செல்போன் செயலி மூலம் பணப்பரிமாற்றம் அதிகரிப்பு
மத்திய அரசின் அனைத்து திட்டங்களுக்கும் நிதி ஆயோக் எனப்படும் அமைப்பு ஆலோசனை வழங்கி வருகிறது. இந்த அமைப்பின் தலைமைச் செயல் அதிகாரியாக அமிதாப் கந்த் செயல்பட்டு வருகிறார். ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய அவர்,
“அடுத்த 3 அல்லது 4 ஆண்டுகளில் கிரெடிட், டெபிட் கார்டுகளின் பயன்பாடு குறைக்கப்படும். இதேபோல், தேவையற்ற ஏ.டி.எம்.கள் கண்டறியப்பட்டு அதன் எண்ணிக்கை குறைக்கப்படும். செல்போன் மூலம் பரிவர்த்தனையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும். சர்வதேச அளவில் ஆதார், செல்போன், வங்கிக் கணக்கு அதிகம் வைத்திருப்பவர்களைக் கொண்ட நாடாக இந்தியா விளங்கு கிறது. இனிவரும் காலத்தில் தொழில்நுட்பப் பயன்பாடு அதிகரிக்கும். அப்போது செல்போன் பரிவர்த்தனை என்பது எளிதாகும். நாடு முன்னேற வேண்டு மென்றால் புதுமைகளைப் புகுத்துவது அவசியமானதாகும்” என்றார்.
ரொக்க பரிவர்த்தனைக்குப் பதிலாக டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு மாற வேண்டும் என பிரதமர் மோடி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
2020ஆம் ஆண்டு ஏ.டி.எம். மற்றும் கிரடிட் கார்டுகள் மூலமாகப் பணப்பரிமாற் றம் செய்வது 14 சதவிகிதம் குறைந்து 17 ஆயிரம் கோடி டாலராக இருந்தது. கொரோனா தொற்றால் ஏற்பட்ட பொது முடக்கம் காரணமாகவே கைபேசி செயலிகளின் மூலம் பணப்பரிமாற்றம் செய்வது அதிகரித்துள்ளது.
இது தொடர்பாக எஸ் அன்ட் பி நிறுவனம் ஆய்வறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் இந்தியர்களின் பணப்பரிமாற்ற முறை வேகமாக மாற்றம் ஏற்பட்டு வருகிறது. 2020ஆம் ஆண்டு ஏ.டி.எம். மற்றும் கிரிடிட் கார்டுகள் மூலமாகப் பணப்பரிமாற்றம் செய்வதைவிட செல்போன் செயலிகள் மூலம் பணப்பரிமாற் றம் செய்வது 67 சதவிகிதம் அதிகரித்துள்ளது.
கடந்த 2020ஆம் ஆண்டு செல்போன் மூலம் 47,800 கோடி டாலர் பணப்பரி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த 2021ஆம் ஆண்டு செல்போன் செயலி மூலம் பணப்பரிமாற்றம் செய்வது ஒரு லட்சம் கோடி டாலர்களை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பணப்பரிமாற்றம் செய்வதற்கான செல்போன் செயலிகளில் போன் பே செயலி 44 சதவிகிதம் சந்தை பங்குகளுடன் முதல் இடத்தில் உள்ளது.
கூகுள் பே செயலி 35 சதவிகிதம் சந்தைப் பங்குகளுடன் 2வது இடத்தில் உள்ளது. பே.டி.எம். செயலி 14 சதவிகிதம் சந்தைப் பங்குகளுடன் 3வது இடத் திலும் அமேசான் செயலி 2 சதவிகிதம் சந்தைப் பங்குகளுடன் 4வது இடத் தில் உள்ளது.
இனி பணப்பரிமாற்றம் செய்வது மிக சாதாரண விஷயமாகிவிடும். பணம் சம்பாதிப்பதுதான் பெரிய விஷயமாக இருக்கும்.