இது சினிமா வியாபாரம் பற்றிய பதிவு!
இன்று (13.11.2021) காலை கேபிள் டி.வி. ஆப்பரேட்டரும் செட்டாப்பாக்ஸ் எம்.எஸ்.ஓ. நிறுவனத்தின் முக்கியஸ்தருமான ஒருவருடன் பேசிக் கொண்டிருந்தேன்.
அவர் கூறிய சில விஷயங்கள் நம் தமிழ் சினிமா வியாபாரத்தைப் பற்றியது.
1. OTT டிஜிட்டல் சேனல்கள் வந்தபோது SCV, TCCL, VK Digital போன்ற செட்டாப் பாக்ஸ் நிறுவனங்கள் பயந்தது உண்மை. ஆனால், மக்கள் OTT சேனல்களுக்கு முழுமையான ஆதரவு தரவில்லை. நல்ல படங்கள் வந்தால் பார்ப்பதும், இல்லையென்றால் OTT பக்கமே போகாதிருப்பதும் வாடிக்கையாகி விட்டது.
2. வைஃபை கனெக்சன் சிறிதளவு செட்டாப் பாக்ஸ் கனெக்சன்களைப் பாதித்துள்ளது. நகரங்களில் 20% வரையும், மற்ற ஊர்களில் 5%-க்கும் குறைவாக. தமிழ்நாட்டின் மொத்த செட்டாப் பாக்ஸ் கனெக்சனான 1,10,00,000 (ஒரு கோடியே பத்து லட்சம்) கனெக்சன்களில் 10,00,000 (பத்து லட்சம்) கனெக்சன்கள் வரை குறைந்திருக்கிறது.
3. OTT மற்றும் செட்டாப் பாக்ஸ் கனெக்சன்களால் தியேட்டர்கள் நிச்சயம் பாதிக்கப்படாது. மினி தியேட்டர் சிஸ்டமும், நல்ல பராமரிப்பும், மக்கள் வெறுப்படையும் அளவிலான விலைகள் தவிர்ப்பும் செய்தால் இப்போதிருக் கும் தியேட்டர்களைவிட இன்னும் தியேட்டர்கள் அதிகரிக்க வாய்ப்பு உண்டு.
4. தியேட்டர், OTT, லோக்கல் சேனல்கள், செட்டாப் பாக்ஸ் சேனல்கள் என்று எல்லா வியாபாரத் தளங்களிலும் நல்ல விதமாக எடுக்கப்படும் படங்கள் மட்டுமே வரவேற்புக்குள்ளாகும். மற்றவை எளிதில் காணாமல் போகும்.
5. மக்கள் விரும்பும் நல்ல படங்களை உருவாக்கியே தீரவேண்டிய கட்டாயத்தில் நம் தமிழ் சினிமா இருக்கிறது. அவரைச் சந்தித்துப் பேசியதில் சில செய்திகளை உள்வாங்க முடிந்தது.
– 30 லட்சமோ, 3 கோடியோ, 30 கோடியோ அல்லது 300 கோடியோ… பட்ஜெட் எதுவாக இருந்தாலும் மக்களுக்குக் கவலை இல்லை. ஏதாவது ஒரு விதத்தில் தன்னை ஈர்க்கிறதா, புதுமையாக இருக்கிறதா, படம் ஆரம்பித்ததிலிருந்து முடியும் வரை எங்கேஜ்டாக வைத்திருக்கிறதா என்பது மட்டுமே முக்கியம்.
இஷ்டத்திற்குப் படம் எடுத்துவிட்டு மக்களையும், தியேட்டர்களையும் குறை சொல்வது தவறு.
- படத்திற்கேற்றவாறு செய்ய வேண்டிய செலவு.
கழுதையைக் குதிரை விலை கொடுத்து வாங்கிவிட்டு பின்பு நஷ்டம் என்று புலம்புவது புத்திசாலித்தனம் அல்ல.
* சங்கங்கள் இணைந்து ஒரு டீம் மூலம் மக்களைச் சந்தித்து ஒரு மிகப் பெரிய சர்வே எடுத்து படத் தயாரிப்பை நேர் படுத்துதல் அவசியம்.
* இன்னும் ஒன்றும் கெட்டுவிடவில்லை, நம்மிடம் உள்ள வேற்றுமைகளை ஒதுக்கி வைத்துவிட்டு, நம் குறைகளைக் களைந்து முன்னேற வாய்ப்பு இருக்கிறது. கீழ் நோக்கிப் பிடித்தாலும் மேல் நோக்கி எரியும் தீபம் நாம். நம் வலிமையை உணர்ந்து செயல்படுவோம்!
– கஸாலி, தமிழ் சினிமா இயக்குநர், தயாரிப்பாளர், முகநூல் பதிவு