தொடர்
எ.வீ.ரோ.உ.வீ.ஜ. | 9 | இந்துமதி
சித்ராவை மணலில் படுக்கவைக்க மனமில்லை, மதுவிற்கு. கெஸ்ட் ஹவுஸ் வரை தூக்கிக்கொண்டு போய்விடலாம் என்று தான் நினைத்தான். அவனது உடலை அழுத்திய பெண்மையின் சுகத்திலிருந்து விடுபட மனது மறுத்தது. இதுவரை அறிந்திராத அனுபவித்திராத சுகமாகப்பட்டது. ஷைலஜாவிடம் சின்னச் சின்னதாய் விஷமங்கள் செய்திருக்கிறான். கைகளால் விளையாடி இருக்கிறான். அதிக பட்சமாய் முத்தமிட்டிருக்கிறானே தவிர, இப்படி உடலோடு அழுத்தினதில்லை… தோளில் சரித்து ஒட்டிக் கொண்டதில்லை. காதருகில் உதடுகள் வருட, குரல் குழைந்து உருக, ‘ஐ லவ் யூ’ சொன்னதில்லை. இதில் […]
பத்துமலை பந்தம் | 28 | காலச்சக்கரம் நரசிம்மா
28. மலையுச்சியில் வௌவால் மேடு பத்துமலை முருகனை மனங்குளிரத் தரிசித்தாள் மயூரி. மனதின் ஒரு மூலையில் கலக்கம் தோன்றிக்கொண்டிருந்தது. உலகில் இப்போதைக்கு இவள் தனிமைப்பட்டு நிற்கிறாள். மூன்றாவது நவபாஷாணச் சிலையை தேடத் தொடங்கியிருக்கும், தனது குடும்பத்தாரின் செயலுக்கு ஆதரவு தர மறுத்ததால், அவர்களாலேயே குறி வைக்கப்பட்டு இருக்கிறாள். நவபாஷாணச் சிலைக்கு அபிஷேகம் செய்து அந்த நீரை உட்கொண்டால், உடலில் ஆரோக்கியம் நிலவும் என்பது பொதுப்படையாக அனைவருக்கும் சொல்லப்பட்ட அறிவுரை. ஆனால் நவபாஷாணச் சிலையின் மகத்துவம் அதோடு நிற்கவில்லை […]
தொட்டுவிட தொட்டுவிட தொடரும் | 1 | தனுஜா ஜெயராமன்
காலை நேரக் கதிரவன் மெதுவாக மேலெழும்ப போர்வையை விலக்க மனமில்லாமல் இழுத்து போர்த்தியபடி உறங்கி கொண்டிருந்தான் முகேஷ். அவன் மார்பில் உறங்கி கொண்டிருந்த குழந்தை தியாவை மேலும் இறுக்கி அணைத்தபடி மறுபடியும் உறங்க முயன்றான்.. அவனின் உறக்கம் பிடிக்காத டைம்பீஸ் அலறியது. அதன் அலறிய தலையில் ஓங்கி குட்டியவன் மறுபடியும் போர்வைக்குள் முடங்கினான். “அப்பாவும் மகளும் தூங்கியது போதுமா? எழுந்திருக்க மனசு வர்லையா அய்யாவுக்கு-” என கைகளை இடுப்பில் ஊன்றியவாறு முறைத்து கொண்டே சத்தமிட்டாள் சுதா.. போர்வைக்கு […]
அவ(ள்)தாரம் | 1 | தேவிபாலா
பாரதி, வாசுகி, மேகலா என்ற மூன்று சகோதரிகளின் கதை இது! நம் கதாநாயகி பாரதி, தப்பு நடந்தால் உடனே தட்டிக்கேட்பாள்! யாருக்கும் பயப்பட மாட்டாள். என்ன எதிர்ப்பு வந்தாலும் போராடி அதற்கொரு தீர்வு காணாமல் விட மாட்டாள். இதனால் நண்பர்களை விட பாரதிக்கு, எதிரிகள் அதிகம்! அப்பா சிதம்பரத்துக்கு பாரதியின் இந்த குணம் ரொம்ப பிடிக்கும்! அம்மா கௌசல்யா, இதற்காக பாரதியை பல முறை கண்டித்திருக்கிறாள். “ ஆயிரம் தான் ஆனாலும் நீ ஒரு பொண்ணு! அதை […]
பயணங்கள் தொடர்வதில்லை | 1 | சாய்ரேணு
டிக்கெட் [மின்கைத்தடி வாசகர்கள் அனைவருக்கும் அகமார்ந்த தீபாவளி நல்வாழ்த்துகள். இதோ நாம் ஒரு பயணம் புறப்படுகிறோம். கற்பனையெனும் இரயிலில் கதையெனும் தடங்களில் பயணிக்கப் போகிறோம். அந்தப் பயணத்தின் டிக்கெட் இந்த அத்தியாயம். அடுத்த அத்தியாயத்திலிருந்து பயணம் ஆரம்பிக்கிறது.] மூன்று ஆண்டுகளுக்கு முன்பு… “தடக் தடக் தடக் தடக் தடக்” என்ற லயம் கேட்டது. ஒலி கேட்டது ரேடியோவிலோ, எம்பி3 ப்ளேயரிலோ அல்ல, அனந்தபுரி எக்ஸ்ப்ரஸ் சென்னையை நோக்கி விரையும் வேகத்தின் தாளப் பிரமாணத்தைத் தண்டவாளத்தில் வாசிக்கும் ஒலி […]
எ.வீ.ரோ.உ.வீ.ஜ. | 8 | இந்துமதி
8 அந்தத் தனியார் விருந்தினர் மாளிகையின், மர நிழலில் காரை நிறுத்தினாள் சித்ரா. ‘அப்பாடா…’ என்று கீழே இறங்கினாள். ஒரு முறை கைகளை மடக்கி தலைக்கு நேராக உயர்த்தி குனிந்து பாதம் தொட்டாள். அதைப் பார்த்த மது மென்மையான குரலில் கேட்டான்.“அவ்வளவு தூரம் காரை ஓட்டிக்கிட்டு வந்தது கஷ்டமாக இருக்கு இல்ல… அதுக்குத்தான் நான் ஓட்றேன்னு சொன்னேன்…”அவனது அந்தக் கரிசனத்தைத் தாங்க முடியாத ஷைலஜா படபடத்தாள்,“அவதானே பிடிவாதம் பிடிச்சு ஓட்டிக்கிட்டு வந்தா. அப்போ பட வேண்டியது தான்.”சித்ரா […]
பத்துமலை பந்தம் | 27 | காலசச்சக்கரம் நரசிம்ம
27. குகன்மணி ஓர் அபாய மணி அண்டர்வேர்ல்ட் மன்னன் அமீர் அனுப்பிய ஆட்கள், அலட்சியமாக மலேசியன் மில்லினியம் ஹோட்டலினுள் நுழைந்தபோது, ஜெனரல் மேனேஜர் நூர் பாசில் அதிர்ந்து போனார். அவசரமாக தனது அறையில் இருந்து வெளியேறி ரிசப்ஷன் பக்கமாக சென்று, அங்கு பொறுப்பில் இருந்த பமீலாவிடம் கண்ணசைத்தார். “ஜாக்கிரதை..! ஆமீர் ஆட்கள் வர்றாங்க. எதுக்கு வர்றாங்கன்னு தெரியலை..! . நல்லபடியாகப் பேசி அனுப்பு. ஹொட்டலையே வெடிகுண்டு வைத்து தகர்க்கக் கூடியவங்க. பாரிஸ் வெடிகுண்டுகளே இவர்களின் கையில் இருக்கு..!” […]
அஷ்ட நாகன் – 11| பெண்ணாகடம் பா. பிரதாப்
-அமானுஷ்ய தொடர்- நாகங்களில் ‘ஆதிசேஷன்’ அதீத சக்தி வாய்ந்தவர்.நாக இனமானது, காஷ்யபர்-கத்ரு தம்பதிகள் மூலம் தோன்றியது என்று புராணங்கள் கூறுகின்றன. கத்ரு, தனக்கு அதிசக்தி வாய்ந்த ஆயிரம் நாகங்கள் வாரிசாக பிறக்க வேண்டும் என்று தன் கணவரான காஷ்யப முனிவரிடம் வரம் பெற்றாள்.காஷ்யப முனிவரும், தன் மனைவி கத்ரு கேட்ட வரத்தை அளித்தார்.காஷ்யப முனிவரின் வரத்தின்படி, கத்ருவிற்கு ஆயிரம் நாகங்கள் வாரிசுகளாக பிறந்தன.கத்ருவின் முதல் நாக வாரிசு ‘சேஷன்’ என்னும் நாகமாகும்.நாக இனத்தில் முதன் முதலாக ‘சேஷன்’ […]
பேய் ரெஸ்டாரெண்ட் – 16 | முகில் தினகரன்
கண்ணாடி வழியே கான்ஃப்ரன்ஸ் ஹாலுக்குள் அமர்ந்திருக்கும் சிவாவைப் பார்த்து அவனுடைய அண்ணன் கோவிந்தன் அரண்டு போய் பிதற்றினான். “சார்…சத்தியமாய் அவன் செத்துப் போயிட்டான் சார்…அவனைக் குழியில் போட்டுப் புதைச்சு…காரியங்களெல்லாம் செஞ்சவன் நான் சார்” “சரி…போகலாம்..”என்று சொல்லி அந்த கோவிந்தனை அங்கிருந்து நகர்த்திச் செல்ல அவர்கள் முயல, “சார்…ஒரு தடவை…ஒரே தடவை…நான் அவனைப் பார்த்துப் பேசிட்டு வர்றேன் சார்” கெஞ்சினான். “கோவிந்தன்!…மொதல்ல ஒண்ணு நல்லாப் புரிஞ்சுக்கங்க!…அங்க உட்கார்ந்திட்டிருக்கறது…உங்க தம்பி சிவா அல்ல!…உங்க பங்காளி சுடலை” என்றான் திருமுருகன். “என்னை […]
வாகினி – 25| மோ. ரவிந்தர்
சதாசிவம் வீட்டுக்குள் செல்லாமல் வெளியே இருந்த வேப்ப மரத்துக்கு அடியில் நின்றுக்கொண்டு கண்ணில் நீர் கசிய கஸ்தூரியை நினைத்து அழுது கொண்டிருந்தார். வீட்டு வாசலில் எரிந்துகொண்டிருந்த மஞ்சள் விளக்கின் வெளிச்சத்தில் சதாசிவத்தின் உருவம் நிழல் போல் தென்பட்டது. ‘கடவுளே! கணவன்-மனைவி வாழ்க்கை என்பது இறுதிக்காலம் வரையில் நம்பிக்கையுடன் இருக்க வேண்டிய ஒன்று. நான் மட்டும் உனக்கு என்ன தவறு செய்தேன்? நம்பிக்கை இல்லாத வாழ்க்கையைக் கொடுத்து இப்படித் தவிடு பொடியாக்கி சிரித்துக் கொண்டிருக்கிறாய். தொழிலிலும் சுகம் பெறவில்லை, […]