சுற்றுலா

ஆத்தூர் 

அதிகாலையில் கொல்லிமலையில் இருந்து கிளம்பி தம்மம்பட்டி வந்தடைந்தோம். தம்மம்பட்டியில் காலை உணவை முடித்துக்கொண்டு அங்கிருந்து நேராக ஆத்தூர் சென்றோம். ஆத்தூரில் நண்பர்கள் ஸ்ரீபத் மற்றும் கிரி ஆகியோரை சந்தித்து, அவர்கள் இருவரும் டூவீலரில் எங்களுடன் வந்தார்கள். நாங்கள் காரில் சென்றோம். அவர்கள் எங்க ளுக்கு  முன்பாக வழி காண்பித்துக்கொண்டே சென்றார்கள்.

நண்பர்களின் உதவியுடன் ஆத்தூரில் இருந்து பல கிராமங்களைக் கடந்து ஏழு கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஆனைவாரி முட்டல் என்கிற வனக்காடுகள் அடங்கிய பகுதிக்குச் சென்றோம். ஆனைவாரி முட்டல் என்பது மிகவும் பரந்த, அடர்ந்த வனப்பகுதி. அங்கே சுமார் 10 கிலோ மீட்டருக்கும் மேலாகப் பயணம் செய்து அருவி யில் குளித்தோம். அருவி  குளியல் என்றால் மிகவும் அருமையான தண்ணீர். நல்ல குளிர்ந்த நீர். வேகமாக வந்து விழும் நீர். ஆனால் நன்றாகப் பாதுகாப்பாக கம்பிகளை அமைத்து பெருவாரியான மக்கள் ஒரே நேரத்தில் குளிப்பதற்கான ஏற்பாடு களைச் செய்திருந்தார்கள். 

 ஆனைவாரி முட்டலில் படகு பயணம்

ஆனைவாரி முட்டல் பகுதியில் நீண்ட நேரம் அங்கே நாங்கள் குளித்து விட்டு, அங்கிருந்து மீண்டும் சென்ற வழியாகவே திரும்பி சிறுவர்கள் விளையாடுவதற்கும், நாம் அனைவரும் சாப்பிடுவதற்கும், படகுப் பயணம் செய்வதற்கும் நல்ல ஏற்பாடுகள் செய்திருந்தனர். மிகப் பெரிய ஏரியை காட்டுப்பகுதிக்குள் உருவாக்கியிருந்தார்கள். அங்கிருந்த அலுவலர்களிடம் பேசியபோது, சுமார் 25 கிலோமீட்டர் அடங்கிய இந்த வனப் பகுதியில் எந்தவிதமான மக்களும் வசிக்கவில்லை என்று தெரிவித்தார். முழுவ துமே காடுதான் என்று தெரிவித்தார். எனவே அங்கு அருவியில்  வரக் கூடிய தண்ணீர் மிக நல்ல நீர் என்றும் தெரிவித்தார்.

படகுக் குழாமும் முழுவதும் பெருவாரியான ஆட்கள் செல்வதற்கு ஏற்பாடு கள் செய்திருந்தனர். ஆனைவாரி முட்டல் வனசரகத்தில் தங்குவதற்கும் முன்பு ஏற்பாடு கள் செய்திருந்ததாகத் தெரிவித்தார்கள். ஆனால் நம் மக்கள் பலர் அங்கு சென்று தேவையில்லாத சில செயல்களைச் செய்த தால் தற்போது தங்கும் விடுதிகள் மூடப்பட்டுவிட்டதாகத் தெரிவித்தனர். தங்கும் விடுதிகள் வனத்துறையினரின் சார்பாகவே ஏற்பாடுகள் செய்யப் பட்டு இருப்பதாகவும் தெரிவித்தார்கள். சுமார் 20 நிமிடங்கள் படகுப்  பயணம் சென்றுவிட்டு நாம் மீண்டும் திரும்பி வந்தோம். 

ஒரு நாள் டூர் செல்ல ஏதுவான இடம்

ஆனைவாரி முட்டலுக்கு  நல்ல சாப்பாடு எடுத்துச் செல்லலாம். அங்கே பெருவாரி யான மரங்கள் அமைந்துள்ளன. மரங்களின் நிழல்கள் மிக அருமையாக உள்ளன. அவற்றின் அருகே நாம் அமர்ந்து சாப்பிடுவதற்கு ஏதுவாகப் பல சிமெண்ட் பலகை களையும் அமைத்துள்ளார்கள். சிறுவர் களும், பெரியவர்களும் விளையாடுவதற்கு ஏராளமான விளையாட்டுப் பகுதிகளையும் அமைத்து வைத்துள்ளார்கள். எனவே ஒருநாள் முழுவ தும் நாம் அங்கே தங்கி நம்மை உற்சாகப்படுத்திக்கொள்ள முடியும் என்பதே உண்மை. காலையில் சென்றோமானால் குளித்துவிட்டு, படகுப் பயணம் சென்றுவிட்டு, சாப்பிட்டுவிட்டு மீண்டும் நன்றாக விளையாடி விட்டு மாலை அங்கிருந்து நாம் கிளம்பலாம். ஆனால் நாங்களோ மூன்று மலைகளும் நான்கு நாட்களும் என்று சென்றதால் மதியம் அங்கிருந்து கிளம்பி நேராக வட சென்னிமலை முருகன் கோயிலை அடைந்தோம். 

ஆத்தூரிலிருந்து தலைவாசல் செல்லும் வழியில் வடசென்னிமலை கோயில் உள்ளது. வடசென்னிமலை கோயிலுக்குச் சென்று அங்கே சாமி தரிசனம் செய்யலாம் என்று எண்ணினோம். ஆனால் மதிய நேரம் சென்ற தால் சாமி தரிசனம் பிறகு செய்யலாம் என்று வாசலைப் பார்த்துவிட்டு மீண்டும் அங்கிருந்து கிளம்பி தலைவாசல் பயணமானோம். 

தலைவாசலில் டோல்கேட் அருகே ஹோட்டலில் மதியம் நல்ல உணவை முடித்துவிட்டு அங்கிருந்து நேராகச் சின்னசேலம் பைபாஸ்  சென்றோம். சின்னசேலம் பார்டரில் எங்களை அயன் சரவணன் அவர்கள் வரவேற் றார்கள். அவர்களிடம் நீண்ட நாட்களாகத் தொலைபேசியில் மட்டுமே பேசி வருகின்றேன். அன்று ஞாயிற்றுக் கிழமையாக இருந்தபோதிலும் எங்களது வருகையை அறிந்து மதிய வேளையில் சின்னசேலத்தில் இருந்து கிளம்பி சில கிலோமீட்டர்கள் கடந்து எங்களைச் சந்தித்து மகிழ்ச்சியுடன் எங்களுக்கு வாழ்த்துச் சொல்லி சென்றார்கள்.

கோமுகி அணைக்கு செல்லுதல்

சின்னசேலத்திலிருந்து  நாங்கள் கச்சராபாளையம் வழியாக கோமுகி அணையை  அடைந்தோம். கச்சராபாளையத்தில்தான் நான் ஆறாம் வகுப்பு வரை படித்தேன் என்பது குறிப்பிடத்தக்கது. வடக்கநேந்தல் வழியாக கோமுகி  அணையைச் சென் றடைந்தோம். கோமுகி அணை மிக அருமையாக கற்களால் கட்டப்பட்டு இருந்தது. கோமுகி அணையில் இருந்து தண்ணீர் அதிகமாக கிடந்தது. அந்தத் தண்ணீர் உள்ள பகுதியை நன்றாகப் பார்வையிட்டோம். சில மணி நேரங்கள் அங்கே எங்களது நேரத்தை செலவு செய்தோம். குரங்குகள்  அதிகமாகத் தொந்தரவு செய்தது. எனவே குரங்குகளிடம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். 

 வெள்ளிமலைக்குப் பயணம்

கோமுகி அணையிலிருந்து நாங்கள் மீண்டும் அடர்ந்த காட்டுப் பகுதியின் வழியாக வெள்ளி மலையை நோக்கிச் சென்றோம். வெள்ளிமலை செல்லும் வழியில் மற்றொரு அருவி  இருப்பதாகத் தெரிவித்தார்கள். பெரியாறு அருவி அதன் வழியில் இருந்தது. 

 பெரியார் நீர்வீழ்ச்சி

பெரியார் அருவியில் குளிப்பது மிகவும் சுகமானது. ரூபாய் 10 டிக்கெட் வனத்துறை யால் வசூலிக்கப்படுகிறது. மிக அருமையான ஒரு குளியல். நல்ல பாதுகாப்பான இடமும், நல்ல குளிர்ந்த நீர். கூட்டம் அதிகமில்லை. சாலையின் மையத்திலேயே அருவி அமைந்துள்ளது. எனவே பெரியார் நீர்வீழ்ச்சி மிகவும் அருமையாக இருந்தது .

வெள்ளிமலை பூங்காவை அடைதல் :

பெரியார் நீர்வீழ்ச்சியிலிருந்து நாங்கள் வெள்ளி மலை நோக்கிச் சென்றோம். அடர்த்த காடுகளின் நடுவே எங்களின் பயணம் அமைந்தது. வெள்ளி மலையில் படகு குழாம் மற்றும் சிறுவர்கள் விளையாடு வதற்கான மிக அருமையான பகுதி என்று நல்ல பகுதிகள் அங்கே அமைந்திருந்தது. அதனில் சில மணி நேரங்கள் எங்களது நேரத்தை நன்றாகச் செலவழித்து எங்களை உற்சாகப்படுத்திக்கொண்டு அங்கிருந்து நாங்கள் மீண்டும் கருமந்துறை நோக்கிப் பயணித்தோம்.

 மேகம் நீர்வீழ்ச்சி

வெள்ளிமலை நோக்கிச் செல்லும்போது மேகம் நீர்வீழ்ச்சியை பார்த் தோம். அது மிக நீண்ட தூரம் நடந்து சென்று குளிக்க வேண்டி இருக்கும் என்பதால் வெள்ளிமலை நோக்கி பயணித்தோம். முதலில் வெள்ளி மலையில் சென்று நண்பர்கள் ஸ்ரீபத் மற்றும் கிரி ஆகியோருடன் தேனீர் அருந்திவிட்டு அங்கிருந்து கிளம்பலாம் என்று எண்ணி னோம். 

மாலையில் சூடான பரோட்டா

வெள்ளிமலை மிகவும் சிறிய ஊர். அங்கே மாலையில் புரோட்டா மிகவும் சூடாக வழங்கப்படுகிறது. தேனீரும் மிக நன்றாக இருந்தது. அங்கிருந்து நண்பர்கள் வலது பக்கம் திரும்பி அவர்களது ஊரான தியாக துருவத்தை நோக்கி பயணித்தார்கள். நாங்கள் இடது பக்கம்  கருமந்துறை நோக்கிப் பயணித்தோம். கருமந்துறையில் நண்பர்கள் கண்ணன் மற்றும் கிருஷ்ண மூர்த்தி ஆகியோரின் உதவியுடன் ரூம்  முன்பே பேசி வைத்திருந்தோம். 

கருமந்துறை செல்லும் வழியில் ஓடை குளியல்

கருமந்துறை செல்லும் வழியில் சேட்டு முனியப்பன் கோயில் உள்ளது. சேட்டு  முனியப்பன் கோயிலுக்கு எதிர்திசையில் மிக அருமையான அருவி  போன்று, ஆனால் மிக அருமையான ஓடை பெரிய அளவில் ஓடுகிறது. அங்கே ஒரு குளியல் குளித்து விட்டு, சேட்டு முனியப்பன் தரிசித்துவிட்டு நாங்கள் கிளம்ப தயாரானோம்.

வியக்க வைத்த சேட்டு முனியப்பன் சாமி :

சேட்டு முனியப்பன் சாமியை  மிகப்பெரிய ஒரு உருவத்தில் வைத்து இருக்கின்றார்கள். மேலும் அங்கே ஆயிரக்கணக்கான சேர்கள் உள்ளன. பல கடவுளுக்கு பல மாதிரியான நேர்த்திக்கடன் அளிப்பார்கள். ஆனால் இங்கே உள்ள சேட்டு  முனியப்பனுக்கு ஆயிரக் கணக்கான சேர்களை  காணிக்கையாக படைத்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அங்கிருந்து இரவு நேரத்தில் நாங்கள் கருமந்துறை சென்று அடைந்தோம். 

கருமந்துறையில் தங்கல் : புதிய அனுபவம் 

கருமந்துறையில் தங்கும் அறை மிகவும் சுமார்தான் என்றாலும் எங்களுக்கான அந்தத் தேடலில் அது ஒரு பெரிய நிகழ்வாக தெரியவில்லை. கருமந்துறையில் இரவு உணவை அருந்தி விட்டு, அங்கேயே தங்கியும் மீண்டும் நாங்கள் அடுத்த நாள் எந்த மலையை நோக்கிச் சென்றோம் என்பதை மிக விரைவில் காணலாம். 

 நாள் முழுவதும் டூ வீலர் பயணம் :

வெள்ளிமலை பயணத்தில் எங்களுடன் தொடர்ந்து நண்பர் ஸ்ரீபத் மற்றும் கிரி ஆகியோர்  டூவீலரில் எங்களுடன்  நாள் முழுவதும் பயணம் செய்தார்கள். எங்களுக்கு அனைத்து வழிகளையும் காண்பித்து, அனைத்து இடங்களையும் எங்களுக்கு தெளிவாக விளக்கினார்கள். அவர்களது உதவி எங்களால் மறக்க முடியாதது. 

  • லெ .சொக்கலிங்கம், காரைக்குடி.

மூலவன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...