ஸ்டான்லி மருத்துவமனை | ஐட்ரீம் இரா. மூர்த்தி MLA ஆய்வு
மாண்புமிகு தமிழக முதலமைச்சர் தலைவர் தளபதி அவர்களின் கட்டளைபடி கொரோனா நோய் தொற்றைக் கட்டுப்படுத்த தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமலில் உள்ள காரணத்தால் பொது மக்களுக்கு வீடு தேடி நடமாடும் அங்காடிகள் மூலம் காய்கறி, காய்கறி தொகுப்பு பைகள், பழங்கள் விற்பனையை வாகனங்கள் மூலம் விற்பனை செய்திட பெரு நகர சென்னை மாநகராட்சி செய்துள்ள ஏற்பாட்டினை இராயபுரம் சட்டமன்ற தொகுதியில் பெரு நகர சென்னை மாநகராட்சி வட்டம் 49 ல் உள்ள காமாட்சி அம்மன் கோயில் அருகில் இராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் ஐட்ரீம் இரா.மூர்த்தி எம்.எல்.ஏ அவர்கள் துவக்கி வைத்தார். உடன் பெருநகர சென்னை மாநகராட்சி அதிகாரிகள், இராயபுரம் மேற்கு பகுதி செயலாளர் வ.பெ.சுரேஷ், கிழக்கு பகுதி பொறுப்பாளர் இரா.செந்தில்குமார், வட்ட கழக செயலாளர் எல்.சீனிவாசன் மற்றும் மாவட்ட, பகுதி, வட்ட கழக நிர்வாகிகள், மாவட்ட, பகுதி, வட்ட கழக அணிகளின் நிர்வாகிகள், கழகத் தோழர்கள் உள்ளனர்.
இராயபுரத்தில் அமைந்துள்ள ஸ்டான்லி மருத்துவமனை முழுவதும் இராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் ஐட்ரீம் இரா. மூர்த்தி , ஆஸ்பத்திரி டீன் மற்றும் மருத்துவ குழுவுடன் ஆய்வு செய்தார்.
பெரு நகர மாநகராட்சி மண்டலம் 5 ல் உள்ள வட்டம் 53 ல் இராயபுரம் சட்ட மன்ற உறுப்பினர் ஐட்ரீம் மூர்த்தி எம்.எல்.ஏ அவர்களின் பெரும் முயற்சியில் பெரு நகர மாநகராட்சி ஆணையர் அவர்களின் ஆணைப்படி நேற்று (30-05-2021) 10 மணிமுதல் மதியம் 1 மணி வரை போஜராஜ நகர் பகுதிகளில் தீவிர துப்புரவுப்பணி நடைபெற்றது.
இப்பணினை இராயபுரம் சட்ட மன்ற உறுப்பினர் ஐட்ரீம் மூர்த்தி எம்.எல்.ஏ ஆய்வு செய்து அங்கு பணியாற்றிய துப்புரவு பணியாளர்கள், பணி மேற்பார்வையாளர்கள், அதிகாரிகளிடத்தில் கலந்துரையாடி பகுதியினை தூய்மை பகுதியாக மாற்றியமைத்திட செய்ய வேண்டிய பணிகள் குறித்து விளக்கி விவரித்தார். மேலும் அவர்களுடன் சுமார் 3 மணி நேரம் செலவிட்டு துப்புரவு பணிகளை துரிதப்படுத்தினார். ஆய்வில் அங்கு பொது மக்களுக்காக கட்டப்பட்டுள்ள கழிப்பறையினையும் ஆய்வு செய்து அதனை தூய்மை செய்திட வலியுறுத்தினார்.
இந்நிகழ்வில் இராயபுரம் மேற்கு பகுதி செயலாளர் வ.பெ.சுரேஷ், கிழக்கு பகுதி பொறுப்பாளர் இரா.செந்தில்குமார், 53 வது வட்ட கழக செயலாளர் கொரியர் பி.முருகன் மற்றும் மாவட்ட, பகுதி, வட்ட கழக நிர்வாகிகள், அணிகளின் நிர்வாகிகள் உடனிருந்தனர்.
பணி நிறைவு பெற்ற பிறகு துப்புரவு பணிக்கு ஒத்துழைப்பு நல்கிய பகுதி பொது மக்கள் பணியாற்றிய துப்புரவு பணியாளர்கள், பணி மேற்பார்வையாளர்கள், அதிகாரிகள், மாவட்ட, பகுதி, வட்ட கழக நிர்வாகிகள், அணிகளின் நிர்வாகிகள் ஆகியோருக்கு இராயபுரம் சட்ட மன்ற உறுப்பினர் ஐட்ரீம் மூர்த்தி எம்.எல்.ஏ நன்றி கூறினார்.