இன்றைய தினப்பலன்கள் (23.08.2020) – ஜோதிடர் அ.மோகன்ராஜ்

 இன்றைய தினப்பலன்கள் (23.08.2020) – ஜோதிடர் அ.மோகன்ராஜ்

மேஷம் :

மனதில் புதுவிதமான எண்ணங்கள் தோன்றும். நண்பர்களுடன் கேளிக்கைகளில் ஈடுபட்டு மனம் மகிழ்வீர்கள். சம வயதினரிடம் கவனத்துடன் இருக்கவும். பணி தொடர்பான அலைச்சல்கள் அதிகரிக்கும். புதிய வீடு, மனை வாங்குவதற்கான கடன் உதவிகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
அஸ்வினி : எண்ணங்கள் தோன்றும்.
பரணி : அலைச்சல்கள் அதிகரிக்கும்.
கிருத்திகை : உதவிகள் கிடைக்கும்.

ரிஷபம் :

பொதுக்கூட்டப் பேச்சுக்களில் ஆதரவான சூழல் உண்டாகும். தர்க்கம் புரிவதன் மூலம் எண்ணிய எண்ணங்கள் ஈடேறும். மனதில் ஒருவிதமான பய உணர்வு உண்டாகும். உத்தியோகஸ்தர்கள் பிறரை நம்பி செயல்பட வேண்டாம். போட்டிகளில் பங்கேற்று பாராட்டப்படுவீர்கள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்
கிருத்திகை : ஆதரவான நாள்.
ரோகிணி : எண்ணங்கள் ஈடேறும்.
மிருகசீரிஷம் : பாராட்டப்படுவீர்கள்.

மிதுனம் :

தூர தேச பயணங்களில் இருந்துவந்த சிக்கல்கள் குறையும். தொழில் சம்பந்தமான முக்கிய நபரை சந்திக்கும் வாய்ப்புகள் உண்டாகும். தாய் சம்பந்தப்பட்ட கவலைகள் மேலோங்கும். பெருந்தன்மையான செயல்பாடுகளால் உங்களின் மீதான மதிப்புகள் உயரும். செயல்பாடுகளில் சிறு சிறு தடைகள் ஏற்பட்டாலும் சிறப்பாக செய்து முடிப்பீர்கள்.

அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
மிருகசீரிஷம் : சிக்கல்கள் குறையும்.
திருவாதிரை : வாய்ப்புகள் உண்டாகும்.
புனர்பூசம் : மதிப்புகள் உயரும்.

கடகம் :

உயர் அதிகாரிகளிடம் நட்பு உண்டாகும். குடும்ப உறுப்பினர்களின் வருகையால் மகிழ்ச்சி அடைவீர்கள். சிலருக்கு புதிய ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். தனவரவில் இருந்துவந்த தடைகள் நீங்கும். புதிய வர்த்தகம் சம்பந்தமான முதலீடுகள் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
புனர்பூசம் : நட்பு உண்டாகும்.
பூசம் : மகிழ்ச்சியான நாள்.
ஆயில்யம் : முதலீடுகள் அதிகரிக்கும்.

சிம்மம் :

குடும்ப உறுப்பினர்களின் மூலம் சுபச்செய்திகள் கிடைக்கும். தொழில் துறையில் ஏற்பட்ட போட்டிகளை சமாளிப்பீர்கள். தலைமை பதவியில் உள்ள அதிகாரிகளிடம் சற்று நிதானமாக நடந்து கொள்ளவும். சொத்துக்கள் தொடர்பான விஷயங்களில் எண்ணிய முடிவுகள் கிடைக்கும். வாகனப் பயணங்களில் நிதானம் வேண்டும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
மகம் : சுபச்செய்திகள் கிடைக்கும்.
பூரம் : நிதானம் வேண்டும்.
உத்திரம் : முடிவுகள் கிடைக்கும்.

கன்னி :

பங்குதாரர்களின் மூலம் அனுகூலம் உண்டாகும். எடுத்துரைக்கின்ற பேச்சுத்திறனால் இலாபம் கிடைக்கும். திட்டமிட்ட பணிகளை இனிதே முடித்து வெற்றி காண்பீர்கள். உத்தியோகஸ்தர்களின் மீதான நம்பிக்கை அதிகரிக்கும். நண்பர்களின் மூலம் தொழிலை அபிவிருத்தி செய்வீர்கள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
உத்திரம் : அனுகூலம் உண்டாகும்.
அஸ்தம் : வெற்றி கிடைக்கும்.
சித்திரை : நம்பிக்கை அதிகரிக்கும்.

துலாம் :

வாழ்க்கை துணை சார்ந்த உறவுகளிடம் எதிர்பார்த்த காரியங்களில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். சிலருக்கு திடீர் பொருள் வரவிற்கான வாய்ப்புகள் உண்டாகும். மனக்கவலைகள் குறைவதற்கான சூழல் ஏற்படும். கேளிக்கைகளில் ஈடுபட்டு மனம் மகிழ்வீர்கள். புதிய நபர்களின் வருகையால் சுபவிரயங்கள் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
சித்திரை : வாய்ப்புகள் உண்டாகும்.
சுவாதி : மனக்கவலைகள் குறையும்.
விசாகம் : மனம் மகிழ்வீர்கள்.

விருச்சிகம் :

வேளாண்மையில் ஏற்பட்ட தேக்கநிலை நீங்கும். இடையூறுகள் நீங்கி சேமிப்புகள் அதிகரிக்கும். பிள்ளைகளால் ஆதாயம் உண்டாகும். எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். புதிய வேலை சம்பந்தமான முயற்சிகளில் நற்செய்தி உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்
விசாகம் : தேக்கநிலை நீங்கும்.
அனுஷம் : சேமிப்புகள் அதிகரிக்கும்.
கேட்டை : உதவிகள் கிடைக்கும்.

தனுசு :

நண்பர்களின் சந்திப்பு மனமகிழ்ச்சியை அளிக்கும். நீர் சம்பந்தப்பட்ட பணிகளில் எண்ணிய இலாபம் கிடைக்கும். அறக்காரியங்களுக்கு தேவையான உதவிகளை செய்து மனம் மகிழ்வீர்கள். ஆடை, ஆபரணங்கள் வாங்குவதற்கான சூழல் உண்டாகும். சங்கீத பயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
மூலம் : மகிழ்ச்சியான நாள்.
பூராடம் : இலாபம் கிடைக்கும்.
உத்திராடம் : முன்னேற்றம் ஏற்படும்.

மகரம் :

இழுபறியாக இருந்துவந்த செயலை செய்து முடிப்பீர்கள். தொழிலை அபிவிருத்தி செய்வதற்கான முயற்சிகள் கைகூடும். தொழில் சார்ந்த முயற்சிகளில் தனலாபம் உண்டாகும். பொது செயல்களின் மூலம் கீர்த்தி உண்டாகும். மனை தொடர்பான விவகாரங்களில் இருந்துவந்த பிரச்சனைகள் நீங்கும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நலீ ம்
உத்திராடம் : இழுபறிகள் நீங்கும்.
திருவோணம் : முயற்சிகள் கைகூடும்.
அவிட்டம் : கீர்த்தி உண்டாகும்.

கும்பம் :

தந்தையுடன் இருந்துவந்த பிரச்சனைகள் குறையும். மனதில் புதுவிதமான ஆராய்ச்சி சார்ந்த எண்ணங்கள் தோன்றும். அனைவரிடத்திலும் மரியாதைகள் உயரும். துணிச்சலாக சில முடிவுகளை எடுப்பீர்கள். புதிய செயல்திட்டங்களை உருவாக்குவீர்கள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
அவிட்டம் : பிரச்சனைகள் குறையும்.
சதயம் : எண்ணங்கள் தோன்றும்.
பூரட்டாதி : மரியாதைகள் உயரும்.

மீனம் :

மற்றவர்களின் செயல்களில் தலையிடாமல் இருப்பது நன்மை அளிக்கும். புதிய நபர்களிடம் தேவையற்ற கருத்துக்களை பகிர்வதை தவிர்க்கவும். உயர் அதிகாரிகளிடம் நிதானப்போக்கை கடைபிடிக்கவும். குடும்ப உறுப்பினர்களிடம் சூழ்நிலைக்கு ஏற்றவாறு அனுசரித்து செல்லவும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்
பூரட்டாதி : தலையிடுவதை தவிர்க்கவும்.
உத்திரட்டாதி : நிதானம் வேண்டும்.
ரேவதி : அனுசரித்து செல்லவும்.

கமலகண்ணன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...