வரலாற்றில் இன்று – 23.04.2021 உலக புத்தக தினம் மற்றும் உலக பதிப்புரிமை தினம்

 வரலாற்றில் இன்று – 23.04.2021 உலக புத்தக தினம் மற்றும் உலக பதிப்புரிமை தினம்

வாசித்தல், பதிப்பித்தல் மற்றும் பதிப்புரிமை போன்ற அறிவுசார் சொத்துகளான இவற்றை பாதுகாக்கும் வகையிலும் அவற்றை வளர்க்கும் நோக்கத்துடனும் யுனெஸ்கோ நிறுவனம் ஆண்டுதோறும் ஏப்ரல் 23ஆம் தேதியை உலக புத்தகம் மற்றும் பதிப்புரிமை தினமாக கொண்டாடுகிறது. யுனெஸ்கோவின் பொது மாநாடு 1995ஆம் ஆண்டு பாரீஸில் நடைபெற்றபோது இத்தினம் அறிவிக்கப்பட்டது.

வில்லியம் ஷேக்ஸ்பியர்

இன்று இவரின் நினைவு தினம்..!! எத்தனையோ மொழிகளில் எத்தனையோ இலக்கியங்கள் வந்தாலும் காலத்தால் அழியாமல் நிற்கும் ரோமியோ ஜூலியட்டை படைத்த வில்லியம் ஷேக்ஸ்பியர் 1564ஆம் ஆண்டு ஏப்ரல் 26ஆம் தேதி லண்டனில் பிறந்தார்.

இவர் லண்டனில் இருந்தபோது அலைக்கழித்த அந்த பிளேக் நோய்தான் பல அமரக் காவியங்களை படைக்க காரணம். 24 ஆண்டு இலக்கியப் பணியில் மொத்தம் 30க்கும் மேற்பட்ட நாடகங்களை எழுதினார்.

A Midsummer Night’s Dream‚ As You Like It‚ The Taming of the Shrew‚ The Merchant of Venice‚ Romeo and Juliet‚ Hamlet‚ Othello‚ King Lear‚ Julius Caesar‚ Antony and Cleopatra போன்றவை இவரது புகழ்பெற்ற நாடகங்கள். இன்றும் உயிரோவியங்களாக நம்மிடையே உலா வரும் படைப்புகளை தந்த இவர் 1616ஆம் ஆண்டு ஏப்ரல் 23ஆம் தேதி மறைந்தார்.

முக்கிய நிகழ்வுகள்

1938ஆம் ஆண்டு ஏப்ரல் 23ஆம் தேதி வசீகர குரல் கொண்டவரும், புகழ்பெற்ற திரைப்படப் பாடகியுமான எஸ்.ஜானகி ஆந்திராவின் குண்டூர் மாவட்டத்தில் பள்ளபட்லா என்ற ஊரில் பிறந்தார்.

1644ஆம் ஆண்டு ஏப்ரல் 23ஆம் தேதி புனித ஜார்ஜ் கோட்டை சென்னையில் கட்டப்பட்டது.

1966ஆம் ஆண்டு ஏப்ரல் 23ஆம் தேதி முதலாம் உலக தமிழாராய்ச்சி மாநாடு கோலாலம்பூரில் நிறைவடைந்தது.

கமலகண்ணன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...