எம்.ஜி.ஆர். புகழ் இன்றும் நிலைத்திருக்க காரணம் என்ன?

 எம்.ஜி.ஆர். புகழ் இன்றும் நிலைத்திருக்க காரணம் என்ன?

காரணம் 1

1971ல் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் கக்கன் போட்டி யிட்டுத் தோற்றார். அதற்குப் பிறகு மெல்ல மெல்ல பொது வாழ்க்கையிலிருந்து விலகி னார். இறுதிக் காலத்தில் கக்கனுக்கு பார்க்கின்சன் நோய் பாதிப்பு இருந்தது. அவ்வப்போது மதுரை பொது மருத்துவமனைக்கு நகரப் பேருந்தில் சென்று வருவார்.

அவர் சுதந்திரப் போராட்ட வீரர் என்பதால், அரசு மருத்துவமனையில் சி வார்டில் இடம் கிடைக்கும். எட்டு கட்டில்கள் கொண்ட பொது அறைதான் சி வார்டு.

முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர். அ.தி.மு.க. பிரமுகர் மதுரை முத்துவை சந்திப்பதற்காக ஒருமுறை அந்த மருத்துவமனை வந்தார். கக்கனும் அதே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதை அறிந்து கக்கனையும் சந்திக்கச் சென்றபோது அவர் சி வார்டில் ஒரு கட்டிலில் இருந்ததைப் பார்த்து அதிர்ந்துபோனார்.

உடனடியாக டீனை அழைத்த முதல்வர், “இவர் இந்திய அரசியல் சாஸன அவையில் இடம்பெற்றிருந்தவர்; பல துறைகளுக்கு அமைச்சராக இருந்தவர்; இப்படி செய்து விட்டீர் களே” என்று கோபித்து உடனடியாக ஏ வார்டுக்கு மாற்ற உத்தரவிட்டார்.

காரணம் 2

எம்.ஜி.ஆர். முதல்வராகப் பதவி ஏற்ற பின்னர் ஒருநாள் கோட்டைக்கு புறப்படும் முன் மலை எனக் குவிந்திருந்த அவருக்கு வந்த கடிதங்களில் கிளி ஜோசியர் எடுப்பதை போல ஒரு கடிதத்தை எடுக்கிறார்.

காரில் கோட்டைக்குப் போய்க்கொண்டே படிக்கிறார். அது ஒரு திருமண அழைப்பிதழ். அந்தத் திருமண அழைப்பிதழில் எந்த ஒரு இடத்திலும் புரட்சித் தலைவர் பேரோ அல்லது கட்சிக்காரர் பேரோ அல்லது தான் யார், என்ன விவரம் என்கிற இணைப்புக்கடிதம்கூட இல்லாமல் இருந்தது. உதவி கேட்க வில்லை; கலந்துகொள்ள கோரிக்கை இல்லை.

மனதில் ஏதோ தோன்றிய எம்.ஜி.ஆர். பிறகு தன் ரகசியக் காவல் நண்பர் மற்றும் ஒரு கட்சிக்காரரை வரச் சொல்லி இந்தப் பத்திரிகை அனுப்பியது யார், அவர் எங்கு இருக்கிறார் என்ற விவரத்தைச் சேகரிக்கச் சொல்கிறார். பத்திரிகையில் இருந்த முகவரியைக் கொண்டு பார்த்ததில் அது சென்னை வடபழனி ராம் திரையரங்கம் அருகில் சென்று பார்க்கும்போது அந்த அரங்கத்தின் முன்னால் இருந்த பிளாட்பாரத்தில் ஒரு செருப்புத் தைக்கும் தொழிலாளி உள்ள இடம் என்று தெரிகிறது.

அவர் செருப்புத் தைக்கும் உபகரணங்களுடன் சாமி படங்கள் கூட இல்லாமல் அந்தப் பெட்டியின் மேல் நம் எம்.ஜி.ஆர். படம் மட்டும் ஒட்டப்பட்டிருந்தது. விவரங்களைக் கேட்ட எம்.ஜி.ஆர். தன் மகள் திருமணம் நடக்கும் விஷயம் தனக்குத் தெரிய வேண்டும் உத்தரவு பிறப்பித்துவிட்டு எந்த உதவியும் கேட்காத அந்த உண்மைத் தொண்டனை நினைத்து உருகுகிறார்.

திருமண நாளும் வந்துவிட்டது. காலை 9.00 மணிக்கு முகூர்த்தம். 8.45 மணி அளவில் காவல் துறை அணிவகுப்பு அந்த ஏழை தொழிலாளி வீட்டு முன்னால். காரணம் தெரியாமல் விழிக்கும் திருமண வீட்டார். மணமகன் தாலி கையில் எடுக்கும் நேரத்துக்குச் சில நிமிடங்கள் முன்னால் வந்து இறங்குகிறார் எம்.ஜி.ஆர். 4777 வாகனம் அந்த எளியவன் வீட்டு முன்னால் வந்து நிற்பதை அந்தப் பகுதி மக்கள் மற்றும் பத்திரிகை அனுப்பிய அந்தத் தொண்டன் எதிர்பார்க்கவில்லை. கண்கள் கலங்கி, இதயம் நொறுங்கி நின்ற தொண்டனுக்கு அள்ளிக் கொடுத்துவிட்டு “நீ மட்டும்தான் சொல்லாமல் கொள்ளாமல் செய்வாயா? நானும் கூடதான் என்று காலை உணவை அங்கே முடித்துக்கொண்டு புறப்படுகிறார்” எம்.ஜி.ஆர்.

செருப்புத் தைக்கும் தொழிலாளி குடும்பத்தில் பிறந்தது போல மதுரை வீரனில் நடித்து மட்டும் வாழவில்லை நடப்பிலும் வாழ்ந்தார் எம்.ஜி.ஆர்.

காரணம் 3

‘உலகம் சுற்றும் வாலிபன்’ படத்தின் படப்பிடிப்பிற்காக விழுப்புரம் அருகே ஒரு பிரமாண்ட செட் போடப்பட்டு இருந்தது. இதை பார்வையிட நடிகரும் அந்தப் படத்தின் இயக்குநருமான எம்.ஜி.ஆர். தனது நீலநிற அம்பாசிடர் காரில் சென்றுகொண்டு இருந்தார்.போகும் வழியில் காரிலேயே நன்றாகத் தூங்கிவிட விழுப்புரத்திற்கு 25 கிலோ மீட்டர் முன்பு கார் டயர் பஞ்சராகி விடுகிறது. அப்போது கண் விழித்த எம்.ஜி.ஆர் தனது உதவியாளரிடம் தனக்கு மிகவும் பசிப்பதாகவும் அருகில் உணவகம் இருந்தால் ஏதாவது சாப்பிட வாங்கி வரும்படி கூறுகிறார். உதவியாளர் சிறிது தூரம் நடந்து சென்று பார்க்கையில் அங்கு ஒரு கடை இருந்தது.

அங்கிருந்த பாட்டி பனங்கிழங்கு, வேர்க்கடலை, சீனிமுட்டாய் ஆகியவற்றை விற்று கொண்டிருந்தார். அங்கு சென்ற உதவியாளர் எல்லா பண்டங்களிலும் ஒரு படி வாங்கிக் கொண்டு கடைசியாக 50 பைசா மதிப்புள்ள பொருட்களுக்கு 10 ரூபாய் கொடுத்தார். பாட்டி மீதி சிலரை கொடுக்க முட்பட “பரவாயில்ல பாட்டி நீங்களே வைச்சுக்குங்க” என்று கூறி விட்டு உதவியாளர் வந்து விடுகிறார். அந்த பண்டங்களின் சுவை எம்.ஜி.ஆருக்கு மிகவும் பிடித்து விட்டது. அதன் பிறகு அவர் படப்பிடிப்பிற்குத் தளத்திற்குப் போய் அன்றைய வேலையைக் கவனித்தார்.

மறுநாள் எம்.ஜி.ஆர். வெகு சீக்கிரமாகவே படப்பிடிப்பிற்குக் கிளம்பி அதே பழைய இடத்தில் வண்டியை நிறுத்தி உதவியாளரிடம் “போய் பனங்கிழங்கும் வேர்க்கடலையும் வாங்கிட்டு வாங்க” என்று கூறுகிறார். இது பல நாட்களாக தொடர்கிறது.

உதவியாளரும் வாங்கி வரும்போதெல்லாம் பாட்டிக்கு 10 அல்லது 20 அல்லது 50 ரூபா யைக் கொடுக்கிறார். ஆனால் அந்தப் பண்டங்களின் மதிப்பு 50 பைசா மட்டுமே. ஒருநாள் இதே போல் உதவியாளர் அங்கு போகும்போது கடையில் பாட்டி இல்லை. உடல்நிலை சரி இல்லாமல் வீட்டுக்குள் படுத் திருக்கிறார்.

இந்தச் செய்தியை எம்.ஜி.ஆரிடம் உதவியாளர் கூற “உடனே போய் அந்தப் பாட்டிக்கு என்ன ஆச்சுன்னு பார்த்துட்டு வாங்க” என்று சொல்லி அனுப்பு கிறார். பாட்டியின் வீட்டுக்குச் சென்ற உதவியாளர் பாட்டியைப் பார்த்து நலம் விசாரித்து “உணவு செய்ய முடியுமா?” என்று கேட்க பாட்டி நெற்றியில் தைலத்தைத் தடவி விட்டு அவர்களுக்காக உணவை செய்து கொடுக்கிறார்.

பாட்டி: யாருக்கு தம்பி வாங்கிட்டு போறீங்க?

உதவியாளர்: அது வேற யாரும் இல்ல பாட்டி நம்ம எம்.ஜி.ஆர். தான்.

பாட்டி: ஐயோ அந்த தங்கமா அந்த மகராசன நான் பார்க்கணும் என்று கூறி கார் இருக்கும் இடத்திற்கு வருகிறார். அப்போது எம்.ஜி.ஆர். அவருக்கு 500 ரூபாய் தாளைத் கொடுக்க, பாட்டி, “அய்யா உன் முகத்தை பார்த்ததே போதும் .உன்ன கட்டிபுடுச்சு ஒரு முத்தம் தரட்டுமா?” என்று கேட்க எம்.ஜி.ஆர். உடனே காரில் இருந்து இறங்கி பாட்டியை அணைத்து ஆரத் தழுவி பாசத்தோடு முத்தமிட பாட்டி உருகிப் போய் கண்கலங்கி விடுகிறார்.

இந்த நிகழ்வுக்குப் பின் படிப்பிடிப்பு முடிகிறது. படம் வெளியீட்டிற்குத் தயார் ஆனாலும் திரை அரங்கு கிடைக்காத காரணத்தால் பட வெளியீடு தாமத மாகிறது. எனவே வேறு படங்களில் எம்.ஜி.ஆர். நடிக்கத் தொடங்குகிறார்.

சில மாதங்கள் கழித்து ஒரு தேநீர் கடையில் பாட்டி, ஒருவருடன் இதை பற்றிக் கேட்கிறார். “எம்.ஜி.ஆர் நடித்த அந்தப் படம் ஏன் இன்னும் வரல” என்று பாட்டி அங்கிருந்தவரை கேட்க, “பணத் தட்டுப்பட்டால் எம்.ஜி.ஆரால் அந்தப் படத்தை வெளியிட முடியவில்லை” என்று அங்கிருந்தவர் கூறுகிறார்.

இதனைக் கேட்ட பாட்டி சில நாட்களில் எம்.ஜி.ஆரின் ராமாபுரம் வீட்டுக்கு சந்திக்கப் போகிறார். அந்த நேரத்தில் எம்.ஜி.ஆர். உணவருந்திக் கொண்டிருக்க உதவியாளர் விழுப் புரம் கடை பாட்டி வந்திருப்பதைப் பற்றிக் கூறியவுடன் கையைக்கூட கழுவாமல் துண்டை எடுத்து உடம்பைப் போர்த்திக்கொண்டு உடனே வெளியே வந்து பாட்டியைப் பார்த்து அணைத்துக்கொண்டு கேட் கிறார்.

எம்.ஜி.ஆர்: என்னமா, என்ன விஷயம்? சொல்லுங்க உங்களுக்கு நான் என்ன செய்யணும்” என்று கேட்க,

பாட்டி:எனக்கு ஒன்னும் வேணாம்பா. உன்கிட்ட கொஞ்சம் பேசணும்

எம்.ஜி.ஆர்: சொல்லுங்கம்மா. நான் என்ன செய்யணும்?

தனது சுருக்கு பையில் இருந்து 1800 ரூபாயை எடுத்து பாட்டி எம்.ஜி.ஆரிடம் கொடுத்து “படம் நின்னு போச்சாம். பணகஷ்டத்துல இருக்கியாம். அந்தப் படம் தியேட்டர்ல வரணும் கண்ணு. செய்யி தங்கம்” என்று கூற கண்கலங்கி விட்டாராம் எம்.ஜி.ஆர்.

“அதெல்லாம் பட விநியோகஸ்தர்களிடம் பேசி சரி பண்ணிட்டேன்மா அடுத்த வாரம் படம் வந்துடும்” என்று கூறி பாட்டியை அனுப்பி வைத்தார்.

பின்பு ஒரு வாரம் கழித்து அதே பாட்டியின் ஊருக்குச் சென்று மணலில் உட்கார்ந்து அந்தப் பாட்டியுடன் சேர்ந்து திரை அரங்கத்தில் படத்தைக் கண்டு களித்தாராம் எம்.ஜி.ஆர்.

காரணம் 4

ஒருமுறை எம்.ஜி.ஆர். சென்னையிலிருந்து மதுரைக்குத் தன்னுடைய காரில் பயணித்துக் கொண்டிருக்கையில், வழியில், நெடுஞ்சாலை ஓரத்தில் இருந்த ஒரு கிராமத்தின் மக்கள், எம்.ஜி.ஆர். அவ்வழியே வருவதை அறிந்து அவர் காரை நிறுத்துமாறு சைகை செய்து காரை நிறுத்திவிட்டனராம்.

காரில் இருந்து கீழே இறங்கிய எம்.ஜி.ஆர்., அவர்களைப் புன்னகையுடன் நோக்கி, “என்ன வேண்டும் உங்களுக்கு? எதற்காக என் காரை நிறுத்தச் சொன் னீர்கள்? உங்களுக்கு நான் ஏதாவது செய்ய வேண்டுமா?” என்று கேட்டாராம்.

அந்தக் கிராமத்து மக்கள், அருகில் உள்ள தங்கள் வயலில் எம்.ஜி.ஆர். அவர்கள் வந்து ஒருமுறை நடந்துவிட்டுச் செல்லவேண்டும் என்று வேண்டி கொண்டார்களாம்.

“எதற்கு அவ்வாறு செய்ய வேண்டும்?” என்று எம்.ஜி.ஆர். கேட்டதற்கு “கடந்த பல வருடங் களாக மழை பொய்த்து போனதால் தங்கள் நிலம் தரிசாக மாறிவிட்டது நீங்கள் ஒரு முறை அந்த வயலில் நடந்து சென்றால் வயலில் விவசாயம் மீண்டும் துளிர்விடும் என்று நம்புகிறோம்” என்று சொன்னார் களாம்.

இதைக் கேட்டு வியப்படைந்த எம்.ஜி.ஆர்., அந்த மக்களை ஏமாற்ற விரும்பா மல் அவர்கள் கேட்டுக் கொண்டதற்கிணங்க, தன் செருப்பை காரிலேயே விட்டுவிட்டு அவர்களின் வயலில் தன் வெறுங்காலுடன் ஒரு சுற்று நடந்து வந்து, பின் தன் காரில் ஏறிப் பயணத்தைத் தொடர்ந்தாராம்.

சில மாதங்களுக்குப் பிறகு மீண்டும் அதே வழியில் எம்.ஜி.ஆர். பயணம் செய்கையில் அந்தப் பழைய சம்பவம் நினைவில் வர, அதே இடத்தில் காரை நிறுத்தி தன்னை நடக்கச் செய்த அந்த வயல்வெளிகளை பார்வையிட்ட பொழுது அவரே வியப்படைந்து போகும் வண்ணம் அந்த வயல்வெளிகள் எல்லாம் பச்சை பசேலென காணப்பட்டதாம். எம்.ஜி.ஆர். வந்த செய்தி அறிந்து மக்கள் எல்லாம் ஓடிவந்து எம்.ஜி.ஆரை மனதார வாழித்தினராம்.

காரணம் 5

எம்.ஜி.ஆர். முதல் அமைச்சராக இருந்துபோது வழக்கம் போல் கர்நாடகா தண்ணீர் தர மறுக்க, எம்.ஜி.ஆர். எந்த ஒரு முன் அறிவிப்பும் இல்லாமல் அப்போதைய கர்நாடக முதல் அமைச்சர் ராமகிருஷ்ணா ஹெக்டே வீட்டிற்கே சென்றுவிட்டார். எம்.ஜி.ஆரைப் பார்த்த வுடன் அவருக்கு கையும் ஓட வில்லை, காலும் ஓடவில்லை.

“அண்ணா வாங்கோ வாங்கோ” என்று வணங்கி வரவேற்றார். அவர் மனைவியும் ஓடிவந்து “அண்ணா வாங்கோ” என்று வரவேற்று “என்ன சாப்பிடுறிங்க அண்ணா” என்று கேட்க, எம்.ஜி.ஆரும் “இடியாப்பம்” என்றார்.

உடனே இடியப்பம் அவித்து சூடாக அவருக்குப் பரிமாற பட்டது. சாப்பிடும் போது தலைவருக்கு விக்கல் வர உடனே ஹெக்டே ஒரு கிளாசில் தண்ணீர் ஊற்றி அதைக் குடிக்கும்படி சொல்ல, எம்.ஜி.ஆர். அதைக் குடிக்க மறுத்து விட்டார். “அண்ணா, தண்ணீர் குடிங்கோ. விக்கல் அதிகமாக இருக்கிறது” என்று வற்புறுத்த அதற்கு எம்.ஜி.ஆர். “இந்தத் தண்ணீருக்காகத்தான் எங்கள் ஊர் மக்களும் தவிக்கிறார்கள். அவர்களுக்குத் தண்ணீர் இல்லாதபோது நான் மட்டும் இந்தத் தண்ணியைக் குடிக்கலாமா?” என்றாராம். உடனே ஹெக்டே தமிழ்நாட்டிற்குத் தண்ணீர் திறந்துவிடும்படி தன் அதிகாரிகளுக்கு உத்தரவு விட்டாராம். எந்த ஒரு சண்டையும் கலவரமும் இல்லாமல் தன் ராஜதந்திரத் தின் மூலம் தண்ணீர் கொண்டுவந்தார் தலைவர்.

காரணம் 6

அரசியலில் வருவதற்குமுன் நடிகராக இருந்தபோது படத்தில் மட்டும் இல்லாமல் நாடகத்திலும் நடித்து வந்தார். அப்படி ஒரு நாடகம்தான் இன்பக்கன்னி என்ற நாடகம். அதைச் சீர்காழியில் அரங்கேற்ற சென்றிருந்தபோது நாடகத் தின் ஒரு காட்சியில் வரும் இரும்புப் பந்தை தூக்கிப்போடும் காட்சிக்கு ஒத்திகை பார்க்கும்போது அது தவறி அவர் காலில் விழுந்து கால் நொறுங்கி விட்டது.

அந்தச் சமயம் பார்த்து மேடை திரையைத் தூக்க அவர் காலை ஊன்றிக்கொண்டு மேடைக்கு வந்து, “நண்பர்களே, தாய்மார்களே எதிர்பாராத விதமா ஒரு விபத்து நடந்து என் காலில் முறிவு ஏற்பட்டு விட்டது. (மக்கள் அலறும் சத்தம்) கவலை வேண்டாம். பெருசா ஒன்றும் இல்லை. என்னால் இப்போது நடிக்க முடியாது. ஆனால் கண்டிப்பாக, குணம் பெற்று வந்து நான் மீண்டும் நடித்து தருகிறேன். நீங்கள் வாங்கிய டிக்கெட்டை பத்திரமாக வைத்துக் கொள்ளுங்கள். மறுமுறையும் டிக்கெட் வாங்கத் தேவை இல்லை” என்று சொல்லி சென்னை திரும்பி விட்டார்.

இரண்டு மாதத்திற்குப் பிறகு மறுபடியும் சென்று அந்த நாடகத்தை நடத்தித் தந்தார். நாடக சபாவிற்கான வாடகை தன் சொந்த காசை கொடுத்தார். மறுமுறை வந்தர்வர்களிடம் டிக்கெட்டிற்குக் காசு பெறவில்லை.

1972ஆம் ஆண்டு, பாதுகாப்புப் பணியிலிருந்த போலீஸ் கான்ஸ்டபிள்ஸ் ஜேசுதாஸ் மற்றும் ஜேக்கப்புடன் எம்.ஜி.ஆர். தனது நீச்சல் குளத்தில் நீச்சல் பயிற்சியை முடித்து கொண்டு எடுத்துக்கொண்ட புகைப்படம்.

மூலவன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...