மாட்டுப் பொங்கல் ஸ்பெஷல் நாட்டு மாட்டின் நன்மைகள்

 மாட்டுப் பொங்கல் ஸ்பெஷல் நாட்டு மாட்டின் நன்மைகள்

மக்களின் வாழ்வாதாரமான உழவையும், உழவுக்கு உதவி செய்பவற்றையும் போற்றி வழிபட ஆண்டுதோறும் தை மாதம் கொண்டாடப்பட்டு வருகிறது பொங்கல் பண்டிகை. இதில் சூரியனை வழிபடுவது தை பொங்கலின் முக்கியமான நோக்கமாக இருக்கிறது. புது பானையில் பொங்கல் பொங்குவது போல அனைவரது வாழ்விலும் வசந்தம் பொங்கி வழிய வேண்டும் என்ற பிரார்த்தனையுடன் இந்தப் பெரும் பண்டிகையை அனைவரும் கொண்டாடு கின்றனர். தைப் பொங்கல் அல்லது சூரிய பொங்கலுக்கு அடுத்த நாள் வழக்க மாகக் கொண்டாடப்பட்டுவரும் மாட்டுப் பொங்கலைப் பற்றித் தெரிந்து கொள்ளலாம். மாட்டுப் பொங்கல் எதற்காகக் கொண் டாடப்படுகிறது, அன்றைய நாள் எப்படிக் கொண்டாடப்படும் என்பதை இங்கே பார்க் கலாம்.

மாட்டு பொங்கல்

விவசாயத்தில் உழவர்களுடன் சேர்ந்து மாடுகளுக்கும் முக்கிய பங்கு இருக்கிறது. எனவே மாடுகளின் உழைப்பை காலப்போக்கில் மனிதம் மறந்துவிடக் கூடாது, மாடுகளின் மிகக் கடுமையான உழைப்பை அங்கீகரித்து அவற்றை கௌரவிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் சூரியனை வழிபட்ட பிறகு அடுத்த நாள் மாடுகளு மென்றே பிரத்யேகமாகக் கொண்டாடப்படுவதுதான் மாட்டுப் பொங்கல். மனிதனுக்கு உணவு வருவதற்கு முன், மனிதனுடன் சேர்ந்து மற்றொரு ஜீவனும் தன் உயிரைக் கொடுத்து உழைத்தால்தான் எல்லோருக் கும் சாப்பாடு கிடைக்கும்.

மாடுகளின்றி பல்லயிரக்கணக்கான ஆண்டுகள் விவசாயம் செழித்திருக்க முடியாது. எனவே மாடுகள் மீது மக்களுக்கு நன்றியுணர்வு இருக்க வேண்டும் என்பதற்காகவும் நம் கலாசாரத்தில் மாடுகளைக் கொண்டாடும் மாட்டுப் பொங்கல் விழாவை உருவாக்கி இருக்கிறார்கள். இது பட்டிப் பொங்கல் அல்லது கன்று பொங்கல் என்றும் குறிப்பிடப்படுகிறது. இந்நாளில் மாடுகள் மற்றும் கன்றுகள் வசிக்கும் தொழுவம் நன்கு சுத்தம் செய்யப்படுகிறது.

பின் மாடுகளைக் குளிப்பாட்டி சுத்தம் செய்து அவற்றின் கொம்புகளில் வண்ணம் பூசி அவற்றை மேலும் பலவிதமாக அலங்கரித்து, சலங்கைகளையும் கட்டி விடுவார்கள். மேலும் மாடுகளுக்குப் புதிய மூக்கணாங்கயிறு, தாம்பு கயிறு உள்ளிட்டவற்றையும் அணிவித்து அலங்கரித்து வழிபடுவார்கள். மாடுகளை மட்டுமின்றி உழவுக்கு உதவும் கருவிகளையும் சுத்தம் செய்து சந்தனம், குங்குமம் வைத்து மாடுகளோடு சேர்த்து அவற்றையும் வழிபடு வார்கள். பல ஊர்களில் மஞ்சுவிரட்டு மற்றும் ஜல்லிக்கட்டு உள்ளிட்ட மாடுகள் சார்ந்த வீர விளையாட்டு நிகழ்ச்சிகளும் நடைபெறும்.

மாட்டின் பயன்கள்

“சம்சாரி வாழ்வுக்கு ஒரு பசுமாடு; பொன்னையே தந்தாலும் உனக்கேது ஈடு?!” இந்தப் பாடல் வரிகள் வெறும் கவிநயத்தின் பொருட்டு எழுதப்பட்ட வரிகளல்ல. உண்மை யில் மாடுகள் மனிதனுக்கு வழங்கும் நன்மைக்குப் பொன் கொடுத்தாலும் ஈடாகாது தான்! அதை உணர்ந்த நம் முன்னோர்கள், மாடுகளுக்கென தை மாதம் இரண்டாம் நாளில் மாட்டுப் பொங்கலிட்டு கொண்டாடி வந்துள்ளனர்.

நாட்டுப் பசுவின் சாணத்தில் மட்டும்தான் கோடிக்கணக்கான நுண்ணுயிர்கள் நிறைந்து காணப்படுவதால், அதன் எரு, மண்வளத்தைப் பெருக்கி உயிர்ச் சூழலை காக்கும் என இயற்கை வேளாண் வல்லுநர்கள் கூறுகின்றனர்.

ஆனால், ‘மாடு’ என்ற வார்த்தை அனைத்து ரக மாடுகளையும் ஒரே தரத்திற் குள் அடக்கிவிடுவதாகிறது. உண்மையில், நீங்கள் பார்க்கும் பெரும்பாலான மாடுகள் நம் நாட்டைச் சேர்ந்தவையே அல்ல. தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் பல்வேறு விதமான நாட்டு மாடுகள் உள்ளன. காங்கேயம் மாடு, பர்கூர் செம்மரை மாடு, பாலமலை மாடு, ஆலம்பாடி மாடு, பெரம்பலூர் மொட்டை மாடு, மணப்பாரை மாடு, தொண்டைப் பசு, புங்கனூர் குட்டை என பல்வேறு இனங்கள் உண்டு. மயிலை (சாம்பல் நிறம்) காரி (கருப்பு நிறம்) வெள்ளை, செவலை (மர நிறம்) எனப் பல நிறங்கள் மாடுகளுக்கு உண்டு.

இதுபோன்ற நம் நாட்டு மாடுகள் அரிதாகிவிடும் அளவிற்கு ஜெர்ஸி, ஹோல் ஸ்டைன், ப்ரீசியன், ரெட்டேன் போன்ற கலப்பின ரகங்கள் தற்போது அதிகரித்து விட்டன. நாட்டு மாடுகள் இனம் கிட்டத்தட்ட அழியும் தருவாயில் இருப்பதை நம் மால் உணர முடிகிறது! இது நம் நாட்டு மாடுகளைக் காக்க வேண்டிய தருணமாகும்.

நாட்டு மாடுகளை ஏன் காக்க வேண்டும்?

எப்படி மக்கள் தொகைப் பெருக்கம் ரசாயன விவசாயத்திற்கு காரணமாகச் சொல்லப்பட்டதோ அதே காரணம்தான் இந்தக் கலப்பின மாடுகளின் வரவிற்கும் சொல்லப்பட்டது. ‘இத்தனை கோடி பேருக்கு பால் உற்பத்தி செய்ய வேண்டுமென் றால் நாட்டு மாடுகளால் தரமுடியாது, கலப்பின மாடுகள்தான் தரமுடியும்’ என்று கூறி கலப்பினங்களை இங்குக் கொண்டு வந்தார்கள். அதனால் பால் உற்பத்தி என்னவோ அதிகரிக்கத்தான் செய்தது; அதை உட்கொள்ளும் மனிதர்கள்தான் அதனால் பலவித நோய்களுக்கும் குறைபாடு களுக்கும் ஆளாகி வருகின்றனர்.

நம் நாட்டுப் பசுக்கள் கொடுக்கும் பால் A2 பால் என அழைக்கப்படுகின்றது. கலப்பின பசுக்கள் கொடுக்கும் பால் A1 வகை என்கிறார்கள். நாட்டு மாடுகள் மிகவும் சத்துடைய A2 புரதம் உடையவை. கலப்பின மாட்டுப் பாலான A1 வகையில் சர்க்கரை நோய், ஹார்மோன்-மரபின கோளாறு உட்பட பல்வேறு பிரச்சனைகள் விளைவிக்கக் கூடிய தன்மைகள் உள்ளன.

இவற்றை உணர்ந்த பல வெளிநாடுகள் A1 பால் மற்றும் A2 பால் எனப் பிரித்து விற்கத் தொடங்கியுள்ளன. நாம் அதனை அறியாமல் இன்னும் பாக்கெட் பால்களை வாங்கி உட்கொண்டு வருகிறோம். இதனால் பெண்களுக்கு சீரற்ற மாதவிடாய், விரைவில் பூப்பெய்துதல் போன்ற பிரச்சினைகள் விளைவதோடு, ஆண்களுக்கும் ஹார்மோன் கள் சார்ந்த பல பிரச்சனைகள் உண்டாவதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

நாட்டு மாடுகள் நல்கும் நன்மைகள்!

நாட்டுப் பசுவின் சாணத்தில் மட்டும்தான் கோடிக்கணக்கான நுண்ணுயிர்கள் நிறைந்து காணப்படுவதால், அதன் எரு, மண்வளத்தைப் பெருக்கி உயிர்ச் சூழலை காக்கும் என இயற்கை வேளாண் வல்லுநர்கள் கூறுகின்றனர். இயற்கை விவ சாயத்தை முன்னிறுத்தும் நம்மாழ்வார் மற்றும் சுபாஷ் பாலேக்கர் போன்றோர்கள் நாட்டுப் பசுக்கள், நடமாடும் இயற்கை உர தொழிற்சாலைகள் என்பதை வலியுறுத்து கின்றனர்.

இயற்கை வேளாண்மையில் முக்கிய பங்கு வகிக்கும் இடு பொருளான ‘பஞ்ச காவியம்’, நாட்டுப் பசுவின் சாணம், கோமியம், பால், தயிர், வெண் ணெய் போன்ற வற்றைப் பயன்படுத்தி தயார் செய்யப்படுகிறது. மேலும் நாட்டுப் பசுவின் சாணத் திலிருந்துதான் நம் முன்னோர்கள் விபூதியைத் தயாரித்தனர்.

இத்தனை நன்மைகளையும் நமக்கு வழங்கும் நமது நாட்டு மாடுகள் இனம் எதிர்காலத்தில் நம் சந்ததிகளின் முன் நடமாடுமா அல்லது புத்தகத்திலும் புகைப் படத்திலும் மட்டுமே பார்த்துத் தெரிந்துகொள்ளும் வகையில் அழிந்து போகுமா என்பது தற்போதுள்ள நம் கையில்தான் உள்ளது. இதற்கெல்லாம் ஒரே தீர்வு நாம் இயற்கை விவசாயத்திற்குத் திரும்புவதும், நாட்டு மாடுகளை விவசாயத்திற்குப் பயன்படுத்துவதும்தான்! தற்போது சிக்கிம் மாநிலம் இயற்கை வேளாண்மையை முழுமையாக மேற்கொண்ட மாநிலமாக அரசு அறிவித்துள்ளதை ஒரு முன்னு தாரணமாகக் கொண்டு, நம் நாடு முழுவதும் இயற்கையின் பாதைக்குத் திரும்ப முயற்சிகள் மேற்கொள்வது மிக அவசிய மாகும்.

மூலவன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...