வரலாற்றில் இன்று – 26.10.2020 கணேஷ் சங்கர் வித்யார்தி

 வரலாற்றில் இன்று – 26.10.2020 கணேஷ் சங்கர் வித்யார்தி

விடுதலைப் போராட்ட வீரரும், இந்திய பத்திரிக்கையாளருமான கணேஷ் சங்கர் வித்யார்த்தி 1890ஆம் ஆண்டு அக்டோபர் 26ஆம் தேதி உத்தரப்பிரதேச மாநிலத்தில் பிறந்தார்.

இவர் சிறுவயதிலிருந்தே உலக புகழ்பெற்ற எழுத்தாளர்களின் நூல்களைப் படித்து வந்தவர்,’ஹமாரி ஆத்மோசர்கதா’ என்ற தனது முதல் நூலை 16 வயதில் எழுதினார்.

அரசியலில் ஆர்வம் கொண்ட இவர் காந்திஜியை முதன்முறையாக 1916ஆம் ஆண்டு சந்தித்ததும், தேசிய இயக்கத்தில் தன்னை இணைத்துக்கொண்டார்.

விடுதலைப் போராட்டம், சமூகப் பொருளாதார புரட்சி, விவசாயிகள், ஜாதி, மதப் பிரச்சனைகள் குறித்து தனது இதழ்களில் எழுதி மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.

உத்தரப்பிரதேச சட்டசபையின் மேலவை உறுப்பினராக 1926ஆம் ஆண்டு முதல் 1929ஆம் ஆண்டு வரை பணியாற்றினார். எழுத்தையே ஆயுதமாக்கி எழுச்சிப் போராட்டம் நடத்திய இவர் 1931ஆம் ஆண்டு மறைந்தார்.

முக்கிய நிகழ்வுகள்

1947ஆம் ஆண்டு அக்டோபர் 26ஆம் தேதி முன்னாள் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சரான ஹிலாரி கிளிண்டன் அமெரிக்காவில் இலினாய்ஸ் என்ற இடத்தில் பிறந்தார்.

1957ஆம் ஆண்டு அக்டோபர் 26ஆம் தேதி மருத்துவத்திற்கான நோபல் பரிசு பெற்ற முதல் அமெரிக்கப் பெண்மணி கெர்டி கோரி மறைந்தார்.

1947ஆம் ஆண்டு அக்டோபர் 26ஆம் தேதி காஷ்மீர் மகாராஜா இந்தியாவுடன் காஷ்மீரை இணைக்கச் சம்மதித்தார்.

கமலகண்ணன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...