முடிவில்லா பயணம்… | கவிஞர். கஷ்மீர் ஜோசப்
கரையின் மீது
அலைக் கொண்ட தீராத
காதலை,
முடிவற்ற
முத்ததால்
கரையை தீண்டும்
அலைகள் போல,
ஓயாமல் முத்தமிட்டு
கொள்கின்றன
நமது காதல் பயணங்களும்,
நினைவுகளும்…..
இளமைக் கால காதலில்,
இறுக்கிப் பிடித்த கரங்களோடு
நடைபோட்ட
கடற்கரையில்,
கொஞ்சம் இதமாய் பிடித்து,
மார்போடு அணைத்து,
நினைவூட்டிக் கொள்கிறோம்,
நம் இளமைக் காதலின்
நினைவுகளை,
நம் முதுமையில்.
இளமை கடந்து,
முதுமை தொட்டு,
நரை தட்டி போயினும்,
முதல் பார்வையின் ஸ்பரிசமும்,
முதல் அரவணைப்பின் துடிப்பும்,
முதல் முத்தத்தின் இனிப்பும்,
தலைகோதிய விரல்களின் இதமும்
இன்றுவரை திளைத்து
நிற்கிறது நம் காதலில்.
முதுமை எல்லையில் நாம் இருந்தும்,
காதலில் இளமை இன்னும்
முடியவில்லை போலும்.
ஆயுள் முடியும் முற்றத்திலும்,
நம்மிடம்
ஆனந்தம் திளைத்து,
நிலைத்து போனது.
ஆத்மார்த்தமான நம் காதலுக்கு
ஆயுள் முடிய
இன்னும் பல ஜென்மம்
வேண்டுமடி…
நம் காதல் என்னவென்று
உணர்த்துவதற்க்கு,
அழகியே, நீ மீண்டும்
எனக்காக ஏழு ஜனனம்
எடுக்க வேண்டுமடி,
உன்னை ரசித்து லயித்திடவே
நான் பிறந்திட வரம் வேண்டுமடி.
நீ நான்,
நான் நீ,
நாம் நம் காதல்.
வேறென்ன வேண்டும்,
காதலே பொறாமைக்
கொள்ளும் அளவிற்க்கு
உன்னை காதலிக்க
நீ கிடைத்ததே போதுமடி எனக்கு..
தூவலாய் நான்,
ஏடுகளாய் நீ,
கவிதைகளாக நம் காதல்.
வாசகர்களாக இவ்வுலகம்….