புதிய இஸ்ரோ தலைவராகிறார் சோம்நாத்

 புதிய இஸ்ரோ தலைவராகிறார் சோம்நாத்

இஸ்ரோ தலைவராகப் பொறுப்பேற்ற திரு.சோம்நாத் அவர்களை வாழ்த்தி வரவேற்போம்!

இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோவின் புதிய தலைவராக விஞ்ஞானி சோம்நாத் நியமிக்கப்பட்டுள்ளார்.

இஸ்ரோவின் தற்போதைய தலைவராக இருக்கும் சிவனின் பதவிக்காலம் வரும் 14ம் தேதியுடன் முடிவடைவதைத் தொடர்ந்து, புதிய தலைவருக்கான ஆலோ சனை நடைபெற்று வந்தது. இந்நிலையில் விஞ்ஞானி சோம்நாத் புதிய தலை வராகத் தேர்ந்தெடுக்கப்படுவதாகவும், அடுத்த 3 ஆண்டுகள் இப்பதவியில் நீடிப்பார் என்றும் மத்திய அரசு அறிவித்துள்ளது.

சோம்நாத் தற்போது கேரளாவின் திருவனந்தபுரத்தில் உள்ள விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தின் (VSSC) இயக்குநராக உள்ளார். அவர் தனது தொழில் வாழ்க்கையின் ஆரம்ப கட்டங்களில் போலார் சாட்டிலைட் லாஞ்ச் வாகன (பி.எஸ். எல்.வி.) ஒருங்கிணைப்புக்கான குழு தலைவராக இருந்தார்.

பி.எஸ்.எல்.வி. ஒருங்கிணைப்புக்கான குழுத் தலைவராக இருந்தவர், பின்னாளில் பி.எஸ்.எல்.வி. திட்ட மேலாளராக உயர்ந்து, பி.எஸ்.எல்.வி. திட்டத்தின் வழிமுறை கள், பைரோ அமைப்புகள், ஒருங்கிணைப்பு ஆகியவற்றைக் கண்காணித்து வந்த துடன் செயற்கைக்கோள் ஏவுதலில் முக்கியப் பங்கு வகித்துள்ளார். அதேபோல் GSLV Mk-III ஏவுகணை திட்டத்தின் வளர்ச்சியிலும் சோம்நாத் முக்கியப் பங்கு வகித்துள்ளார்.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத் தலைவர் (Chairman of the Indian Space Research Organisation) என்பவர் இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பின் (ISRO) சட்டப்பூர்வத் தலைவர். இவர் இந்திய அரசின் செயலாளராகவும், இந்தியப் பிரதமருக்கு நேரடியாகக் கருத்துத் தெரிவிக்கும் விண்வெளித் துறை (DoS) நிர்வாகி யாகவும் ஆவார்.

விண்வெளி ஆராய்ச்சிக்கான இந்தியத் தேசியக் குழு (INCOSPAR) 1962-ல் அணு சக்தித் துறையின் (DAE)கீழ் நிறுவப்பட்டது. இந்திய விண்வெளித் திட்டத்தின் தந்தை விக்ரம் சாராபாய் இதன் முதல் தலைவர். 1969இல் இது இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் என மாற்றப்பட்டது.

1972 இல் இந்திய அரசாங்கம் விண்வெளி ஆணையம் மற்றும் விண்வெளித் துறை யினை அமைத்து, விண்வெளித் துறையின் கீழ் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தினைக் கொண்டு வந்தது.

டாக்டர் சாராபாயைத் தொடர்ந்து, தலைமை வகித்த/வகிக்கும் பின்வரும் இஸ்ரோ வின் பத்து விஞ்ஞானிகள்:

1. டாக்டர் விக்ரம் சாராபாய் (1963 – 1971)

: 8 ஆண்டுகள்;

2. டாக்டர் எம்.ஜி.கே. மேனன் (1972 ஜனவரி – 1972 செப்டம்பர்)

: 9 மாதங்கள்;

3. டாக்டர் சதீஷ் தவான் (1972 – 1982)

: 12 ஆண்டுகள்;

4. டாக்டர் உடுப்பி ராமச்சந்திர ராவ் (1984 – 1994)

: 10 ஆண்டுகள்;

5. டாக்டர் கி.கஸ்தூரிரங்கன் (1994 – 2003 ஆகஸ்ட் 27)

: 9 ஆண்டுகள்;

6. ஜி.மாதவன் நாயர் (2003 செப்டம்பர் – 2009 அக்டோபர் 29)

: 6 ஆண்டுகள்;

7. கே.இராதா கிருஷ்ணன் (2009 அக்டோபர் 30 – 2014 டிசம்பர் 31) : 5 ஆண்டுகள், 62 நாட்கள்;

8. சைலேஷ் நாயக் (2015 ஜனவரி 1 – 2015 ஜனவரி 12)

: 11 நாட்கள்;

9. ஏ.எஸ்.கிரண் குமார் (2015 ஜனவரி 14 – 2018 ஜனவரி 14)

: 4 ஆண்டுகள்;

10. கே. சிவன் (2018 ஜனவரி 15 – 2022 ஜனவரி 14)

: 3 ஆண்டுகள்;

11. எஸ். சோமநாத் (2022 ஜனவரி 15 – )

15 ஜனவரி 2022 அன்று இஸ்ரோ தலைவராகப் பொறுப்பேற்கும் திரு.சோம்நாத் அவர்களை வாழ்த்தி வரவேற்போம். இன்று வரை வையத்தலைமை நோக்கி இந்திய விண்வெளித் துறையினை வளர்த்துள்ள விஞ்ஞானிகளைப் பாராட்டு வோம்.

  • நெல்லை சு.முத்து

மூலவன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...