ரஜினி மகள் சௌந்தர்யா வலைதளம் ஹூட்டில் வெதர்மேன்

தனது சொந்தக் குரலில் வானிலை முன்னறிவிப்புகளை வழங்க தமிழ்நாடு வெதர்மேன் இப்போது ஹூட் செயலியில் இணைந்துள்ளார்.

சௌந்தர்யா ரஜினிகாந்த் VSV மற்றும் சன்னி போகலா இணைந்து சமீபத்தில் தொடங்கிய சமூக வலைதளமான ஹூட், சக்திவாய்ந்த குரல்களின் சமூகமாய் மாறியுள்ளது. அதில், தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் இணைந்துள்ளார்.

பிரதீப் ஜானை வரவேற்று சௌந்தர்யா ரஜினிகாந்த் VSV கூறியதாவது, “தமிழகத்தின் வானிலையைத் துல்லியமாகக் கணித்தல், பொது அக்கறை யோடு மக்களுக்குச் சரியான நேரத்தில் வானிலை தகவல்களை வழங்கி எச்சரித்தல் ஆகியவற்றில் பிரதீப் ஜானின் பங்கு அளப்பரியது. அவரின் குரலை ஹூட்டில் மென்மேலும் கேட்க ஆவலுடன் காத்திருக்கிறோம்” எனக் கூறியுள்ளார்.

வெதர்மேன் பிரதீப் ஜான்

“தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜானின் குரலைக் கேட்பது மகிழ்ச்சியாக உள்ளது. வானிலை பற்றிய அவரது ஆழமான பகுப்பாய்வு, சமீபத்திய தமிழ்நாடு மழை குறித்த அறிவிப்புகள் பொதுமக்களுக்குப் பெருமளவில் பயனளித்துள்ளன. அவர் ஹூட்டில் இணைந்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது”, என ஹூட்டின் இணை நிறுவனர் சன்னி போகலா கூறியுள்ளார்.

இதற்கிடையில், பல்வேறு துறைகளைச் சார்ந்த முன்னணி நபர்களும் ஹூட்டில் இணைந்துள்ளனர். குறிப்பாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இணைந்துள்ளார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்தச் செயலியை டவுன்லோட் செய்துள்ளார்.

மிக எளிய செயல்முறையின் மூலம் ஒருவர் ஹூட்டில் இணைந்து 60 வினாடிகள் (சரி பார்க்கப்பட்ட பயனர்களுக்கு 180 வினாடிகள்) வரை ஆடியோ செய்தியைப் பதிவு செய்து உலகிற்குப் பகிரலாம். பயனர்கள் தங்கள் குரலுக்குத் திரைப்படம் போன்ற அனுபவத்தைக் கூட்டு வதற்குப் பின்னணி இசையைச் சேர்க்க ஹூட் அனுமதிப்பது அதன் தனித்துவமான அம்சமாகும். மேலும் ஒரு செய்தியின் காட்சி நுணுக்கங்களை வெளிப்படுத்த புகைப்படத்தை இணைப்பதற்கும் ஹூட் உதவுகிறது. Cloud-Native தொழில்நுட்பத்தினால் ஆன ஹூட், இந்தியாவின் முதல் குரல் அடிப்படையி லான சமூக வலைதளம் ஆகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!