ஓர் உயர்ந்த லட்சியம் இருக்க வேண்டும்.
வாழ வேண்டும் என்ற விருப்பம் உள்ளவருக்கு எந்தவொரு எதிர்மறையான விமர்சனத்தையும் தூக்கி எரியும் தைரியம் இருக்க வேண்டும்.
வாழ்க்கை மகிழ்ச்சியானதாக இருக்க வேண்டும் எனில், உங்களுக்கான இலட்சியம் ஒன்றினை வகுத்துக்கொள்ளுங்கள்.
மனிதர்களினதும் பொருட்களினதும் பின்னால் ஓடுவதை விட்டு விட்டு உங்கள் இலட்சியக் கனவின் பின்னால் ஓடுங்கள்..!
வாழ்க்கைக்கு ஓர் உயர்ந்த லட்சியம் இருக்க வேண்டும். உங்கள் லட்சியம் எவ்வளவு உயர்வாக உள்ளதோ, அவ்வளவு உயர்வாக உங்கள் வாழ்க்கை அமையும்.
ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் ஒன்றைக் கற்றுக்கொள்வதற்க்கும் முன்னேறுவதற்கும் வாய்ப்பிருக்கும்.
எந்த அவமானத்தையும் வலியாய்எடுத்துக்கொள்ளாதீர். வழியாய் எடுத்துக்கொள்ளுங்கள்.
உங்கள் வலியை உணர்ந்தால் நீங்கள் உயிரோடு இருக்கிறீர்கள் என்று அர்த்தம் பிறர் வலியை உணர்ந்தால் நீங்கள் மனிதனாக இருக்கிறீர்கள் என்று அர்த்தம்.
வாழ்க்கையில் பாதிக்கப்பட்டவரும்,சோதிக்கப்பட்டவரும்பாவப்பட்டவர் அல்ல. பக்குவப்பட்டவர்..!
பின்னோக்கிப் பார்க்காதீர். எப்போதும் முன்னோக்கி நீங்கள் எதைச் செய்ய விரும்புகிறீகளோ அதையே பாருங்கள். நீங்கள் முன்னேறுவது உறுதி.
எல்லோருக்கும் முன்னேற ஒரு காலம் வரும். அது சிலருக்கு துன்பங்களோடு கலந்து வரும். சிலருக்கு துன்பங்களை கடந்த பின்னர் வரும்.
பல அவமானங்களையும், துன்பங்களையும் கடக்கும் ஒருவன் மனதில் ஓட வேண்டிய ஒரே வாசகம், நான் ஒருநாள் வெற்றி பெறுவேன் என்பது மட்டுமே…
வாழ்க்கையில் துன்பங்கள் வலிமையானது… அதை விட வலிமையானது, உங்கள் மீது நீங்கள் வைத்திருக்கும் நம்பிக்கை…
குறிக்கோளை முடிவு செய்த பின், அதற்கான முயற்சிகளில் மட்டுமே கவனம் செலுத்துங்கள்…
குளிர்காய ஆசைப்பட்டால் நெருப்பினருகில் அமரலாம். நெருப்பிலேயே அமர முடியாது..
அது போல தன்மானம் என்பது தள்ளி இருந்தால் தான் காக்கப்படும்..