வரலாற்றில் இன்று – 26.07.2021 உலக சதுப்புநிலக்காடுகள் தினம்

 வரலாற்றில் இன்று – 26.07.2021 உலக சதுப்புநிலக்காடுகள் தினம்

புயல், சுனாமி போன்ற இயற்கை சீற்றங்களினால் ஏற்படும் பேரழிவுகளை தடுக்கும் கேடயமாக சதுப்புநிலக்காடுகள் உள்ளன. இவை கடற்கரையை ஒட்டி உள்ளன. இதனை மாங்ரோவ் காடுகள், அலையாத்திக் காடுகள் என்றும் அழைக்கப்படுகின்றன. எனவே இவற்றை அழியாமல் பாதுகாத்திட ஜூலை 26ஆம் தேதியை உலக சதுப்புநிலக்காடுகள் தினமாக கடைபிடிக்கப்படுகிறது.

கார்கில் போர் நினைவு தினம்

ஜம்மு – காஷ்மீர் மாநிலம் கார்கில் மாவட்டத்தில் இந்திய – பாகிஸ்தான் ராணுவத்திற்கு இடையே 1999ஆம் ஆண்டு மே மாதம் துவங்கி ஜூலை வரை நடைபெற்ற போரில் சுமார் 500க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்களும், அதிகாரிகளும் தங்களது இன்னுயிரை நாட்டுக்காக இழந்தனர்.

நாட்டு மக்களுக்காக இன்னுயிரை தியாகம் செய்த ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தவும், காயமடைந்த வீரர்களை கௌரவிக்கும் விதமாகவும் ஜூலை 26ஆம் தேதி, கார்கில் நினைவு தினம் கடைபிடிக்கப்படுகிறது.

மு.கு.ஜகந்நாதராஜா

மொழிகளுக்கு இடையே அறிவைப் பரிமாறிய பன்மொழிப்புலவர் மு.கு.ஜகந்நாதராஜா 1933ஆம் ஆண்டு ஜூலை 26ஆம் தேதி விருதுநகர் மாவட்டத்திலுள்ள ராஜபாளையத்தில் பிறந்தார்.

தன் விடாமுயற்சியால் பல மொழிகளை கற்றுக்கொண்டார். பிறகு தமிழின் மேன்மைமிக்க இலக்கியங்களான திருக்குறள், புறநானூறு, குறிஞ்சிப்பாட்டு முதலியவற்றை தெலுங்கில் மொழிப்பெயர்த்தார்.

மன்னர் கிருஷ்ண தேவராயர் தெலுங்கில் இயற்றிய ஆமுக்த மால்யத (சூடிக் கொடுத்தவள்) என்ற காவியத்தை 1988ஆம் ஆண்டு தமிழாக்கம் செய்தார். இதுவே தமிழ் மொழிபெயர்ப்புக்காக சாகித்ய அகாடமி விருது வாங்கிய முதல் நூலாகும்.

முத்தொள்ளாயிரம், தமிழும் பிராகிருதமும், இந்திய மொழிகளின் ஒப்பிலக்கியம் (1994), திராவிட மொழிகளில் யாப்பியல் உள்ளிட்ட பல நூல்களை எழுதியுள்ளார்.

பல மொழிகளுக்கு இடையே மனித அறிவை விரிவுப்படுத்திய இவர் தனது 75வது வயதில் (2008) மறைந்தார்.

முக்கிய நிகழ்வுகள்

  • 1856ஆம் ஆண்டு ஜூலை 26ஆம் தேதி உலகப் புகழ்பெற்ற எழுத்தாளர் ஜார்ஜ் பெர்னாட் ஷா அயர்லாந்தின் டப்ளின் என்ற நகரில் பிறந்தார்.
  • 1822ஆம் ஆண்டு ஜூலை 26ஆம் தேதி டயரைக் (pneumatic tyre) கண்டுபிடித்த ராபர்ட் வில்லியம் தாம்சன் பிறந்தார்.

கமலகண்ணன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...