வார ராசிபலன்கள் (26.04.2021 – 02.05.2021) | ஜோதிடர் அ.மோகன்ராஜ்

 வார ராசிபலன்கள் (26.04.2021 – 02.05.2021) | ஜோதிடர் அ.மோகன்ராஜ்

மேஷம் :

வியாபாரம் தொடர்பான நுணுக்கமான சில விஷயங்களை அறிந்து கொள்வதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். மனை விருத்திக்கான முயற்சிகளும், அது தொடர்பான சிந்தனைகளும் அதிகரிக்கும். நண்பர்களின் ஒத்துழைப்பால் இழுபறியாக இருந்துவந்த பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். வேலை தேடுபவர்களுக்கு முயற்சிக்கேற்ப பலன்கள் கிடைக்கும். குடும்பத்தில் புதிய நபர்களின் வருகையால் மாற்றங்களும், மகிழ்ச்சியான தருணங்களும் ஏற்படும். இளைய உடன்பிறந்தவர்கள் பற்றிய எண்ணங்கள் அதிகரிக்கும். எழுத்து சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். சிறு மற்றும் குறுந்தொழில் தொடர்பான எண்ணங்கள் மேம்படும்.

வழிபாடு :

முருகப்பெருமானை வழிபாடு செய்துவர மனக்கஷ்டங்கள் குறையும்.

ரிஷபம் :

உடன்பிறந்தவர்களிடம் தேவையற்ற கருத்து வேறுபாடுகளை தவிர்த்து பொறுமையுடன் செயல்படுவது நல்லது. கடன் சார்ந்த பிரச்சனைகள் படிப்படியாக குறையும். தேவையற்ற சிந்தனைகளின் மூலம் மனக்குழப்பங்கள் உண்டாகும். தாய்மாமன் வழியில் சிறு சிறு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு நீங்கும். வாகனம் தொடர்பான பயணங்களால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். நிர்வாகம் சார்ந்த பணிகளில் நிதானம் வேண்டும். வீடு மாற்றம் செய்வது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். புதிய நபர்களிடம் உரையாடும் பொழுது கோபமான பேச்சுக்களை தவிர்ப்பது நல்லது. செய்யும் முயற்சிகளில் சோர்வின்றி புத்துணர்ச்சியுடன் செய்வதன் மூலம் எண்ணிய இலக்கை அடைய இயலும். கடன் தொடர்பான பிரச்சனைகள் குறைவதற்கான வாய்ப்புகள் ஏற்படும்.

வழிபாடு :

விஷ்ணு கோவிலுக்கு சென்று வழிபாடு செய்துவர பணப்பிரச்சனைகள் தீரும்.

மிதுனம் :

உடல் ஆரோக்கியத்தில் இருந்துவந்த இன்னல்கள் நீங்கி சுபிட்சம் ஏற்படும். மனதில் தன்னம்பிக்கையும், தைரியமும் உண்டாகும். குடும்ப உறுப்பினர்களின் மூலம் ஆதரவான பலன்கள் கிடைக்கும். ஏற்ற, இறக்கமான சூழ்நிலைகள் காணப்பட்டாலும் தேவையான உதவிகள் கிடைக்கும். எழுத்து மற்றும் பத்திரிக்கை சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். கோபத்தினை மற்றவர்களிடத்தில் காட்டுவதை தவிர்ப்பது உங்களின் மீதான நம்பிக்கையை மேம்படுத்தும்.

வழிபாடு :

பெருமாளுக்கு துளசி மாலை சாற்றி வழிபாடு செய்துவர எல்லா நன்மைகளும் உண்டாகும்.

கடகம் :

மனதிற்கு பிடித்த விதத்தில் பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். குடும்பத்தின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். திட்டமிட்ட காரியங்கள் எதிர்பார்த்த விதத்தில் நிறைவேறும். வாசனை திரவியம் தொடர்பான வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். எதிர்பாலின மக்களின் மூலம் புதுவிதமான அனுபவம் உண்டாகும். சுகபோகங்களை மேம்படுத்துவது தொடர்பான எண்ணங்கள் ஏற்படும். தரகு தொடர்பான வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். மற்றவர்களுக்கு உதவும்போது சிந்தித்து செயல்படுவது நல்லது. உத்தியோகம் தொடர்பான விஷயங்களில் மற்றவர்களின் செயல்பாடுகளில் தலையிடாமல் இருக்கவும். விளையாட்டு தொடர்பான விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும்.

வழிபாடு :

விநாயகப்பெருமானை வழிபாடு செய்துவர மனதில் இருந்துவந்த குழப்பங்கள் அகலும்.

சிம்மம் :

குடும்ப உறுப்பினர்களிடம் சூழ்நிலைக்கேற்ப அனுசரித்து செல்வது நல்லது. மனதில் இருந்துவந்த கவலைகள் மற்றும் குழப்பங்கள் நீங்கி தெளிவுடன் காணப்படுவீர்கள். தனவரவுகளில் ஏற்ற, இறக்கமான சூழ்நிலைகள் உண்டாகும். புதிய முயற்சிகளில் எதிர்பார்த்த ஆதரவும், பாராட்டுகளும் காலதாமதமாக கிடைக்கும். மனதிற்கு நெருக்கமானவர்களிடம் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு மறையும். நீண்ட நேரம் கண் விழித்து பணியாற்றுவதை குறைத்து கொள்வது உடல் ஆரோக்கியத்திற்கு நன்மையை ஏற்படுத்தும். கோபமான பேச்சுக்களை குறைத்துக்கொண்டு நிதானத்துடன் செயல்படுவது உங்களின் மீதான நம்பிக்கையை அதிகப்படுத்தும்.

வழிபாடு :

வெள்ளிக்கிழமைகளில் மகாலட்சுமியை வழிபாடு செய்துவர தடைகள் விலகும்.

கன்னி :

மனதில் பலவிதமான குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும். புதிய முயற்சிகளில் தன்னம்பிக்கையுடனும், தைரியத்துடனும் செயல்படுவீர்கள். உடனிருப்பவர்களின் மூலம் தொழில் சார்ந்த உதவிகள் கிடைக்கும். உடன்பிறந்தவர்களை பற்றி புரிந்து கொள்வதற்கான தருணங்கள் உண்டாகும். சிலருக்கு எதிர்பாராத பயணங்களை மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். நீண்ட நாட்களாக மனதை உறுத்திக்கொண்டிருந்த கவலைகளுக்கு தெளிவும் புரிதலும் உண்டாகும். எதிர்பார்த்த தனம் சார்ந்த உதவிகள் காலதாமதமாக கிடைக்கும். ஏற்றுமதி மற்றும் இறக்குமதி சார்ந்த தொழிலில் இருப்பவர்கள் புதிய முதலீடுகளில் சற்று சிந்தித்து செயல்படுவது அவசியமாகும்.

வழிபாடு :

புதன்கிழமைகளில் பெருமாளை வழிபாடு செய்துவர வியாபாரம் தொடர்பான இன்னல்கள் குறையும்.

துலாம் :

வாழ்க்கைத்துணைவர் பற்றிய சிந்தனைகள் அதிகரிக்கும். நண்பர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் படிப்படியாக குறைந்து ஒற்றுமை ஏற்படும். இணையம் சார்ந்த பணிகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். ஆன்மிகம் தொடர்பான எண்ணங்களும், அதற்கான வாய்ப்புகளும் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் இருந்துவந்த இன்னல்கள் குறையும். மாணவர்கள் தெளிவான சிந்தனையுடன் கல்வியில் முன்னேறுவதற்கான தருணங்கள் சாதகமாக அமையும். உத்தியோக மாற்றம் தொடர்பான சிந்தனைகள் மனதில் அவ்வப்போது ஏற்பட்டு நீங்கும்.

வழிபாடு :

குலதெய்வத்தை வழிபாடு செய்துவர மகிழ்ச்சி உண்டாகும்.

விருச்சிகம் :

குழந்தைகளின் எண்ணங்களை அறிந்து அதற்கேற்ப செயல்படுவது நல்லது. மாணவர்களுக்கு கல்வியில் மந்தமான சூழ்நிலைகள் உண்டாகும். தொழில் தொடர்பான எதிர்பார்த்த கடன் உதவிகள் மற்றும் அரசு சார்ந்த உதவிகள் சிலருக்கு சாதகமாக அமையும். எதிர்பாராத புதிய நபர்களின் அறிமுகத்தின் மூலம் மனதில் மாற்றங்கள் உண்டாகும். பழைய நினைவுகளை குறைத்துக்கொள்வதன் மூலம் விரக்தி சார்ந்த எண்ணங்கள் குறையும். தந்தையின் ஆரோக்கியம் தொடர்பான செயல்களில் சற்று கவனத்துடன் இருக்க வேண்டும். வெளியூர் தொடர்பான பயணங்களை மேற்கொள்வீர்கள். முயற்சிகளில் இருந்துவந்த சோர்வுகள் நீங்கி தன்னம்பிக்கையுடன் செயல்படுவதற்கான தருணங்கள் உண்டாகும்.

வழிபாடு :

செவ்வாய்க்கிழமைகளில் முருகப்பெருமானை வழிபாடு செய்துவர முயற்சிகளில் இருந்துவந்த எதிர்ப்புகள் விலகும்.

தனுசு :

கணவன், மனைவிக்கிடையே இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒருவரை ஒருவர் புரிந்து கொள்வதற்கான தருணங்கள் உண்டாகும். மனதில் நினைத்த எண்ணங்களை செய்து முடிப்பதற்கான சூழ்நிலைகள் சாதகமாக அமையும். நெருக்கமானவர்களிடம் சிறு சிறு பிரச்சனைகளும், சந்தேக உணர்வுகளும் ஏற்பட்டு நீங்கும். கடினமான பேச்சுக்களை குறைத்துக்கொள்வது நல்லது. பணிபுரியும் இடத்தில் செயல்களில் வேகமும், பேச்சுக்களில் கடினமும் வெளிப்படும். பெண்களுக்கு ஆரோக்கியம் தொடர்பான விஷயங்களில் கவனம் வேண்டும். தகவல் மற்றும் பத்திரிக்கை சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு அலைச்சல்கள் அதிகரிக்கும்.

வழிபாடு :

வியாழக்கிழமைகளில் குருபகவானை வழிபாடு செய்துவர நன்மைகளும், மகிழ்ச்சியும் உண்டாகும்.

மகரம் :

மனதில் இருந்துவந்த கவலைகள் நீங்கி புத்துணர்ச்சியுடன் காணப்படுவீர்கள். எதிர்பாராத சுபச்செய்திகளின் மூலம் விரயங்களும், சேமிப்புகளும் குறையும். உயர் பதவிகளில் இருப்பவர்களின் அறிமுகங்கள் சிலருக்கு சாதகமான பலன்களை ஏற்படுத்தும். உடல் ஆரோக்கியத்திலும், உறவினர்களிடத்தில் கருத்துக்களை பரிமாற்றும் போதும் சற்று கவனத்துடன் இருக்க வேண்டும். வாகன மாற்றம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். புதிய மனை தொடர்பான விஷயங்களில் சற்று விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். வாழ்க்கைத்துணைவரின் மூலம் தொழில் சார்ந்த உதவிகள் கிடைக்கும்.

வழிபாடு :

பைரவரை வழிபாடு செய்துவர எல்லா பிரச்சனைகளும் சுமூகமாக முடிந்து குடும்பத்தில் அமைதி ஏற்படும்.

கும்பம் :

சுபகாரியங்கள் தொடர்பான செயல்பாடுகளில் இருந்துவந்த காலதாமதங்கள் படிப்படியாக குறையும். குடும்ப உறுப்பினர்களிடம் மனம்விட்டு பேசுவதன் மூலம் தெளிவான முடிவுகளை எடுக்க முடியும். பூர்வீக சொத்துக்களை மனதிற்கு விரும்பிய விதத்தில் மாற்றி அமைப்பதற்கான வாய்ப்புகள் உண்டாகும். எதிர்பாராத இடமாற்றங்களின் மூலம் மனதில் மாற்றங்களும், புத்துணர்ச்சியும் உண்டாகும். சமூகம் தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். நுட்பமான சிந்தனைகளின் மூலம் பாராட்டுகளை பெறுவீர்கள்.

வழிபாடு :

மாரியம்மனை வழிபாடு செய்துவர எதிர்ப்புகள் விலகும் மற்றும் காரிய வெற்றி உண்டாகும்.

மீனம் :

கடன் சார்ந்த உதவிகள் கிடைக்கும். மனதிற்கு விரும்பிய புதிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். தகவல் தொடர்பு சார்ந்த துறைகளில் இருப்பவர்கள் சற்று பொறுமையுடன் செயல்பட வேண்டும். நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்துவந்த தனவரவுகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அமையும். புதிய வேலை தொடர்பான முயற்சிகளை மேற்கொள்பவர்களுக்கு குடும்ப உறுப்பினர்களின் ஆதரவுகளும், நண்பர்களின் அறிமுகங்களும் புதிய மாற்றத்தை ஏற்படுத்தும். வித்தியாசமான முயற்சிகளின் மூலம் பலரின் பாராட்டுகளையும், ஆதரவையும் பெறுவீர்கள்.

வழிபாடு :

நரசிம்மரை வழிபாடு செய்துவர நினைத்த காரியங்கள் நிறைவேறும்.

கமலகண்ணன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...