நக இடுக்கில் தோட்டாக்கள் – மு.ஞா.செ.இன்பா

 நக இடுக்கில்  தோட்டாக்கள் – மு.ஞா.செ.இன்பா

கலைக்கதிரவன் மேகத்தில் முகம் கழுவி,வான கண்ணாடியில் அழகு பார்த்துக் கொண்டிருந்தான்..

அடுக்குமாடி குடியிருப்பில் ஆறாவது தள வீட்டில் கணவரின் தோள் மீது ,தலை சாய்த்து தூங்கி கொண்டிருந்த சினேகா,ஜன்னலின் வழியாக களவுப் பார்வை பார்க்க எத்தனித்து கொண்டிருந்த ஒளி கிற்றுகளால் தீண்டப்பட்டு கண் விழித்து பார்த்தாள்..

இரவில் நடந்த மோக விளையாட்டின் கடைசி எச்சமாக, பனித்துளிகள் ஜன்னல் கண்ணாடியில் பருவ பெண்ணின் தோளில் தஞ்சமடைந்து கிடக்கின்ற துப்பட்டா நழுவது போல ,மேலிருந்து கீழாக நழுவி அழகியல் பேசிக் கொண்டிருந்தது.

ஒளி கிற்றுகள்,கமல் பாணியில் இதழோடு இதழ் முத்தத்தை,பனித்துளிகளுக்கு கொடுக்க ,அந்த இன்பதுண்டலில் வர்ண ஜாலங்கள் பனித்துளிகளின் மேனியாயின ..

அழகின் முப்பரிமாண காட்சிகள் சினேகாவின் மனதில் மெல்லியதோர் இசையை எழுப்ப, ஆனந்தத்தில் கட்டுண்டவள்,தன் கருவறை குழந்தை வரை எதிரொலிப்பதை உணர்ந்தாள்.குழந்தை அசைந்து நானும் ரசித்தேன் என்பதை சொல்லாமல் சொன்னது .

கணவரின் தோளில் மயில் தொகையென விரிந்து கிடந்த தன் கூந்தலை அள்ளி முடித்தபடி, மெதுவாக எழுந்த சினேகாவை,ஒரு கரம் இறுக பற்றிக் கொண்டது ,அந்த கரத்தின் சுகம் அவள் அறிந்து இருந்த ஒன்றுதான் ..

இன்னும் பத்து நாட்களுக்குள் போட்டிக்கு ஆள் வர போகுது ,இந்த ரொமான்ஸ் எல்லாம் எங்க போகும்னு பார்ப்போம் .என காதலில் முகம் சிவந்தபடி ,கணவனின் கரத்தை,வேண்டும் என்ற நோக்கில் வேண்டாதபடி விலக்கி விட்டாள்.எல்லா விடயத்திலும் இருபொருள் எழுதி பயணிப்பது பெண்களின் கலை என்பது ஆண்களுக்கு புரியாத விடயம்தானே ..

ஜன்னல் வழியாக பரந்து கிடந்த சென்னையை பார்த்தாள்..எதை மக்கள் தொலைத்துக் கொண்டு தேடுகிறார்கள் என்பது புலனாகவில்லை .அதிகாலையில் அவசரம் அவசரமாக இயங்க தொடங்கி இருந்தார்கள் .

எதிர் வீட்டு அடுக்கு மாடி குடியிருப்பில்,பால்கனியில் பறவைகளுக்கு இரையை கையில் வைத்துக் கொண்டு,வயதான பெண்மணி வானத்தை பார்த்துக் கொண்டு இருந்தாள.அவளுக்கு தெரியவில்லை போலும் விஞ்ஞான வளர்ச்சி இயற்கையின் நடைமுறைகளை சுனாமி போல சுருட்டிக் கொண்ட விடயம் .பறவைகள் பாதைகளை மாற்றி இருந்தால் ஏமாற்றம் அவளுக்கு ..

காதோரம் இளம் சூடு பரவுவதை உணர்ந்த சினேகா திரும்பி பார்த்தாள் ஞானவின் மீசை,அவள் காதோரம் விளையாடிய கூந்தலில் களவியல் நடத்த முயற்சித்து கொண்டிருந்தது ..

டேய்….திருட்டுப்பயலே …ஏன்டா இவ்வளவு பைத்தியமா இருக்கே பெண்டாட்டி மேல அன்பு வைக்கணும் அதுக்காக இப்படியா ..என்கிட்ட ஒரு முறையாவது கோப படுடா ….ஏக்கமா இருக்கு என்ற படி அவன் கையை பிடித்துக் கொண்டு ..டேய் எரும நான் லக்கிடா நீ கிடைக்க …

சினேகாவின் காதோரம் அதே வெப்பசூட்டில் முத்தத்தை கொடுத்து விட்டு கட்டிலில் துள்ளி குதித்து போய் விழுந்தான்.பட்டாம் பூச்சி சிறகு அடிப்பது போல குறுகுறுவென ஓடிடும் உன் கண்கள்,கட்டி பிடிடானு வம்பு செய்ய .நான் என்னடி செய்ய முடியும்.காலையில் தாண்டி பெண்கள் ரொம்ப அழகாய் தெரிவாங்க ..

அப்போ நான் மத்த நேரம் அழகு இல்லியா …செல்லமாக அடிக்க ஓடினாள். இதுதான் சமயம் என்று கட்டி பிடித்து கொண்டான் ..சரி விடுடா போதும் அய்யாவுக்கு எப்போவும் மூடுதான், உனக்கு காபி கொண்டு வரேன் நீ பிரெஷ் ஆகிட்டு வா என்ற படி கிச்சனை நோக்கி சென்றாள் .

பால் பாத்திரத்தை அடுப்பில் வைத்து ஸ்டவ்வை பற்ற வைத்த அவள் மனதில் ஞானவை காதலித்த அந்த நாட்கள் திரைப்படம் போல ஓட தொடங்கியது. பாரதிராஜாவின் கரகரப்பான குரலில் என் இனிய தமிழ் மக்களே என்ற அறிமுகம் இல்லாமல்,அலைகள் ஓயாத கதையை கொண்டு வந்தது.

இரு சக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணியாமல் பயணித்த கல்லூரி மாணவி,சாலையின் ஓரமாக வைத்து இருந்த கட்சி பேனர் விழுந்து மரணத்தை தழுவி விட்டாள்.காவல் துறையின் மெத்தனத்தால் இது போன்ற விபத்துகள் நடைபெற காரணமாகிறது,எனவே ஹெல்மெட் அணியாமல் இரு சக்கர வாகனம் ஓட்டுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நீதி மன்றம் உத்தரவு பிறப்பிக்க,காவல்துறை அதிக கெடுபிடிகளை கட்டவிழ்த்து,ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டுவோர்களை விரட்டி பிடித்துக்கொண்டிருந்தது .

பேனர் வைத்த கட்சிக்காரர்களை நீதிமன்றம் ஒன்றும் செய்ய வில்லையா ? என்ற உங்கள் மனக்குரல் கேட்கிறது ..என்ன செய்ய ? ஜனநாயக நாட்டில் இருக்கிறோம்.சட்டத்தின் கோணம் இது தான்.

தோழியுடன் இரு சக்கர வாகனத்தில் வந்து கொண்டு இருந்த சினேகா,தூரத்தில் ஹெல்மெட் போடாதவர்களை காவல்துறை பிடித்துக் கொண்டு இருப்பதை பார்த்து ..சே. இன்னைக்கு போய் ஹெல்மெட் போடாமல் வந்து விட்டோமே என்று மனதிற்குள் நொந்துக் கொண்டு தோழியை திரும்பி பார்த்தாள் .

ஏய் ..பேசுமா இறங்கி வண்டியை உருட்டிக்கிட்டு போவோம் ,போலீஸ் நிக்கிற இடம் தாண்டின உடன் ஏறி பறந்திறலாம் என்ற தோழியின் யோசனை அவளுக்கு சரியென பட்டது . இருவரும் இறங்கி வண்டியை உருட்டிக் தொடங்கினர்

தீடீர் என்று இரு சக்கர வாகனம் ஓன்று அவர்கள் அருகில் வந்து நின்றது மேடம் என்ன பெட்ரோல் இல்லாம தள்ளிக்கிட்டு போறிங்களா ..?வண்டியிலேயே ஏறி உக்காருங்க ..நான் டோப் பண்ணுறேன் .பக்கத்திலதான் பெட்ரோல் பங்க் இருக்கு என்றான் ஒருவன் ..சினேகாவிற்கு தர்ம சங்கடம் . தோழி நமட்டு சிரிப்பு சிரித்து கொண்டாள்

எயிட்டிஸ் நடிகர் முரளி போல இருந்த அவன் ,கருப்பாக இருந்தாலும் கலையாகதான் இருந்தான்,ஏறுங்க என்று அவன் நிர்பந்தம் தொடர சினேகா வண்டியில் ஏறி உட்கார்ந்து கொண்டாள் . நான் நடந்து பங்கிற்கு வரேன் என்ற தோழியை சி .. வண்டியில் ஏறுடி என்று அதட்ட அவளும் ஏறி கொண்டாள் ..

அவர்களின் வண்டியை டோப் செய்து பெட்ரோல் பங்கு வரை அவன் கொண்டு வந்து விட்டான் .கிளம்பும் போது என் பெயர் ஞானா..நான் போலீஸில் இருக்கிறேன் என்று சொல்லி விட்டு வண்டியை வேகமாக ஒட்டி போனான்.சினேகாவின் மனதில் அவன் முகம் இருக்கை போட்டது …

அதன் பின் சினேகா செல்லும் இடமெல்லாம் கண்ணில்படுவான்.ஒருநாளும் அவளிடம் பேசியது கிடையாது.ஏன் அவளை திரும்பி கூட பார்த்ததும் கிடையாது ..அவள் போகும் போது அவளை கடந்து போவான்.இல்லை அவள் கண்ணில் தெரியும்படி எங்காவது நிற்பான் .

இவன் போலீஸ் தானா என்ற சந்தேகம் சினேகாவிற்கு வர,அவனை குறித்து விசாரிக்க ஆரம்பித்தாள்.எந்த தகவலும் கிடைக்கவில்லை

அன்று விடுமுறை என்பதால்,வீட்டில் இருந்த சினேகாவிற்கு நேரம் போகவில்லை.டி .வி.யில் ஒவ்வொரு சேனலாக மாற்றி பார்த்துக் கொண்டு இருந்தாள்.எதேச்சையாக சன் நியூஸ் வந்த போது அந்த காட்சியை பார்த்தாள்.அவளால் நம்ப முடியவில்லை

எத்திராஜ் கல்லூரி மாணவிகள் சிலருக்கு போதை மருந்து ஆசை காட்டி,பாலியல் கொடுமை செய்த ஆளும் கட்சி பிரமுகரின் மகனை இன்ஸ்பெக்டர் ஞானா பல நாள் தேடுதல் வேட்டை நடத்தி ஆதாரத்துடன் பிடித்தார்,என்ற செய்தி ஓடிக் கொண்டு இருந்தது.

போலீஸ் உடையில் அவன் கெத்தாக இருந்தான் .தோழிக்கு போன் போட்டு டீவியை பார்க்க சொல்ல .ஏய் நானும் பார்த்துக்கிட்டு தாண்டி இருக்கேன் ,உங்காளு சூப்பரா இருக்காண்டி என்று தோழி சொல்ல .சினேகாவின் மனதில் சின்ன மகிழ்வு ..

காலையில் வேலைக்கு செல்ல தயார் ஆகி கொண்டு இருந்த சினேகாவின் வீட்டின் முன் பைக் வந்து நிற்கும் சத்தம் கேட்க ,ஜன்னல் வழியாக எட்டி பார்த்தாள்,ஞானவும் இன்னொருவனும் …..

வேகமாக வீட்டின் முன்பகுதிக்கு ஓடோடி வந்தாள்.அவளை பார்த்த ஞானா பார்க்காத மாதிரி காட்டிக் கொண்டு எதிர் வீட்டில் எதையோ கேட்டுக் கொண்டு இருந்தான்.சினேகாவிற்கு கோபம் பொத்து கொண்டு வர ,வேகமாக வீட்டின் உள்ளே சென்று கதவை அடைத்தாள்.ஓசை எதிர் வீடுவரை எதிரொலித்தது.அதற்கு பின் ஒரு மாத காலமாக ஞானா அவள் கண்ணில் தென்படவே இல்லை ..தினமும் அவள் விழிகள் அவனை தேடும்.ஆனால் …?

ஏண்டி! நாளைக்கு நீ வேலைக்கு போக வேண்டாம் உன்னை பெண்பார்க்க வருகிறார்கள் என்று அம்மா சொல்ல என்ன சொல்லுவது என்று தெரியவில்லை .ம்ம் என்று தலையை ஆட்டிக் கொண்டாள் ..

மறுநாள் அம்மாவின் நிர்பந்தத்திற்காக வேண்டா வெறுப்பாக அலங்காரம் செய்து கொண்ட அவள்,மாப்பிளை வீட்டார் வராமல் இருக்க வேண்டும் என்று ஆண்டவனை வேண்டி கொண்டாள் .அவளின் வேண்டுதலை இறை கேட்டுவிட்டான் போலும் மாப்பிள்ளை வீட்டார் வர காலதாமதம் ஆகி கொண்டே இருக்க,அம்மாவின் முகத்தில் டென்சன்.

எதிர் வீட்டு சிறுமி கையில் சின்ன மீன் தொட்டியோடு வீட்டிற்குள் நுழைந்தாள்.அக்கா உங்கிட்ட கொடுக்க சொல்லி இந்த தொட்டியை ஒரு அங்கிள் கொடுத்தார் என்று அவள் நீட்ட தொட்டியினுள் மீன் ஜோடி ஓடி கொண்டு இருந்தது,நீரின் அசைவில் தொட்டியின் ஓரத்தில் குட்டியாக எழுதி இருந்த எழுத்துக்கள் முகம் காட்ட உற்று பார்த்தாள் ..

பெண் பார்த்து விட்டேன் பிடித்து இருக்கிறது என்ற வார்த்தைகள் ..சே …என்ற வெறுப்போடு தொட்டியை கீழே போட்டு விடலாமா என்று நினைத்த போது ,மீனின் வாலில் ஏதோ இருப்பதை பார்த்தாள் …அதில் ஞா என்று ஒரு மீனின் வாலிலும் ,னா என்று இன்னொரு மீனின் வாலிலும் பதியபட்டு இருந்தது …

அம்மா என்று கூப்பிடபடி ,பார்க்க வருவதாக சொன்ன மாப்பிள்ளை பெயர் என்னவென்று கேட்டாள்.ஏதோ ஞானாவாம் என்றாள்.

பால் கொதித்து வழிய மனதில் ஓடிக் கொண்டு இருந்த பழைய நினைவுக்கு விடை கொடுத்து,காபியை ரெடி செய்து ஞானவிடம் கொண்டு வந்தாள். பிரெஷ் ஆகி விட்டு மீண்டும் படுக்கையையில் படுத்து இருந்தான் ..ஞானா சார் காபி ரெடி என்று செல்ல குரலில் அவள் சொல்ல,கண் அடித்தபடி காபியை வாங்கி கொண்டு எழுந்தான் ..

நூறு ஜென்மம் உன் காப்பிக்காக பிறக்கலாம், என்று நக்கல் அடித்து கொண்டு அன்றைய நாளிதழை புரட்டியபடி காபியை குடித்தான் ..அவனை ரசித்து பார்த்துக் கொண்டு இருந்தாள் ..

காபியை குடித்து விட்டு கப்பை கீழே வைக்க குனித்தவன் ,அப்படியே கீழே சரிந்து விழுந்தான் …டேய் ..என்னடா ஆச்சி என்று சினேகா அருகில் வந்தாள்.ஆனால் அவனிடம் பேச்சு எதுவும் வரவில்லை ..சினேகா கத்தி கூப்பிட்டாள்.பயம் அவளை பற்றி கொண்டது ..அழுதபடி டாக்டருக்கும் ,ஆம்புலன்சுக்கும் போன் செய்தாள். டாக்டர் வருவதற்குள் ஆம்புலன்ஸ் வந்து விட்டது ,

அடுக்குமாடி குடியிருப்புக்குள் ஆம்புலன்ஸ் வந்த உடன் அதிர்ச்சி அடைந்த காவலாளி என்னவென்று கேட்க,ஆம்புலன்ஸ் டிரைவர் விவரத்தை சொன்னான். இங்க பிளாட்லே டாக்டர் ஒருத்தர் இருக்கிறார் நான் அவரை அழைத்து கொண்டு வருகிறேன் நீங்கள் மேலே செல்லுங்கள் என்று கூறி விட்டு ஓடினான். காவலாளி அழைத்து வந்த டாக்டர் ஞானவை பரிசோதித்து விட்டு முடிந்து விட்டதாக சொன்னார்

நம்பாமல் ஞானவை எழுப்ப முயற்சிதாள் சினேகா..ஆனால் அவள் முயற்சி தோல்வியை சந்தித்து கொண்டு இருந்தது…வாய்விட்டு கத்தி அழுதாள்.போலீஸ்க்கு போன் பண்ணுங்கப்பா என்று டாக்டர் சொல்ல ஆம்புலன்ஸ் டிரைவர் 100 க்கு போன் செய்து விவரத்தை சொன்னான்

போலீஸ் வட்டாரத்தில் பரபரப்பு பற்றிக் கொள்ள .ஏம்பா திருவான்மியூர் இன்ஸ்பெக்டர் இறந்து போய்ட்டாராமே…முப்பது வயதுதான் இருக்கும் ..என்ன ஆச்சாம் …

யோவ் வந்து கொஞ்ச காலத்திலே பெரிய கேசுகளை பிடித்து பரபரப்பா பேசப்பட்டாரே …உடம்புக்கு எதுவும் சரியில்லியா …

தெரிலைப்பா…அடையாறு இன்ஸ்பெக்டர் அறிவழகன் ஸ்பாட்டுக்கு போய் இருக்காரு ..

அவன் ஒரு விளங்காதவன் ஆச்சே ..கேஸ் எப்படி போகப்போகுதோ ?

அறிவழகன் மிடுக்காக சினேகாவின் வீட்டிற்குள் ஒவ்வொரு அறையாக போய் பார்த்தான்.எந்த சந்தேகமும் அவனுக்கு எழவில்லை .பாடியை G .H க்கு கொண்டு போக சொல்லிவிட்டு,ஞானா கடைசியாக குடித்த காபி கப்பை எடுத்து முகர்ந்து பார்த்தான்.காபி வாசனையை தாண்டி ஏதோ ஒரு வித்தியாச ஸ்மெல் அதில் நிழலாடியது.சந்தேகத்தோடு சினேகாவை பார்த்தான் ..

கடைசியா அவரு காப்பிதானே குடித்தாரு மேம் .

அழுதபடி தலையை ஆட்டினாள் சினேகா.

சாரி மேம் உங்கமேல எனக்கு சந்தேகமா இருக்கு.நீங்க இப்போ என் கூட வருவதுதான் பெட்டெர் .சினேகாவிடம் எந்த பதிலும் எதிர் பார்க்காமல் அறிவழகன் அந்த காபி கப்போடு வெளியேறினான் .
பெண் காவலர் இருவர் சினேகாவை பிடித்து அழைத்து கொண்டு போனார்கள்

ஜீப்பில் ஏறிய சினேகாவின் கண்கள் யாரையோ தேடியது ..ஒரு தூண் மறைவில் இருந்து அந்த முகம் எட்டி பார்த்தது. ஜீப் மறையும் வரை அந்த முகம் வைத்த கண் மாறாமல் சினேகாவை பார்த்துக் கொண்டே இருந்தது …

டி எஸ் பி அலுவலகம் காலை பரபரப்பில் வேகம் கட்டி இருக்க
கலைபிரியன் டி எஸ் பி அறைக்குள் வேக வேகமாக சென்றார். கவலை தோய்ந்த முகத்தோடு இருந்த டி எஸ் பி பார்த்து சற்று அதிர்ந்தாலும் ,கடமை உணர்வில் வந்த விடயத்தை குறித்து பேசத்தொடங்கினார்.

சார் நீங்க அழைத்தவுடன் என்னவோ என்று பதறிதான் வந்தேன்,ஞானா விஷயமாகத்தான் இருக்கும் என நம்புகிறேன்

கலை, இது கிரிட்டிகளான கேஸ் ,அதனாலதான் உங்ககிட்ட அந்த பொறுப்பை ஒப்படைக்கலாம் என்று நினைக்கிறேன்.அறிவழகன் சொல்லுவது போல .சினேகா இந்த கொலையை செய்து இருக்க வாய்ப்பு இல்லை .இதற்கு பின்னனியில் பெரிய சதியே இருக்கும் என்று நம்புகிறேன் .. யெஸ் ஐ ஹவ் டவுட்

ஞானா டீல் பண்ணிக்கிட்டு இருந்த கேஸ் ரொம்ப சென்ஸடிவான கேஸ் .என் மகளையும் சேர்த்து,சிலர் அதில இன்வால் ஆகி இருந்தாங்க, எஸ் என்று தலையை ஆட்டிக்கொண்டு தொடர்ந்தார் . சினேகா கொடுத்த காப்பியில விஷம் இருந்திருக்காது வைட்டிங்க் பார் போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்டு..

கலை போலீஸ் துறையில் டைகர் என்று அழைக்கப்படும் ஸ்பெஷல் ஆபிசர் .அவர் எடுத்த எந்த கேசும் இதுவரை தோல்வியை சந்தித்ததில்லை .மனுஷன் கேஸை டீல் பண்ணுனறதே தனி ஸ்டையிலா இருக்கும் .ஞானா கேஸை கலை எடுத்து விட்டார் என்று தெரிந்ததும் அறிவழகன் கோபத்தின் உச்சாணிக்கு போய் விட்டார் .எனக்கு திறமை இல்லியா ..அவனோட நான்தான் சீனியர்
என் ஸ்டேஷனை இரண்டு ஆக்கி கொண்டிருந்தார் .

நிறைமாத கர்ப்பிணி என்பதால் சினேகாவுக்கு கொஞ்சம் கருணையை காவல்துறை காட்டி இருந்தது.தேவைப்படும் போது அழைத்தால் வரவேண்டும் என்ற நிபந்தனையோடு அனுப்பி வைக்க .சினேகா போலீஸ் ஸ்டேசனில் இருந்து வெளி வரும்போது தூணுக்கு பின் இருந்த பார்த்த அந்த முகம் அவளை பார்த்துக் கொண்டே இருந்தது ..கலையின் கழுகு பார்வை அதை கவனிக்க தவறவில்லை .

அழைப்பு மணியோசை கேட்க , மெதுவாக நடந்து வந்து சினேகா கதவை திறந்தாள் தன் சகாக்களுடன் கலைப்பிரியன் நின்று கொண்டு இருந்தார்.
எந்த வரவேற்பும் எதிர்பார்க்காமல் வீட்டிற்குள் நுழைந்த அவர் சுற்றும் முற்றும் பார்த்தார் ..

ஹாலில் பெரிய படமாக சினேகாவுடன் ஞானா சிரித்துக் கொண்டு இருந்தார் அப்படியே கிச்சன் பக்கம் போன கலை அங்கு இருந்தபடி உங்க கிட்ட சில கேள்விகள் கேட்கலாமா ? என்றார்.அழுது வீங்கிய கண்களோடு இருந்த சினேகா தலையை ஆட்டினாள் .

உங்களுக்கு யார் மேலாவது சந்தேகம் இருக்கா மேடம் ,இல்லை என்று பதில் வந்தது.நீங்க ஸ்டேஷனில் இருந்து வெளியே போகும்போது உங்களை ஒருத்தர் பார்த்து கிட்டு இருந்தார் உங்களுக்கு தெரியுமா ?

மௌனமாக நின்று கொண்டு இருந்தாள் .இதற்கு மௌனம் பதில் ஆகாதே .. கேக்கிற கேள்விக்கு பதில் சொல்லுங்க மேடம் .

அது…என்று இழுத்தபடி,நானும் பார்த்தேன், அவ என் தோழர் என்றாள்..

ஓ ..தோழரா .நோ மேடம் அவர் தோழர் இல்லை,திருநம்பி அம் ஐ கரெக்ட் .. உங்க வீட்டுக்குள்ள வருவதற்கு முன்னாலே எல்லாம் கலெக்ட் பண்ணிக்கிட்டுதான் வந்து இருக்கிறேன்

அவன் மில் ஓனர் ராஜரத்தினம் பொண்ணு ,சின்ன வயசில திருநம்பியா மாறிட்டாதால அவுங்க அப்பா வீட்டை விட்டு துரத்திட்டாரு .நீங்க தான் அவனை காப்பாத்துனீங்க .ஏன்னா உங்க கிளாஸ்மேட் அவன் . உங்க மேல அவனுக்கு கொள்ளை பாசம் .இது ஞானவுக்கும் தெரியும் .ஏன் அவன் இந்த கொலையை செய்து இருக்க கூடாது ?

கலைக்கு போன் வர ,சற்று தள்ளி நின்று பேசினார் ..ஓ அப்படியா என்ற வார்த்தையோடு கலையின் கண்கள் விரிந்தது .போன் பேசிவிட்டு வந்த கலை மேடம் உஙக்ளுக்கு ஒரு குட் நியூஸ் எனக்கு ஒரு பேட் நியூஸ் ..நீங்க கொடுத்த காபியில் இருந்த விஷம் ஞானவின் உயிரை பறிக்கவில்லை.ஆனால் எங்கோ தவறு நடந்து இருக்கிறது ..?

BY THE BY கார்த்திக் இப்போ எங்க கஸ்டடியில் இருக்கிறார் ,உங்க மேல இருந்த நட்பில் இந்த கொலையை செய்து இருக்கலாம் என்று சந்தேகபடுகிறேன்.இன்வெஸ்டிகஷன் இப்போதானே தொடங்கி இருக்கு போக போக தெரியும்.மெல்லிய புன்னகையோடு கலை வீட்டை விட்டு வெளியே வந்தார் .

கலையின் மனதில் ஒரே குழப்பம்.புகை வருகிறது ஆனா நெருப்பு எங்கே ? டிரைவரை பார்த்து வண்டியை அடையாறு போலீஸ் ஸ்டேஷனுக்கு விடு என்றார் ..

வண்டியில் போகும்போது மொபைல் அடிக்கடி அடிக்க ,கலை அதை பொருட்படுத்தவில்லை.டிரைவர் மொபைல் போன் ஒலிக்கும் போது எல்லாம் கலையின் பக்கம் பார்த்தான்.

பிரோ ரோட்டை பார்த்து வண்டியை ஓட்டுங்க …காதலித்தா இப்படிப்பட்ட சூழல் வரும்.இப்போ போனை எடுத்தா உடனே வர சொல்லுவா …கொஞ்சம் லேட் ஆகும் என்றால் யார் உன்கூட இருக்கிற என்பாள்.அமைதியா போனை எடுக்காமல் இருந்தால், கிரேட் எஸ்கேப் ..

டிரைவர் மௌன சிரிப்பு சிரித்துக் கொண்டான்..நமக்குத்தான் திருவிழா என்றால் இவருக்கும்தானா?எல்லா காதலிகளின் அன்பு இம்சை தானோ..?

பிரோ மைண்ட் வாய்ஸ் இப்போ வெளியில் கூட கேட்கும் என்ற படி கலை வண்டியில் இருந்து இறங்கி அடையாறு போலீஸ் ஸ்டேஷனுக்குள் சென்றார் .

அறிவை ஒர கண்ணால் நக்கல் பார்வை பார்த்தபடி,ஞானா கேஸ் பைல் எங்க என்றார்.

ரெடியா இருக்கு சார் ..

கேஸ் பைலை புரட்ட ஆரம்பித்த கலை ,புகைப்படங்களை பார்க்கும்போது அதில் சில விடயங்கள் அவருக்கு நெருடலாக தெரிந்தது.ஞானா வீட்டில் பொருத்தப்பட்டு இருந்த கேமராவில் பதிவாகி இருந்த புட்டேஜ்யை பார்த்து கொண்டு இருந்த கலை,ஒரு இடத்தில வரும் போது அதனை நிறுத்த சொல்லி ஜூம் பண்ண சொன்னார் .

ஞானா மயங்கி விழந்ததும் டாக்டருடன் வீட்டுக்குள் வந்த அடுக்குமாடி குடியிருப்பு காவலாளி,எல்லோர் கவனத்தையும் மீறி ஞானா காபி குடித்த கப்பை எடுத்து டாக்டரிடம் கொடுக்க .ஞானவை பரிசோதிப்பது போல டாக்டர் தனது இன்னொரு கையால் அந்த காபி கப்பில் எதையோ தடவுவது பதிவாகி இருந்தது

நிமிர்ந்து உட்கார்ந்த கலை ,வில்லன் உள்ளேதான் இருந்திருக்கிறான்.சே ..தேடுதலின் களம் தான் மாறி போய்விட்டதே..அறிவு பத்து நிமிசத்தில அந்த காவலாளி இங்க இருக்கனும்..குயிக் ..அறிவு முனங்கி கொண்டே வெளியே சென்றார்

502 திருநம்பி கார்த்திக் ஏதாவது சொன்னானா ?

எவ்வளவு அடித்து பார்த்து விட்டோம்.வாயே திறக்க மாட்டேன் என்று அடம் பிடிக்கிறான் .

இனி அடிக்காதீங்க வெயிட் பண்ணுங்க ..

காவலாளி கொண்டு வரப்பட்ட உடன்,எதுவம் பேசாமல் அவனையே பார்த்துக் கொண்டு இருந்தார் கலை.அவன் வேகமாக எச்சிலை முழுங்கி கொண்டு பார்வையை அங்குமிங்கும் திருப்பினான் ,அவனையும் அறியாமல் உடலில் வியர்வை ஆறாக பாய மெதுவாக சார் என்றான் ..சேயரில் இருந்து எழுந்த கலை அவன் அருகில் வந்தார்

அன்னிக்கு ஆம்புலன்ஸ் வந்த உடன் ,ஞானா சாரை எப்படியாவது காப்பாத்தணும் உணர்வில்,பிளாட்ல டாக்டர் கணேஷ் வீட்டுக்கு போய் கூப்பிட்டேன்.என்ன என்று கேட்டார் ..விஷயத்தை சொன்னேன் .

சரி நான் வருகிறேன்.ஆனா உள்ளே போனதும் ஞானா பக்கத்தில் கிடக்கிற பொருளை நான் கேப்பேன் யாருக்கும் தெரியாம எடுத்து கொடுக்கணும் சொன்னார் .
எதுக்குனு கேட்டேன், சொல்லுறேன் என்றபடி என்னுடன் வந்தார்

ஞானா சார் வீட்டுக்குள்ள போனதும் காப்பி கப்புதான் கீழே கிடந்தது,கண் ஜாடையில் அதை எடுத்து தர சொன்னார்.நான் யாருக்கும் தெரியாமல் எடுத்து அவர்கிட்ட கொடுத்தேன். அதுக்கு மேல எனக்கு ஒன்னும் தெரியாது சார் … என்றபடி கையெடுத்து கும்பிட்டான்.

பிளாட்டில் சிசி கேமரா இருக்கா..

இருக்கு.ஆனா ரொம்ப நாளா ஒர்க் ஆகல, நானும் பலதடவை சொல்லி பார்த்து விட்டேன் .யாரும் சரி பண்ணல ..

ம்ம்ம். நீ இங்க என்கிட்ட பேசினதோ வெளிய சொல்ல கூடாது ..இப்போ உன்னை அனுப்புறேன் ஆனா கூப்பிடும் போது வரணும் .போ என்று காவலாளியை அனுப்பினார் .காவலாளி நடந்து போகும்போது அவனை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொன்டு இருந்தார் .

ஞானா குடும்பத்தோடு இந்த டாக்டருக்கு என்ன தொடர்பு ? மண்டை குழம்புதே …அறிவு யார்கிட்டயாவது ஒரு காபி வாங்கிட்டு வர சொல்லுப்பா

எஸ் இப்போ நம்ம டார்கெட் சினேகா…

மேடம் …இப்போ நான் கேக்கபோறது சந்தேகம் மட்டும்தான் . நீங்க உணர்ச்சி வசப்பட கூடாது .
உஙக்ளுக்கும் …இந்த பிளாட்ல இருக்கிற டாக்டர் கணேஷ்க்கும் ஏதாவது …
வாட் யு மீன்.
ஐ மீன் ஏதாவது தொடர்பு ..?
நான்சென்ஸ் …ஞானா மரணம் அடைந்த அன்னிக்குத்தான் அந்த மனுஷனை பார்த்து இருக்கிறேன் .அதுக்கு முன்னால நான் அவரை பார்த்ததே கிடையாது

உங்களை தவிர உங்கவீட்டு சாவி யார்கிட்டேயாவது இருக்கா ?

ஆமா வேலை காரி கிட்ட அப்புறம் …..கார்த்திக்கிட்ட ஒரு சாவி ..

வேலைக்காரிகிட்ட சாவி எதுக்கு …?

காலையில நாங்க தூங்கிகிட்டு இருந்தாலும் ,எங்களை எழுப்பாமல் வேலைக்காரி வேலைகளை செய்ய வசதியா இருக்குமே ”

ஞானா இறந்த அன்றும் அப்படித்தானா ..

ஆமா ..வேலைக்காரி வந்து பாத்திரங்களை கழுவி வைத்து விட்டு போன பிறகுதான் நான் காபி போட்டு கொடுத்தேன்..

வேலைக்காரி இன்னைக்கு எப்போ வருவாங்க

இப்போ வருவது இல்லை .நான் வேண்டாம் என்று சொல்ல வில்லை .அவளே நின்று விட்டாள்.

போலீஸ் வேன் அந்த காலணிக்குள் நுழைந்தவுடன் தெருவில் விளையாடி கொண்டு இருந்த சிறுவர்கள் ,போலீஸ் என்று கத்தி கொண்டு ஓட ஆரம்பித்தார்கள்

சாலையில் நின்று கேரம் விளையாடி கொண்டிருந்த ஒரு கூட்டம் தெனாவெட்டாக மாமாக்கள் வந்து இருக்காங்கப்பா என்று நக்கல் அடிக்க .அறிவு அவர்களை விரட்டி விட்டு.அங்கிருந்த ஆட்டோ டிரைவரிடம் ராணி வீடு எங்கே என்று கேட்டான் ..

எந்த ராணி …பெரிய அடுக்குமாடியில வீட்டு வேலை செய்யுதே அத …என் பொண்ட்டாடி தான் ..இன்ன விஷயம் என்றான் .

விசாரிக்கணும்ப்பா என்றான் அறிவு ..

வா துரை நான் கூட்டிட்டு போறேன் என்றவன் முன்னால் நடக்க ,அறிவு அவனை பின் தொடர்ந்தான் .

சார் நீங்க போகலையா என்று கலையை டிரைவர் கேட்க ,பிரோ இந்த கேப்பில ஆளுகிட்ட கடலையை அவிழ்து விட்டுகிட்டு ஜாலியா இருப்போம் அறிவு மத்ததை பத்துக்குவான் ..

இளமைக்கால மனோரமா மாதிரி இருந்த ராணியை அழைத்து வந்து கொண்டிருந்த அறிவு , யாரிடமோ போனில் பேசிக் கொண்டு வந்தான் .ஜீப் அருகில் வந்ததும் இணைப்பை துண்டித்து விட்டான்

எந்த பயமும் இன்றிராணி ஜீப் அருகில் வந்து கலையிடம் இன்ன சார் கூப்பிட்டு விட்டிங்களாமே என்றாள்.

சும்மா மகாராணியை பார்க்கணும் போல இருந்துச்சி அதான் கூப்பிட்டேன்…என்னம்மா போலீஸ்ன்னு பயம் இல்லாம நக்கலா பதிலா …

ஞானா சார் இறந்த அன்னைக்கு அவுங்க வீட்டுக்கு போனியா ..?

தினமும் போறதுபோல தான் போனேன்.

என்ன நடந்தது …

லிப்ட்ல போய் இறக்கும் போது கார்த்தி வீட்டுக்குள்ள இருந்து வந்தான்.அதான் சார் அந்த திரு நம்பி.வெளியில டாக்டர் கணேஷ் நின்னுகிட்டு இருந்தாரு ஏண்டா காலையில வந்து இருக்கியேன்னு கேட்டேன் ..அவன் ஏதோ சொல்லி சமாளித்து விட்டு லிப்டில் போனான் .கூடவே அந்த டாக்டரும் போனாரூ.

நான் வீட்டுக்குள்ள போயி கிளீன் பண்ணிட்டு வந்தேன், நான் போகும்போது அந்த இரண்டு பிள்ளைகளும் தூங்கி கிட்டு இருந்துச்சி ..

ராணி நீங்க சொல்லுறது உண்மைதானே …தேங்க்ஸ் நீங்க போகலாம் ..யோவ் அறிவு வாங்க போகலாம் …

காவல்துறை இன்போர்மஷன் டிபார்ட்மென்ட் ரூமுக்குள்ள போன கலை,அறிவின் போனை ட்ரக் செய்ய சொல்லி இருந்தேனே ..செய்தீர்களா என்று கேட்டார் .ஆமா சார் பண்ணிக்கிட்டு தான் இருக்கோம் .கடைசியா டாக்டர் கணேஷுகிட்ட பேசி இருக்காரு .

கொஞ்சம் அதை போட்டு காட்டுங்க ..

சார் ,போலீஸ் உங்களை சந்தேகபட ஆரம்பித்து விட்டது .நீங்க மாட்டிக்கிட்ட என் பெயரை இழுத்து விட்டுடாதீங்க ப்ளீஸ் .நான் டி .எஸ்.பி காக,நான் இந்த தப்பை செய்தேன் …எல்லாம் உங்க கையிலதான் இருக்கு .அறிவு பேசியதை கேட்ட கலைக்கு தூக்கி வாரி போட்டது .டி .எஸ்.பி க்கு தொடர்பா …?

சம்திங் ராங் மனதிற்குள் சொல்லி கொண்டு,யோசித்தவாறு அறையை விட்டு வெளியேறி போது. அறிவு யாரிடமோ விசாரணை நடத்தி கொண்டு இருந்தான்.அறிவின் மீது கலைக்கு நம்பிக்கை பொய்த்து விட்டது ..ஆயினும் அறிவை வைத்து கேமை முடிப்போம் என்ற நோக்கில்,அறிவு அவனை விட்டு வாங்க வில்லனை நெருங்கி விட்டோம் நாம் என்றார் .

போலீஸ் ஜீப் அந்த அடுக்குமாடி குடியிருப்பிற்குள் நுழைய , களம் மாறி இருந்தது . கார்கள்நிறைய உள்ளே வந்து கொண்டு இருந்தது வாகனங்களுக்கு இடம் காட்டி கொடுத்து கொண்டு இருந்த காவலாளியிடம் என்ன என்ற கேட்டார் .

கலையை ஏற்கனவே தெரியும் என்பதால் ..சார் டாக்டர் தூக்கு போட்டு செத்து போய்ட்டாரு . நல்ல மனுஷன் ஏன் இப்படி செய்தருனு தெரியல .. சினேகா மேடம் டெலிவெரிக்காக ஆஸ்பத்திரிக்கு கொண்டு போயிருக்காங்க…

டாக்டர் எப்போ …அதிர்ச்சியில் கலை கேட்டார் .

இன்னைக்கு காலையில சார்…காவலாளி சொல்லும்போது ,அறிவை பார்த்தார் அவனிடம் எந்த சலனமும் இல்லை .

உண்மை தெரிந்த ஒரே ஆள் டாக்டர் மட்டும்தான் .அவனும் போய்ட்டான் .இப்போ நம்ம கையில் இருக்கிற ஒரே ஆயுதம்,திருநம்பி கார்த்திக்கத்தான் .
எவ்வளவு அடித்தாலும் வாயே திறக்க மாட்டேன் என அடமாய் இருக்கிறான் .எப்படி அவன் வாயை திறக்க வைப்பது …யோசித்து கொண்டே,அறிவு நீங்க இங்கேயே இருங்க சந்தேகபடும் படி யாராவது தென்பட்டால் எனக்கு போன் பண்ணுங்க என்று சொல்லிவிட்டு ஜீப்பில் ஏறி கிளம்பினார் கலை

ஜீப் போய் கொண்டிருக்கும்போது வழக்கமாய் வரும் தொலைபேசி .டிரைவர்
பரிதாமாக கலையை பார்த்தான் .சார் கூல் பண்ண சென்டிமெண்டா பேசணும் சார் .நீங்க போனை எடுத்து சென்டிமெண்டா பேசினா அவுங்க உங்களை தொந்தரவு பண்ண மாட்டாங்க.

பிரோ அவ போன் தான் எனக்கு வைட்டமின் .அவ எப்போவும் இப்படி தொந்தரவு கொடுத்தாதான் நமக்குன்னு யாரோ இருக்காங்கனு தெரியும் .இல்லைனா அனாதைபோல ஆகிடுவோம் ….ஆமா, சென்டிமெண்டா பேசினா யாரையும் கூல் பண்ணிடலாம்னு சொன்னியே ?.. யோசித்தவாறு எஸ் வண்டிய நேரா ஸ்டேஷனுக்கு விடு .. வேலை இருக்கு ..

கார்த்திகை அடித்து துவைத்து போட்டு இருந்தாங்க ..அவன் உடம்பு எல்லாம் வீங்கி ரத்தம் கட்டி பொய் இருந்தது . கார்த்திக் உன்னை சினேகாவை பார்க்க கூட்டிட்டு போறேன் ..

இந்த வார்த்தையை கேட்டதும் கார்த்திக் வேண்டாம் என்று தலையை சுவரில் முட்டி அழுதான் .. அவனை சமாதானம் படுத்தி குடிக்க தண்ணீர் கொடுத்தார் கலை..

கார்த்தி …உன் சினேகா அழகான குழந்தைக்கு தாயாகி விட்டாள்.இப்போ .நீ குழந்தையை பார்க்கணும் .தாய் மாமன் நீதானே …

வேண்டாம் சார் …நான் பாக்க விரும்பல ..அவளை இந்த நிலையில் நான் பாக்க விரும்பல சார் என்று கத்தி அழுதான் ..

அவன் தோளை தட்டிக் கொடுத்து விட்டு ,தன்னுடன் அழைத்து கொண்டு கிளப்பினார் .ஜீப்பில் போகும்போது குலுங்கி குலுங்கி அழுது கொண்டே இருந்தான் ..

ஆஸ்பத்திரியில் இறங்க மனம் இல்லாமல் இறங்கி கார்த்திக் ,கண்ணீரை துடைத்து கொண்டு மெதுவாக நடந்தான் .அவனால் நடக்க முடியவில்லை. அந்த அறையை நெருங்கும் போது,குழந்தையின் அழுகை சத்தம் கேட்டு , கார்த்திக்கின் கண்கள் அலை பாய்ந்ததை கலை கவனிக்க தவறவில்லை

அறைக்குள் தயங்கி தயங்கி உள்ளே வந்தான் .அவனை பார்த்ததும் சினேகா வாய்விட்டு கதறி அழுதபடி குழந்தையை அவனிடம் காட்டினாள் .

அவள் அழுததும் ,அவனால் பொறுமையாக இருக்கமுடியவில்லை அழுதபடி பக்கத்தில் இருந்த சுவரில் சாய்த்தபடி கீழே உட்கார்ந்தான் …கொஞ்ச நேரம் அமைதியாக இருந்தவன் ..கண்ணீரை துடைத்து கொண்டு, ஏண்டி அப்படி செய்த என்று காட்டு கத்தல் கத்தினான் …

அவன் ஏன் கோப்படுகிறான் எனபதை சினேகாவால் யூகிக்க முடியவில்லை .ஞானவை நான் தான் கொன்னேன் நீ நம்புறியா கார்த்திக் என்றாள்..

இல்லே , அந்த டாக்டர் கூட உனக்கு என்ன தொடர்பு …சொல்லுடி ..உன்ன டெலிவரிக்கு உதவியா இருக்குமேன்னு,தினமும் ராத்திரி உங்க வீட்டுக்கு முன்னாலதான் நான் தூங்கிட்டு இருந்தேன் .. உன்னை தனியா ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டு போக ஞானாவும் கஷ்டபடும் தானே ?

.அன்னைக்கு,தூங்கி முழிச்ச போது, உ வீட்டுக்குள்ள இருந்து அந்த டாக்டர் வெளியில வந்தான்.எனக்கு ஷாக் ..இவன் எப்படி என்று கோபத்தில் பார்த்தேன்
அவன் தயங்கியபடி சாவியை கையில் கொடுத்தான், தூங்கிகிட்டு இருந்தபோது எனக்கு தெரியாமல் சாவியை எடுத்து கொண்டு உள்ளே நுழைந்து இருக்கிறான் என்பதை புரிந்து கொண்டேன் .
நீ தான் வர சொன்னதாகவும் அடிக்கடி இப்படி சந்திப்பதாகவும் சொன்னான் . உன்மேல எனக்கு வெறித்தனமான கோபம் ..இனி உன்கூட பேசக்கூடாதுனு முடிவு பண்ணி இதுவரை நான் வாய் திறக்கலை .. .

முட்டாள் மாதிரி பேசாதே அவனை நான் முதன்முதலா ஞானாவோட
கடைசி நாள்தான் பார்த்தேன் .

இதுவரை அமைதியாக கேட்டுக் கொண்டு இருந்த கலை டாக்டர் சொன்னது பொய் .எஸ் ..ஹி வாஸ் எ பிரில்லியண்ட் ஆக்டர் …சினேகா வீட்டில் இருந்து வெளியே வரும்போது அந்த டாக்டர் கையில் ஏதாவது …

ஆமா சார் ஒரு சின்ன பாட்டில் கையில் இருந்தது ..அதை குப்பை தொட்டில் போட்டார் .நான் எடுத்து வைத்து இருக்கிறேன் ..

வெல்டன் கார்த்திக் …

சினேகா கொஞ்சம் யோசியங்க ..நீங்க காபி குடிக்க கொடுப்பதற்கு முன்னால ஞானா என்ன செய்தார் … யோசியுங்க ..

சார் …ஞானா பிரெஷ் ஆகிட்டு வந்தார்

யெஸ் ஐ காட் இட் …கார்த்திக் அந்த பாட்டில எங்கே வைத்து இருக்கிறாய் , .
கலையின் தீவிர தேடலில் ஞானா பிரஸ் பண்ணின கோல்கேட் பிரஸில் விஷம் இருந்ததை கண்டு பிடித்தார். கார்த்திக் கையில் இருந்த பாட்டில் கொண்டு வரப்பட்ட விசம் அது என்பது தெளிவானது ..

ஞானவை,.எதற்கு கொலை செய்ய வேண்டும் …கேள்வி தொக்கி நிக்குதே …?யெஸ் நம்ம குறி அறிவு ..?கலையின் மனதில் விழுந்த கணக்கு அறிவை தேடியது ..

கலையை பார்த்ததும் அறிவிடம் ஒரு பதட்டம் .அறைக்கு அழைத்து கொண்டு போன கலை கதவை மூடினார், கத்தி உங்க தலை மேலதான் தொங்குது அறிவு. நீங்க வாயை திறந்த கேஸ் முடிந்திரும் ..பால் உங்க கையில்
.
நீங்க என்னை தப்பா நெனைக்கிறீங்க

தேயர் ஸ் எவிடென்ஸ் அறிவு,இந்த போட்டோவை பாருங்க ஞானா மரணம் அடைந்த அன்னிக்கு ஸ்பாட்டுக்கு நீங்க போய் இருந்த போது எடுத்த போட்டோ, நீங்க உள்ள போகும்போது கையில மொபைலை தவிர ஒன்னும் இல்ல..கொஞ்சம் இந்த போட்டோவை பாருங்க ,இதில நீங்க இல்ல ..ஆனா போட்டோவில அந்த கார்னரில் தெரியம் டிவில கொஞ்சம் மங்கலா ஒரு உருவம் தெரியுது பாருங்க ..அது நீங்கதானே ..இப்போ உங்க கையில ஒரு பைல் இருக்கு ….ஆண்டவன் நமக்கு தெரியாமல் ஒரு தடயத்தை வைத்து இருப்பான் .அதுதான் போலீஸ்க்கு கிடைக்கும் முதல் சாட்சி ..கம் ஆன் அறிவு ஸ்பீக் அவுட் .

சார் ,,டி எஸ் பி மகளை காதலித்தேன்,அவ ஜனர்னலிஸ்ட்.மெட் .எல் . ஆஸ்பத்திரியில் காச்சல்னு சொல்லி அட்மிட் ஆனா ,அப்போ அங்க நடத்த ஒரு விடயத்தை ஷாட் பண்ணி அனுப்பி இருந்தா ..

கோரோனோ இல்லாதவங்களை நோயாளியாக்கி ஏழு லட்சம் பணத்தை கட்டணமா பிடுங்கி கிட்டு இருந்தாங்க .அட்மிட் ஆகி இருந்த ஒரு சின்ன பொண்ணோட அப்பா இந்த உண்மையை கண்டு பிடித்துவிட அந்த குழந்தையை கொலை செய்து விட்டு ,கோரோனோவில் செத்து போச்சுன்னு சொல்லி ,பிணத்தை கூட அந்த தகப்பனிடம் கொடுக்கலா .இந்த கேஸ் ஞானா கிட்ட வந்தது . ரம்யா கொடுத்த எவிடென்ஸ் தான் கேஸுக்கு ஆதாரம்
.
விஷயம் எப்படியோ அவனுங்களுக்கு தெரிஞ்சி போச்சி, ரம்யாவை கோரோனோ நோயாளியாக்கி அடைத்து வைத்து விட்டார்கள்,ரம்யாவை காப்பாத்த அந்த பைல் தேவைபட்டது .எனக்கு ரம்மியான உயிர் ..

அதற்காக நீங்க ஞானவை கொலை செய்தீங்க அம் ஐ கரெக்ட் ….

இல்ல நான் எதற்கு ஞானவை கொலை செய்யவேண்டும் ..

கூல் MR .அறிவு..நீங்க பைலை கேட்டு ஞானவுக்கு பேசின கால் ரெகார்ட் என்கையில் இருக்கு ..

உண்மைதான் சார் ,நான் சண்டை போட்டேன் .அன்னைக்கு ராத்திரி பைல்ல எடுக்கவும் போனேன் .ஆனா கார்த்திக் வீட்டின் முன் உட்கார்ந்து இருந்தால திரும்பி வந்து விட்டேன் ..

அதற்கு பிறகு நீங்கள் டாக்டருக்கு போன் செய்து பிளான் கொடுத்தீங்க .டாக்டர் அதை கச்சிதமாக முடித்து விட்டார் .அதன்பின் நீங்க கேஸை டீல் பண்ணுறது மாதிரி போய் பைலே எடுத்திட்டு வந்தீங்க …கொலை பழியை சினேகாவின் மேல் திருப்பினீங்க ..

சார் நான் டாக்டரை கொலை செய்ய சொல்லவில்லை ,ஆனா டாக்டர் ஏன்
கொலை செய்தான் என்று தெரியல ..கடைசில அவனை காக்க வேண்டிய சூழல் என் தலையில் விழுந்தது .

அறிவு போலீசை பத்தி உங்களுக்கு தெரியுமே , ஒரு பக்கம் பார்த்தால் இன்னொரு பக்கம் குறி வைக்கிறான் என்று ..

உங்களுக்கு தெரியாத இன்னொரு அதிர்ச்சி விசயத்தை சொல்லுறேன் .டாக்டர் தற்கொலை செய்யவில்லை .கொலை செய்யப்பட்டார் .
எஸ் .. கொலை செய்தவர் சினேகா..

ஒரு நிறைமாத கர்ப்பிணினு பார்க்காம ஒரு பொண்ணை விதவை ஆகிட்டீங்க .வாழ வேண்டிய பொண்ணு …என்ன பாவம் செய்தது .கார்பொரேட் கம்பனிக்காக நீங்கள் கொலைகாரனாக மாறும்போது .தன் கணவனுக்காக அவள் ஏன் மாறக்கூடாதா ?நான்தான் கொலை செய்ய சொன்னேன்.

சட்டம் ,நீதி மன்றம் எல்லாம் நேர விரயம் .தண்டனை உடனடியாக கிடைக்காது. டாக்டர் தான் கொலையை செய்தான் என்பது தெரிய ஆரம்பித்தது.ஆனால் எவிடென்ஸ் மட்டும் கிடைக்கல,அதற்காக நான் நேரத்தை விரயம் செய்ய விரும்பல .சினேகா குழந்தை உலகத்தை பார்க்கும்போது அப்பாவை கொன்றவனை பார்க்க கூடாது என்பதில் தெளிவாக இருந்தேன் .

சினேகா வீட்டீற்கு போய் டாக்டர் கொலை செய்து இருப்பான் என்ற விடயத்தை சொன்னேன்,விஷயத்தை கேட்டவள், அவனை கொல்லனும் கத்தினாள்,

கொல்லுகிறாயா என்று கேட்டேன் .அவள் கண்ணில் வெறி, தலையை ஆட்டினாள் திட்டமிட்டு டாக்டரை கொலை செய்து தூக்கில் தொங்க விட்டு தற்கொலை என்று கதையை முடித்தோம் .என் தம்பி பிரபாகரன்தான் GH டாக்டர் …புரிந்து இருக்குமே அறிவு …

இனி சட்டம் தன் கடமையை செய்யும் ….நீங்க கொடுத்த பைலை டாக்டர் வீட்டில் இருந்து எடுத்துவிட்டேன் ..மெட் எல் மருத்துவமனை குறித்த அத்தனை விடயமும் என் கைக்குள்..இனி சட்டம் பேசும் …வெயிட் …

– எழுத்தாளர் .மு.ஞா.செ.இன்பா

கமலகண்ணன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...