9 வயதில் காணாமல் போய் 31 வயதில் தாயுடன் சேர்ந்த மகள்

தமிழகத்திலிருந்து கர்நாடகாவுக்குச் சென்றபோது மாயமான மகள் 22 ஆண்டு களுக்குப் பிறகு தாயைச் சந்தித்த நெகிழ்ச்சிச் சம்பவம் இந்த ஆண்டு தொடக்கத் தில் நடந்தது.

நெல்லையைச் சேர்ந்த காளிமுத்து-சைத்ரா தம்பதி 22 ஆண்டுகளுக்கு முன்பு கர்நாடக மாநிலம் சிக்மகளூரு மாவட்டம் முடிகெரே தாலுகாவில் குடியேறி னார்கள். பின்னர் அங்குள்ள தேயிலைத் தோட்டத்தில் வேலை செய்துவந்தனர்.

அப்போது இவர்களது ஐந்தாவது மகள் 9 வயதான அஞ்சலி அந்தப் பகுதியில் வேலை பார்க்கும் சக தொழிலாளர்களின் குழந்தைகளுடன் விளையாடிக் கொண் டிருந்தாள். அபோது திடீரென அஞ்சலியைக் காணவில்லை. இதனால் அதிர்ச்சி யடைந்த பெற்றோர் பல இடங்களில் தேடினர். மகளைக் கண்டுபிடிக்க முடிய வில்லை. ஏழ்மை நிலை காரணத்தால் போலிசிலும் புகார் செய்யவில்லை. மகள் அஞ்சலியை  கேரளாவைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர் தங்களுடன் அழைத்துச் சென்றனர். தங்கள் குடும்பத்தைப் பற்றி அஞ்சலி சொன்னது எதுவும் அந்தக் குடும்பத்தினருக்குப் புரியவில்லையாம்.  இதனால் அஞ்சலியைத் தங்கள் வீட்டில் சில வருடங்கள் உதவியாளராகப் பணிபுரிய வைத்தனர்.

 பின்னர் தக்க வயது வந்ததும் சிறு கலைஞரான நெல்லையைச் சேர்ந்த மணி சாஜி என்பவருக்குத் திருமணம் செய்துவைத்தனர். தன் கணவரிடம் அஞ்சலி 22 வருடங் களுக்கு முன்னால் கர்நாடகாவில் தோட்ட வேலை செய்ய வந்தபோது, தான் பெற்றோரைவிட்டுப் பிரிந்துவிட்டதை வருத்தத்துடன் தெரிவித்துள்ளார். இதை யடுத்து கோழிக்கோட்டில் உள்ள நண்பர்கள் உதவியுடன் முடிகெரேவில் உள்ள சமூக சேவகர் மோனு என்பவரை அஞ்சலி கணவர் சாஜி தொடர்புகொண்டு அஞ்சலி குறித்த விவரங்களைக் கூறினார். இதையடுத்து சம்பந்தப்பட்ட தோட்ட உரிமையாளர்களிடம் காளிமுத்து – சைத்ரா தம்பதி குறித்து மோனு விசாரித் தறிந்தார்.

இப்படித் தொடர்ந்து பல மாதங்கள் தேடலுக்குப் பிறகு அங்குள்ள ஒரு தேயிலைத் தோட்டத்தில் காளிமுத்து-சைத்ரா தம்பதி வேலை செய்வது தெரியவந்தது. இதையடுத்து மோனு அவர்களை நேரில் சந்தித்து விஷயத்தைத் தெரிந்துகொண் டார். அப்போது தாய் சைத்ரா கூறிய தகவல்கள், படங்கள் வாட்ஸாப்பில் அஞ்சலிக்கு மோனு அனுப்பினார். அதனைப் பார்த்த அஞ்சலி, இதுதான் என் அம்மா என்று கண்ணீர் விட்டார். உடனே நண்பர்கள் உதவியுடன் கணவர் சாஜி அஞ்சலி மற்றும் மூன்று குழந்தைகளுடன் கர்நாடகா முடிகெரேவுக்கு அழைத்துச் சென்றார். அங்கு காபி எஸ்டேட்டுக்கு மத்தியில் 22 வருடங்களுக்கு முன்னால் பிரிந்த தாயும் மகளும் சந்தித்தனர். தாயும் மகளும் கண்ணீர் மல்க நெகிழ்ச்சியுடன் கட்டிப்பிடித்து ஆனந்தக் கண்ணீர் வடித்தனர்.

தற்போது அஞ்சலிக்கு 31 வயதாகிறது. அவர் தனது தாயைச் சந்தித்த பிறகு தனது கணவர், குழந்தைகளைத் தாயிடம் அறிமுகப்படுத்தி வைத்தார். இந்த அரிய சந்திப் புக்குக் காரணமான சமூக ஆர்வலர் மோனுவுக்குத் தாயும் மகளும் கண்ணீர்விட்டு நன்றி தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!