இன்றைய தினப்பலன்கள் (01.9.2020) – ஜோதிடர் அ.மோகன்ராஜ்

 இன்றைய தினப்பலன்கள் (01.9.2020) – ஜோதிடர் அ.மோகன்ராஜ்

மேஷம் :

பழக்கவழக்கங்களில் சில மாற்றங்கள் நேரிடலாம். எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். தாயின் மீது அன்பும், அக்கறையும் மேலோங்கும். பூர்வீகம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்
அஸ்வினி : மாற்றமான நாள்.
பரணி : அன்பு அதிகரிக்கும்.
கிருத்திகை : சிந்தனைகள் மேம்படும்.

ரிஷபம் :

அலைச்சல்கள் தொடர்பான பணிகளில் புதுவிதமான அனுபவம் கிடைக்கும். மனதில் இருந்துவந்த வருத்தங்கள் நீங்கி மகிழ்ச்சி உண்டாகும். வழக்கு தொடர்பான பணிகளில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும். மற்றவர்களை பற்றிய எதிர்மறை எண்ணங்களை விடுத்து நேர்மறை எண்ணங்களுடன் செயல்படுவது நன்மை அளிக்கும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்பு
கிருத்திகை : அனுபவம் கிடைக்கும்.
ரோகிணி : மகிழ்ச்சி உண்டாகும்.
மிருகசீரிஷம் : எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும்.

மிதுனம் :

உத்தியோகத்தில் எதிர்பார்த்த பதவிகள் கிடைக்கும். நண்பர்களின் வருகையால் மகிழ்ச்சியான தருணங்கள் உண்டாகும். கலை நுட்பமான செயல்பாடுகளின் மீது ஆர்வம் அதிகரிக்கும். நெருக்கமானவர்களின் விருப்பங்களை அறிந்து நிறைவேற்றி மகிழ்வீர்கள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்
மிருகசீரிஷம் : பதவிகள் கிடைக்கும்.
திருவாதிரை : மகிழ்ச்சியான நாள்.
புனர்பூசம் : ஆர்வம் அதிகரிக்கும்.

கடகம் :

சுயதொழில் தொடர்பான செயல்பாடுகளில் நிதானம் வேண்டும். செலவுகளின் தன்மைகளை அறிந்து செயல்படுவதன் மூலம் நன்மை உண்டாகும். உலகியல் நடவடிக்கைகளின் மூலம் மனதில் மாற்றங்கள் ஏற்படும். இலக்கியம் தொடர்பான பணிகளில் இழுபறியான சூழல் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் சிவப்பு
புனர்பூசம் : நிதானம் வேண்டும்.
பூசம் : மாற்றங்கள் ஏற்படும்.
ஆயில்யம் : இழுபறியான நாள்.

சிம்மம் :

தர்ம காரியங்கள் தொடர்பான சிந்தனைகளும், செயல்பாடுகளும் அதிகரிக்கும். பெரியவர்களின் மூலம் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். சிறுகதைகளின் மூலம் பழக்கவழக்கங்களில் சில மாற்றங்கள் ஏற்படும். ஆராய்ச்சி தொடர்பான பணிகளில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்
மகம் : சிந்தனைகள் அதிகரிக்கும்.
பூரம் : அனுகூலமான நாள்.
உத்திரம் : எண்ணங்கள் ஈடேறும்.

கன்னி :

இளைய உடன்பிறப்புகளிடம் சூழ்நிலைக்கு ஏற்றவாறு அனுசரித்து செல்லவும். உயர் அதிகாரிகளிடம் பொறுமையுடன் நடந்து கொள்ள வேண்டும். திறமைக்கேற்ற அங்கீகாரம் காலதாமதமாக கிடைக்கும். பயணங்களின் போது உடைமைகளில் கவனம் வேண்டும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
உத்திரம் : அனுசரித்து செல்லவும்.
அஸ்தம் : பொறுமை வேண்டும்.
சித்திரை : காலதாமதமாகும்.

துலாம் :

கணவன், மனைவிக்கிடையே புரிதலும், அன்பும் மேம்படும். வாக்குவன்மையின் மூலம் அனைவரிடத்திலும் பாராட்டப்படுவீர்கள். மனதில் புதுவிதமான சிந்தனைகள் தோன்றும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வெளியூர் தொடர்பான பயணங்களில் இருந்துவந்த காலதாமதங்கள் அகலும்.

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு
சித்திரை : அன்பு மேம்படும்.
சுவாதி : பாராட்டுகள் கிடைக்கும்.
விசாகம் : சிந்தனைகள் தோன்றும்.

விருச்சிகம் :

சக ஊழியர்களின் மூலம் அனுகூலமான சூழ்நிலைகள் உண்டாகும். உத்தியோகம் தொடர்பான செயல்பாடுகளில் விவேகத்துடன் செயல்பட வேண்டும். பயணங்களின் மூலம் புதுவிதமான அனுபவம் கிடைக்கும். விவசாயம் சார்ந்த பணிகளில் மேன்மை உண்டாகும். நெருக்கமானவர்களிடம் தேவையற்ற கருத்துக்கள் பகிர்வதை குறைத்து கொள்ளவும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
விசாகம் : விவேகம் வேண்டும்.
அனுஷம் : அனுபவம் கிடைக்கும்.
கேட்டை : மேன்மையான நாள்.

தனுசு :

குழந்தைகளின் செயல்பாடுகளில் கவனம் வேண்டும். சமூக பணிகளில் இருப்பவர்களுக்கு பலதரப்பட்ட மக்களின் தொடர்புகள் கிடைக்கும். முயற்சிக்கேற்ப முன்னேற்றம் உண்டாகும். எதிர்பாராத சில வாய்ப்புகளின் மூலம் மாற்றங்கள் ஏற்படும். பூர்வீக சொத்துக்களை மாற்றி அமைப்பதற்கான வாய்ப்புகள் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்
மூலம் : கவனம் வேண்டும்.
பூராடம் : முன்னேற்றம் ஏற்படும்.
உத்திராடம் : வாய்ப்புகள் உண்டாகும்.

மகரம் :

உறவினர்களின் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். பொருளாதாரம் தொடர்பான செயல்பாடுகளில் மேன்மை உண்டாகும். இணைய வர்த்தகம் தொடர்பான பணிகளில் ஆர்வம் அதிகரிக்கும். தொழில் அபிவிருத்திக்கான சிந்தனைகள் மற்றும் முயற்சிகள் மேம்படும்.

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
உத்திராடம் : மகிழ்ச்சியான நாள்.
திருவோணம் : மேன்மை உண்டாகும்.
அவிட்டம் : முயற்சிகள் மேம்படும்.

கும்பம் :

வெளியூர் தொடர்பான பயணங்கள் கைகூடும். தொழில் சார்ந்த முயற்சிகள் அதிகரிக்கும். தூக்கமின்மையினால் ஆரோக்கியம் குறைவு படும். புத்திசாலித்தனமான செயல்பாடுகளின் மூலம் இழுபறியான செயல்களை செய்து முடிப்பீர்கள். தற்பெருமை சார்ந்த செயல்களை குறைத்து கொள்வதன் மூலம் நன்மை உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நலீ ம்
அவிட்டம் : பயணங்கள் கைகூடும்.
சதயம் : முயற்சிகள் அதிகரிக்கும்.
பூரட்டாதி : இழுபறிகள் நீங்கும்.

மீனம் :

வாக்குறுதிகளை நிறைவேற்றி மகிழ்வீர்கள். முக்கிய பிரமுகர்களின் அறிமுகத்தின் மூலம் தொழில் சார்ந்த உதவிகள் கிடைக்கும். அரசு தொடர்பான காரியங்களில் நிதானத்துடன் செயல்பட வேண்டும். விலை உயர்ந்த பொருட்களை கையாளும் பொழுது கவனத்துடன் இருக்க வேண்டும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்
பூரட்டாதி : வாக்குறுதிகளை நிறைவேற்றுவீர்கள்.
உத்திரட்டாதி : உதவிகள் கிடைக்கும்.
ரேவதி : நிதானம் வேண்டும்.

கமலகண்ணன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...