யுபி யோத்தாஸை வீழ்த்தி ‘தமிழ் தலைவாஸ்’ வெற்றி..!
புரோ கபடி லீக் போட்டியின் நேற்றைய ஆட்டத்தில் யுபி யோத்தாஸை வீழ்த்தி தமிழ் தலைவாஸ் அணி அபார வெற்றி பெற்றது. 11-வது புரோ கபடி லீக் போட்டி ஹைதராபாத்தில் கடந்த 18ம் தேதி தொடங்கியது. இதில் பங்கேற்றுள்ள 12 அணிகள் தங்களுக்குள் தலா 2 முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 6 இடங்களை பிடிக்கும் அணிகள் ‘பிளே-ஆப்’ சுற்றுக்கு தகுதி பெறும். லீக்கில் ‘டாப்-2’ இடங்களை வசப்படுத்தும் அணிகள் நேரடியாக அரையிறுதிக்குள் அடியெடுத்து வைக்கும். […]Read More