வரலாற்றில் இன்று – 13.06.2021 பான் கி மூன்

ஐ.நா.வின் 8வது பொதுச் செயலாளரான பான் கி மூன் 1944ஆம் ஆண்டு ஜூன் 13ஆம் தேதி கொரியாவில் பிறந்தார்.

இவர் ஐ.நா.வின் பொதுச் செயலாளராக 2007ஆம் ஆண்டு பதவியேற்றார். அடுத்தடுத்து இரண்டு முறை ஐ.நா. பொதுச்செயலாளராக பணியாற்றியுள்ள இவரின் பதவிக்காலம் 2016ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதி நிறைவடைந்தது.

தென் கொரியாவின் இந்தியத் தூதரகத்தில் முதன்முதலாக பணியில் சேர்ந்த இவர் கொரிய வெளியுறவுத்துறையின் பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றியுள்ளார். பத்து ஆண்டுகளாக ஐ.நா.வை வழிநடத்தினார்.

ஜேம்ஸ் கிளார்க் மாக்ஸ்வெல்

கோட்பாட்டு இயற்பியலாளரான ஜேம்ஸ் கிளார்க் மாக்ஸ்வெல் (James Clerk Maxwell) 1831ஆம் ஆண்டு ஜூன் 13ஆம் தேதி ஸ்காட்லாந்து நாட்டின் எடின்பர்கில் பிறந்தார்.

இவர் மின்காந்தவியல் குறித்து ஆராய்ச்சிகள் மேற்கொண்டு முதன்முதலில் மின்காந்த அலைகள் இருப்பதற்கான ஆதாரங்களைப் பரிசோதனை மூலம் நிரூபித்தார். மேலும் 1865ஆம் ஆண்டு மின்காந்தவியல் கோட்பாட்டை உருவாக்கினார்.

வாயுக்களின் இயக்கக் கோட்பாட்டை (kinetic theory of gases) விளக்குவதற்காக புள்ளியியல் முறையை உருவாக்கினார். இது Maxwell-Boltzmann distribution எனக் குறிப்பிடப்படுகிறது.

இறுதிவரை ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு வந்தவரும், தலைசிறந்த விஞ்ஞானியுமான ஜேம்ஸ் கிளார்க் மாக்ஸ்வெல், 1879ஆம் ஆண்டு மறைந்தார்.

முக்கிய நிகழ்வுகள்

1965ஆம் ஆண்டு ஜூன் 13ஆம் தேதி இந்திய கிரிக்கெட் வீரர் மனிந்தர் சிங் (Maninder Singh) புனேயில் பிறந்தார்.

1955ஆம் ஆண்டு ஜூன் 13ஆம் தேதி சோவியத் ஒன்றியத்தில் முதலாவது வைரச் சுரங்கம் கண்டுபிடிக்கப்பட்டது.

1983ஆம் ஆண்டு ஜூன் 13ஆம் தேதி பயனியர் 10 (Pionner- 10), சூரியக் குடும்பத்தை தாண்டிய முதலாவது விண்கலம் (spacecraft) ஆனது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!