ஃபிளாரன்ஸ் நைட்டிங்கேல் தேசிய விருது பெற்ற மணிமேகலை
சென்னையைச் சேர்ந்த ஜி.மணிமேகலை என்ற செவிலியருக்கு ஃபிளாரன்ஸ் நைட்டிங் கேல் விருதை குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் வழங்கி பாராட்டினார். மருத்துவத் துறையில் 17 ஆண்டுகள் சிறப்பாகப் பணியாற்றிய தற்காக அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டது.
கொரோனா தொற்று பரவல் காரணமாக காணொலி காட்சி மூலம் இந்த விருதை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் மணிமேகலைக்கு வழங்கிப் பாராட்டினார். பின்னர் இந்த விருதை அஞ்சல் மூலமாக மணிமேகலைக்கு அனுப்பப்பட்டு மணிமேகலை பெற்றுள்ளார்.
இந்தியா முழுவதிலும் உள்ள அரசு மருத்துவமனைகளில் சிறப்பாகப் பணியாற்றும் செவிலியர்களைத் தேர்வுசெய்து அவர்களை கௌரவப்படுத்தும் விதமாக ஆண்டுதோறும் ஃபிளாரன்ஸ் நைட்டிங்கேல் விருது வழங்கி வருகிறது மத்திய அரசின் சுகாதாரத்துறை. அதன்படி 2020-ம் ஆண்டுக்கான ஃபிளாரன்ஸ் நைட்டிங்கேல் விருது கடந்த மாதம் ஜி.மணிமேகலைக்கு வழங்கினார். இந்திய அளவில் 51 பேருக்கு வழங்கப்பட்டிருக்கிறது. அதில் தமிழ்நாடு அளவில் மூன்று பேருக்கு வழங்கப்பட்டது. அவர்களில் மணிமேகலை செவிலியராக 17 ஆண்டுகள் சிறப்பாகப் பணியாற்றியமைக்காக இந்த விருது வழங்கப் பட்டது.
அரசுப் பள்ளியில் தமிழ்வழியில் தனது பள்ளிப் படிப்பைத் தொடங்கிய மணிமேகலை தற்போது சென்னை எழும்பூரில் உள்ள குழந்தைகள் நல மருத்துவமனையில் செவிலியராகப் பணியாற்றி வருகிறார்.
இந்த விருது கிடைத்தது எனப் பெருமையான விஷயம். காரணம் 2020ஆம் ஆண்டு செவிலியர் தினமாக மத்திய அரசு அறிவித்திருக்கிறது. அந்த ஆண்டில் பெறுவது மகிழ்ச்சியான விஷயம். ஃபிளாரன்ஸ் நைட்டிங்கேல் சேவையின் செம்மல். அவரைப்போல யாராலயும் அதுவும் அந்தக் காலத்தி லேயேபோரில் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவ உதவி செய்தவர். அந்த அபாயகரமான பகுதிகளுக்கே சென்று மருத்துவம் பார்த்தவர். அவரை எனக்கு ரொம்பப் பிடிக்கும். அவர் பெயரில் விருது பெறுவது சந்தோஷம் என்றார் மணிமேகலை.
சரி ஃபிளாரன்ஸ் நைட்டிங்கேல் யார்?
பிளாரன்ஸ் நைட்டிங்கேல் என்ற செவிலியரான இவர் ‘கைவிளக்கு ஏந்திய தேவதை’ (The Lady with the Lamp) என்று அழைக்கப்படுகிறார். செவிலியர் சமூக சீர்திருத்தவாதி மற்றும் நவீன செவிலியர்களின் அமைப்பின் நிறுவனராகவும் திகழ்ந்தார்.
இத்தாலி நாட்டில் பிளாரன்ஸ் நகரில் வில்லியம் எட்வர்ட் நைட்டிங்கேல் – பிரான்சிஸ் தம்பதிகளுக்கு 3-வது குழந்தையாக பிளாரன்ஸ் நைட்டிங்கேல் 1820-ம் ஆண்டு மே மாதம் 12-ந்தேதி பிறந்தார்.
இவர் ‘கிரிமியன்’ போரின் போது ஒரு செவிலியராக அவரது பணியை தொடங்கினார். அவர் செயின்ட் தாமஸ் மருத்துவமனை மற்றும் செவிலியர் களுக்கான நைட்டிங்கேல் பயிற்சிப் பள்ளியை 1860-ம் ஆண்டு நிறுவி ஆயிரக்கணக்கானோரை செவிலியராக்கினார். அவர் பிறந்து 200-வது ஆண்டு நிறைவடைந்ததையொட்டி 2020-ல் செவிலியர் ஆண்டாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
ஒட்டோமான் பேரரசைக் கட்டுப்படுத்த ரஷியா சாம்ராஜ்யத்திற்கு எதிராக பிரிட்டிஷ் பேரரசு 1853-ம் ஆண்டு கிரிமியன் போரில் ஈடுபட்டது. இந்த போரில் 18 ஆயிரம் வீரர்கள் படுகாயமடைந்து ஆயிரக்கணக்கான பிரிட்டிஷ் வீரர்கள் கருங்கடலுக்கு அனுப்பப்பட்டனர். தொடர்ந்து 1854-ம் ஆண்டு இந்த போரில் 18 ஆயிரம் வீரர்கள் படுகாயமடைந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப் பட்டனர்.
அப்போது நைட்டிங்கேல் 34 செவிலியர்களுடன் கிரிமியாவிற்கு சென்று படுகாயமடைந்த போர் வீரர்களுக்கு விளக்குகள் ஏந்திச் சென்று சிகிச்சை அளித்தார். உயிருக்குப் போராடிய பலரின் கண்களுக்கு ‘கைவிளக்கு ஏந்திய ஏந்திய தேவதையாகத் தோன்றினார்.
இவ்வாறு அவர் வாழ்க்கை முழுவதையும் செவிலியர் பணியில் முழுமையாகத் தன்னை அர்ப்பணித்து அரிய பல சேவைகளைச் செய்து 1910-ம் ஆண்டு இயற்கை எய்தினார்.
‘அவருடைய மறைவுக்குப் பிறகு ஒவ்வொரு ஆண்டும் மே 12-ந்தேதி லண்டனில் உள்ள வெஸ்ட் மினிஸ்டர் அபே மாளிகையில் உள்ள விளக்குகளில் ஒளி ஏற்றி, செவிலியர்கள் ஒவ்வொருவராக கைமாற்றப்பட்டு மாளிகையின் உயர்ந்த பீடத்தில் வைக்கப்படுகிறது.
பிளாரன்ஸ் நைட்டிங்கேல் பிறந்த 200-வது ஆண்டில் அவருடைய வழியில் தற்போது கொரோனா வைரஸ் பரவலுக்கு எதிரான போரில் செவிலியர்கள் அனைவரும் ஈடுபட்டு வருகின்றனர். நம் நாட்டில் மட்டும் அல்லாது உலகளவில் மக்களின் ஆரோக்கியத்திற்கு செவிலியர்கள் விலைமதிப்பற்ற பங்களிப்பை வழங்குகிறார்கள்.
சிறப்பாகப் பணிபுரியும் செவிலியர்களுக்கு 1973ஆம் ஆண்டு முதல் தேசிய நைட்டிங்கேல் விருது வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் அவர் பிறந்த 200வது ஆண்டில் வழங்கப் பட்ட இந்த தேசிய விருது இந்திய அளவில் 51 பேர்களுக்கு வழங்கப்பட்டது. இதில் சென்னையைச் சேர்ந்த மணிமேகலைக்கு இந்த விருது கிடைத்துள்ளது மகிழ்ச்சியான செய்தி.
1 Comment
மிக்க மகிழ்ச்சி. அற்புதம். பொது தொண்டு ஆற்றும் இவர்கள் போன்ற நல் இதயங்களு க்கு இவை நிச்சயம் கொடுக்கப்பட வேண்டும். இவை தொடரவும் வேண்டும். 🙏🙏🙏🙏👌👌👌