வரலாற்றில் இன்று – 01.09.2020 உலக கடித தினம்

 வரலாற்றில் இன்று – 01.09.2020 உலக கடித தினம்

ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 1ஆம் தேதி கடிதம் எழுதும் தினமாக உலக அளவில் கொண்டாடப்படுகிறது.

உலக கடித தினம் என்று அழைக்கப்படும் இந்த நாள் கையால் கடிதம் எழுதும் முறையை பாராட்டும் விதமாக கொண்டாடப்படுகிறது. உலக கடித தினம் என்பது ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த புகைப்படக் கலைஞர் ரிச்சர்ட் சிம்ப்கின் என்பவரால் 2014ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. இன்றைய கணிப்பொறி உலகில் கடிதம் எழுதுவது என்பது ஒரு தனிப்பட்ட அனுபவமாகும். எனவே அதனை கொண்டாடும் விதமாக இத்தினத்தை அறிமுகப்படுத்தினார்.

செம்பை வைத்தியநாத பாகவதர்

கர்நாடக இசை உலகில் கொடிகட்டிப் பறந்த செம்பை வைத்தியநாத பாகவதர் 1896ஆம் ஆண்டு செப்டம்பர் 1ஆம் தேதி கேரள மாநிலம் பாலக்காடு அருகேயுள்ள செம்பை என்ற கிராமத்தில் பிறந்தார்.

தஞ்சை இசை விழா, கரூர் சங்கீத திருவிழா என தமிழகத்தின் பல இடங்களிலும் கச்சேரி நடத்தும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது. பல

சபாக்கள், இசை விழாக்களில் பாடினார். இவருக்கு ‘காயன காந்தர்வ’,’சங்கீத கலாநிதி’,’பத்ம பூஷண்’ ஆகிய விருதுகள் வழங்கப்பட்டுள்ளது. சங்கீத உலகில் அழியாப் புகழ்பெற்ற செம்பை வைத்தியநாத பாகவதர் தனது 78வது வயதில் (1974) மறைந்தார். இவரது நினைவைப் போற்றும் விதமாக 1996ஆம் ஆண்டு அஞ்சல்தலை வெளியிடப்பட்டது. ஆண்டுதோறும் குருவாயூர் கிருஷ்ணன் கோவிலில் இசை விழா நடத்தப்பட்டு, அதில் தேர்ந்தெடுக்கப்படும் கலைஞருக்கு ‘செம்பை விருது’ வழங்கப்படுகிறது.

புலித்தேவர்

இந்திய விடுதலைப் போராட்டத்தை தமிழகத்தில் தொடங்குவதற்கு காரணமாயிருந்த முன்னோடி புலித்தேவர் 1715ஆம் ஆண்டு செப்டம்பர் 1ஆம் தேதி பிறந்தார். இவருடைய இயற்பெயர் ‘காத்தப்பப் பூலித்தேவர்’ என்பதாகும். ‘பூலித்தேவர்’ என்னும் பெயர் ‘புலித்தேவர்’ என்று அழைக்கப்பட்டது.

இந்திய விடுதலை வரலாற்றில் ‘வெள்ளையனே வெளியேறு’ என்று முதல் முறையாக 1751ஆம் ஆண்டில் வீர முழக்கமிட்டவர். இதனால் இந்தியாவின் முதல் விடுதலைப்போர் எனக் கருதப்படும் சிப்பாய்க்கலகத்திற்கு (1857) முன்னோடியாகக் கருதப்படுகிறார்.
தமிழ்நாடு அரசு, திருநெல்வேலி மாவட்டம் சிவகிரி வட்டம் பகுதியிலுள்ள நெல்கட்டும்செவல் எனும் ஊரில் புலித்தேவர் நினைவைப் போற்றும் வகையில் புலித்தேவர் நினைவு மாளிகை, திருமண மண்டபம் ஆகியவைகளை அமைத்துள்ளது.

முக்கிய நிகழ்வுகள்

1877ஆம் ஆண்டு செப்டம்பர் 1ஆம் தேதி தமிழரசி குறவஞ்சி, கருணீக புராணம் போன்ற நூல்களின் ஆசிரியர் தமிழறிஞர் அ.வரதநஞ்சைய பிள்ளை பிறந்தார்.

கமலகண்ணன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...