மது​​ரை தனியார் மருத்துவம​னைக்கு​ ​செக்

 மது​​ரை தனியார் மருத்துவம​னைக்கு​ ​செக்

மதுரையை சேர்ந்த 49 வயது பெண்மணி ஒருவருக்கு கடந்த மே மாதம் 8ம் தேதி தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் இரவில் அவருக்கு ஆக்சிஜன் அளவு குறைந்து சுவாசிப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. மே 13 அன்று அதிகாலை 12,30 மணியளவில் சின்ன சொக்கிகுளம் பகுதியில் இயங்கி வரும் தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கபட்டபோது முன் கட்டணமாக 2,05,000 ரூபாயை செலுத்திட மருத்துவமனை கூறியபோது உறவினர்கள் ஒரு லட்சம் ரூபாய் மட்டும் செலுத்தினார்கள். மறுநாள் பகலில் நோயாளிக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து உறவினர்கள் கேட்டதற்கு சரியான பதிலை மருத்துமனை தரப்பில் தெரிவிக்கவில்லை. தீவிர சிகிச்சைக்காக அவசரமாக அனுமதிக்கபட்டிருந்த நோயாளிக்கு குளுகோஸ் ட்ரிப்ஸ் கூட அவர்கள் அளிக்கவில்லை என உறவினர்கள் தகவல் தெரிவித்திருந்தனர். சிகிச்சை திருப்தி இல்லாததால் மே 14 காலை 8 மணிக்கு அவரை டிஸ்சார்ஜ் செய்யுமாறு உறவினர்கள் கூறியுள்ளனர். டிஸ்ஜார்ஜ் செய்யப்பட்ட பின்னும் உடனே பில்தராமல் மறுநாள் வருமாறு கூறியுள்ளனர்.

மறுநாள் மே15 அன்று பில் கேட்கும்போது 1,00,356 ரூபாய்க்கு கணக்கு கொடுத்துள்ளனர். பாலினம் பெண் என்பதிற்கு பதிலாக ஆண் என்று குறிப்பிட்டதை கேட்டதற்கு சரியான பதில் இல்லை.

இந்த புகார் குறித்து டிவிட்டரில் பகிர்ந்த ஒருவருக்கு பதிலளித்த தமிழக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மதுரை ஆட்சியர் இதை கவனித்து தகுந்த நடவடிக்கை எடுக்க கோரியிருக்கிறேன் என்று குறிப்பிட்டு இருந்ததர்.

இந்த விவகாரம் குறித்து மதுரை மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகரிடம் விசாரிக்கையில் மதுரை சின்ன சொக்கிகுளத்தில் இயங்கி வரும் தனியார் மருத்துவமனை அதிக கட்டணம் வசூலித்துக் வந்ததாக புகார் குறித்து விசாரணை நடத்தி அவர்கள் கூடுதல் கட்டணம் வசூலித்து இருந்தால் விதிகளின் படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்ற கூறி

மதுரையில் கூடுதல் கட்டணம் வசூலிக்கும் தனியார் மருத்துவமனைகள் குறித்து 0452-2530104/06/07, 9597176061 என்ற எண்களில் புகார் அளிக்கலாம் என்று விளக்கம் அளித்தார்

அதை தொடர்ந்து மருத்துவமனை நிர்வாகம் கூடுதலாக வாங்கிய தொகையை நோயாளியின் உறவினருக்கு திரப்பித் தந்துள்ளது.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...