“வைஷும்மா! அப்பா கிளம்பறேன்; வீட்டைத் திறந்து வைக்காதே; அம்மாவை அழைச்சிட்டு ஈவ்னிங் வந்திடுவேன். பத்திரம்!” என்று மகளுக்குச் சொல்லி விட்டு, ஒரு திருமணத்திற்குக் கிளம்பினார் சங்கரன். தந்தையை வழியனுப்பி வைத்துவிட்டு, மீண்டும் படுக்கையில் விழுந்தவளுக்கு உறக்கம்தான் வரவில்லை. அவளது அனுமதியில்லாமல் கண்ணுக்குள்ளேயே நின்று சிரிப்பவனைத் தவிர்க்க, வழி தெரியாமல் திண்டாடினாள் அந்த நங்கை. தென்றலாக அவனது நினைவுகள் உள்ளத்தில் சாமரம் வீச, மனமோ அவனை அளவுக்கதிகமாக இன்று எதிர்பார்த்தது. காதலின் தாக்கம் விழிகளில் நீராய்ப் பெருகி, கன்னத்தில் […]Read More
மறுநாள் விருந்தில் வழக்கத்திற்கு மாறாக வேணியை அருகிலேயே நிறுத்திக் கொண்டார், ஒருவேளை என்னைப் பற்றி கண்ணன் அன்னையிடம் சொல்லியிருப்பாரோ இருக்கலாம் இத்தனை நாள் இல்லாத வாஞ்சையுடன் வேணியை அழைத்தார் கண்ணனின் அம்மா. “இந்தம்மா குங்குமம் எடுத்துக்கோ!” தலையினைக் கோதி பூச்சரத்தை சூடிவிட்டவர். “வேணிம்மா நான் உன்னை என் மகளா நினைக்கிறேன். நல்ல பொண்ணும்மா நீ ஆனா இடம் மாறிப் பொறந்திட்டே. இங்கன பாரு வயசுப்பிள்ளைங்களை தகுந்த துணை இல்லாம வெளியே தெருவ அனுப்ப மாட்டோம் இந்த ஊருலே, […]Read More
கரையெல்லாம் செண்பகப் பூ – சுஜாதா சுஜாதாவின் மற்றுமொரு மாஸ்டர்பீஸ். ஒருபுறம் கதாநாயகனின் உணர்ச்சிப் போராட்டங்கள், மற்றொரு புறம் கிராமத்து சடங்குகளையும் சம்பிரதாயங்களையும் நாட்டுப்புறப் பாடல்களின் அழகையும் ரசிக்க வைப்பது, வேறொரு புறம், ஜமீன் பங்களாவில் இரவில் எழும் மர்ம சப்தங்கள், அதைத் தொடரும் சினேகலதாவின் கொலை, விசாரணை என்று துப்பறியும் கதைக்கான விறுவிறுப்பு என்று முப்பரிமாணத்தில் விரியும் சுஜாதாவின் எழுத்து இந்த நாவலில். பின்னாளில் இதே தலைப்பில் பிரதாப் போத்தன், ஸ்ரீப்ரியா போன்றவர்கள் நடிக்க திரைப் […]Read More
நேசம் மறக்கவில்லை சகியேநெஞ்சம் உறங்கவில்லை. “பி.பி கொஞ்சம் அதிகமா இருக்கு” டாக்டர் குரலில் கவலை. “என்ன சாய் எதானும் டென்ஷனா” அவர் கேள்விக்கு யாரும் பதில் சொல்லவில்லை.முகத்தை,முகத்தை பார்த்துக் கொண்டதில் டாக்டருக்குப் புரிந்து போயிற்று. “ரிலாக்ஸா இருங்கன்னு சொல்லி சலிச்சுட்டேன்.கேட்டாத்தானே. ஏண்டா செத்தா உனக்குத்தான் நஷ்டம்? டாக்டர் நண்பர் என்பதால் சலித்துக் கொண்டார். பதில் சொல்லாமல் தலை குனிந்த சாய்நாதனைப் பார்க்கையில் வேதனையாக இருந்தது எல்லோருக்கும். முதல் அடி வசுமதி மூலம்.அடுத்து சந்தீப் மூலம். வசு பிரிந்து […]Read More
தென்மேற்கு பருவக் காற்றின் மெல்லிய வருடலில் பச்சைப் பசேலென வளர்ந்து நிற்கும் பயிர்கள் சிலிர்த்துக் கொள்ளும் தேனி மாவட்டம் அந்நாளில் அது மதுரை மாவட்டத்தின் ஒரு பகுதி. அந்த மாவட்டத்தில் பெரியகுளம் வட்டாரத்தில் சேடபட்டி என்ற சிற்றூர்தான் நான் பிறந்த ஊர். பெரியகுளம் மாவட்ட கல்வி அதிகாரியாக பணிபுரிந்த சூரியநாராயணத் தேவர் எனது தந்தையார். அம்மா ஆதிலட்சுமி. இப்படி கல்விக்கூடங்களின் கடமையாளராக திகழ்ந்த பெற்றோர்களுக்கு 1928 ஜனவரி 1 இல் நான் பிறந்தேன். எனது பிறப்பைப் பற்றிக் […]Read More
சரியென்று விட்டு தன் இருக்கையில் அமர செல்லும் போது படகு சற்று வேகமாக ஆட நடந்து கொண்டிருந்தவன் உத்ராவின் மேல் விழுந்தான். குனிந்து கொண்டிருந்தவளின் மேல் அவன் விழுந்துதும் பாதி குனிந்த நிலையில் இருந்த உத்ரா நீருக்குள் விழுந்தாள். யாருமே எதிர்பார்க்காமல் நிமிட நேரத்திற்குள் நடந்து விட்ட சம்பவத்தில் படகில் இருந்த அனைவரும் அதிர்ந்து விட்டனர். நீருக்குள் விழுந்த உத்ரா கையை நீட்டி உதவியை கோரினாள். படகில் இருந்தவர்கள் பதட்டத்தில் அவளுக்கு கை கொடுக்க ஒரு புறமாக […]Read More
“தேவி! ஸ்ட்ராங்கா ஒரு காஃபி கொண்டு வாம்மா!” என்றபடி டையை தளர்த்தி விட்டுக் கொண்டே சோஃபாவில் சாய்ந்து அமர்ந்து, சற்று ஆசுவாசப்படுத்திக் கொண்டார் சங்கரன். “என்னப்பா, அம்மா ஊருக்குப் போயிருக்காங்களே… மறந்துட்டீங்களா?” என்று கேட்டுக்கொண்டே தலைவலி மாத்திரையையும், தைலத்தையும் எடுத்துக் கொண்டு வந்தாள் வைஷாலி. “பழக்க தோஷம்டா…” என்ற தந்தையைப் புன்னகையுடன் பார்த்தபடி மாத்திரையைக் கொடுத்தவள், தைலத்தைத் தேய்த்துவிட்டு வலிக்கு இதமாகத் தலையைப் பிடித்துவிட்டாள். அன்னை, தந்தை இருவருக்குள்ளும் எத்தனை மனக்கசப்பு வந்தாலும், அந்தக் கோபம் அவர்களுக் […]Read More
பண்ணை வீடு, நாடகம் முடிந்து ஆசுவாசத்தில் நடிகர்கள், மாடியில் கயிற்றுக்கட்டிலில் படுத்துக்கொண்டு, “தம்பி கிராமமாச்சே சாப்பாடு எல்லாம் எப்படியிருக்குமோன்னு பயந்தோம் ஆனா உண்மையில் வீட்டுச் சாப்பாடு மாதிரி அம்சமா இருந்தது. அம்மாவின் கைப் பக்குவம் ரொம்ப அருமையா இருந்தது.!” வெத்திலை சீவலை மடித்து கொடுத்துக் கொண்டிருந்த கண்ணனிடம் பாராட்டிக் கொண்டு இருந்தார்கள். “நாங்களும் நன்றி சொல்லணுங்க ரொம்ப அற்புதமா நீங்க எல்லாரும் சிறப்பா செய்து கொடுத்திட்டீங்க ?” வேணி எல்லாருக்கும் பொதுவாய் தண்ணீர் குவளையும் கூடவே இரண்டு […]Read More
என்னது..? குடும்பக் கதைகளில் உணர்ச்சிகளைப் பொழிந்து தள்ளகிற எழுத்தாளர் லக்ஷ்மி சரித்திரக் கதைகூட எழுதியிருக்கிறாரா என்ன? என்று புருவங்களை உயர்த்துவீர்கள் தலைப்பைக் கேட்டதுமே. இந்த நாவல் அவரின் எழுத்துக்களில் மாறுபட்டதாக சரித்திர, சமூகக் கதையாகப் பரிமளித்திருக்கிறது. சுமார் நூறு வருடங்களுக்கு முன்பு நடந்த கதை என்கிற குறிப்புடன் 1956ல் இதை எழுதியிருக்கிறார் லக்ஷ்மி அவர்கள். இப்போதும் படிப்பதற்கு போரடிக்காத இந்தக் கதை இங்கே உங்களுக்கு கேப்ஸ்யூலாக! வீரத்தேவன் கோட்டை– லக்ஷ்மி – அந்த திரைப்படக் குழு காவிரிக் […]Read More
சோலை மலரொளியோ – உனதுசுந்தரப் புன்னகைதான் “பாத்து,பாத்து”- பதறினார் சாயி நாதன். “இந்தா, என்னத்துக்கு இப்படி பதறுதே. எம்புட்டு வருஷமா நான் இதை எல்லாம் இறக்கித் தாரேன். நீ பத்திரமா பிடிச்சு இறக்கு.அது போதும்.”- சுக்கான். “பொம்மை எல்லாம் என்னுதுடா” ஆங், சொல்லுவே. நான் அங்கங்கே போனப்பா, வசுமதியம்மா சொல்லி விட்டு வாங்கிட்டு வந்தது.இந்தா பாரு, இது மரப்பாச்சி, திருப்பதியில வாங்கினது.உன் புள்ளைக்கு ஆன வயசு இதுக்கு.” “சரிடா. ஆனா காசு என்னுது” “இது என்ன, உன்னுது, […]Read More
- பிரடரிக் எங்கெல்ஸ்
- பிரிட்டிஷ் ஆய்வாளர் அலெக்சாண்டர் கன்னிங்ஹாம் காலமான தினமின்று
- காந்தாரா 2 படத்தின் மிரட்டலான.. ஃபர்ஸ்ட் லுக்..!| நா.சதீஸ்குமார்
- ஆக்ஷனில் மாஸ் காட்டும் கல்யாணி பிரியதர்ஷன்..! | நா.சதீஸ்குமார்
- வெளியானது நயன் தாராவின் அன்னபூரணி ட்ரெய்லர்..! | நா.சதீஸ்குமார்
- திரைப்படத் துறையினர் “கலைஞர் நூற்றாண்டு விழா” தேதியை மாற்ற வேண்டும் என ஓபிஎஸ் வலியுறுத்தல்! | நா.சதீஸ்குமார்
- தமிழ்நாட்டில் கனமழைக்கு வாய்ப்பு – வங்கக்கடலில் உருவானது “மிக்ஜாம்” புயல்..! | நா.சதீஸ்குமார்
- செம்பரம்பாக்கம் ஏரியில் உபரி நீர் திறப்பு..! | நா.சதீஸ்குமார்
- வரலாற்றில் இன்று ( 28.11.2023 )
- இன்றைய ராசி பலன்கள் ( 28 நவம்பர் செவ்வாய்க்கிழமை 2023 )